இயல்பான நிலையில் சேர்தல் என்றால் என்ன?

இயல்பான நிலையில் சேர்தல்

தீக்குச்சியை உரசும்பொழுது பற்றி எரிதல், இரும்பாலான பொருள்கள் செம்பழுப்பு நிறமாக மாறுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகளை நாம் நமது அன்றாட வாழ்வில் காண்கிறோம். இத்தகைய மாற்றங்கள் ஏன், எவ்வாறு நிகழ்கின்றன?

இத்தகைய மாற்றங்கள் வேதிப்பொருள்கள் அவற்றின் இயல்பான நிலைகளில் இருந்து ஒன்றுடன் ஒன்று வினைபுரியும்பொழுது நிகழ்கின்றன. வினைபடுபொருள்கள் அவற்றின் இயல்பான நிலைகளான திண்மம், திரவம் மற்றும் வாயு நிலைகளிலிருந்து வினைபுரிவதையே இயல்பான நிலையில் சேர்தல் என்கிறோம்.

காய்ந்த விறகுகள் நெருப்புடன் தொடர்பு கொள்ளும்போது காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் சேர்ந்து எரிந்து கார்பன் டைஆக்சைடை புகையாக வெளிவிடுகின்றன.

ஒரு தீக்குச்சியை தீப்பெட்டியின் பக்கவாட்டில் தேய்க்கும்பொழுது வேதிவினை நிகழ்ந்து வெப்பம், ஒளி மற்றும் புகை உருவாகிறது.

சுட்ட சுண்ணாம்பு (கால்சியம் ஆக்சைடு) நீருடன் தொடர்பு கொள்ளும்பொழுது நீற்றுச்சுண்ணாம்பு (கால்சியம் ஹைட்ராக்சைடு) உருவாகிறது.

வினைபடு பொருள்களின் கரைசல்

பாலை காஃபி வடிநீர் (டிகாக்சனுடன்) அல்லது காஃபித்தூளுடன் சேர்க்கும்பொழுது வேதிவினை இரண்டின் நிறமும் மாறுகிறது. இதுபோல இரு வினைபடுபொருள்களை கரைசல் காரணமாக நிலையில் எடுத்துக்கொள். சேர்க்கும்பொழுது வேதிவினை நடைபெற்று அவை புதிய விளைபொருள்களைத் ஒரு தோற்றுவிக்கின்றன. எடுத்துக்காட்டாக, சோதனைக்குழாயில் திண்ம நிலையிலுள்ள சில்வர் நைட்ரேட்டையும், சோடியம் குளோரைடையும் ஏதேனும் மாற்றத்தைக் காண்கிறாயா? இல்லை அல்லவா?

ஏனெனில், திண்ம நிலையில் வேதிவினை நடைபெறுவது இல்லை. இப்பொழுது இரு வினைபடு பொருள்களுடன் நீர்சேர்த்து கரைசல்களாக்கி அவற்றைக் கலந்துபார். என்ன காண்கிறாய்? சில்வர் நைட்ரேட் கரைசலை சோடியம் குளோரைடு கரைசலுடன் சேர்க்கும்பொழுது. வேதிவினை நிகழ்ந்து வெண்மையான சில்வர் குளோரைடு வீழ்படிவும்,சோடியம் நைட்ரேட் கரைசலும் கிடைக்கின்றன. மேற்கூறிய வினையிலிருந்து சில வேதிவினைகள் வினைபடு பொருள்கள் திண்ம நிலையில் இருக்கும்பொழுது நிகழாமல் கரைசல் நிலையில் இருக்கும்பொழுதே நிகழ்கின்றன என்பதை நாம் அறியலாம்.

இ.மின்சாரம்

நமது வாழ்க்கைக்கு மின்சாரம் மிகவும் இன்றியமையாதது. சமைத்தல், விளக்கை ஒளிரச் செய்தல், அரைத்தல், தொலைக்காட்சி பார்த்தல் போன்றவற்றிற்கு நாம் மின்சாரத்தைப் 3 பயன்படுத்துகிறோம். மின்சாரத்தை வேதி வினைகளை நிகழ்த்தவும் பயன்படுத்தலாம் என்பது உனக்குத் தெரியுமா? ஆம்! மின்சாரத்தின் மூலம் நடைபெறக்கூடிய ஒரு சில வேதிவினைகள் தொழிற்சாலைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.



 நீங்கள் ஏற்கனவே அறிந்ததுபோல, நீரானது ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகளால் ஆனது. சிறிதளவு சல்பியூரிக் அமிலம் சேர்த்த நீரில் மின்சாரத்தைப் பாய்ச்சும்பொழுது ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுக்கள் வெளிவருகின்றன. 

அதுபோல பிரைன்' எனப்படும் அடர் சோடியம் குளோரைடு கரைசல் வழியே மின்சாரத்தைச் செலுத்தும்பொழுது சோடியம் ஹைட்ராக்சைடுடன் சேர்ந்து குளோரின் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களும் வெளிவருகின்றன. பெருமளவு குளோரின் தயாரிக்க தொழிற்சாலைகளில் இம்முறை பயன்படுகிறது.

சில வேதிவினைகள் மின்சாரத்தைக் கொண்டு மட்டுமே நிகழும் என்பது மேற்கூறிய இரு வினைகளிலிருந்து புலனாகிறது. எனவே, இவ்வினைகள் மின்வேதி வினைகள் அல்லது மின்னாற்பகுத்தல் வினைகள் எனப்படுகின்றன.

தீக்குச்சி என்பது நெருப்பினை எளிதாக உருவாக்கி தரக்கூடிய சிறு குச்சிகள் ஆகும். தீக்குச்சியின் நெருப்பை உருவாக்கி தரக்கூடிய வேதிப்பொருள் தடவப்பட்டிருக்கும். இதனாலே தீக்குச்சினை ஒன்றை ஒன்று உரசும்போது எளிதில் நெருப்பு உருவாகிறது.

வேலை செய்யும் விதம்: 

தீக்குச்சி நுனியில் பாஸ்பரஸ் பொட்டாசியம் 

குளோரைட் கந்தகம் போன்ற வேதிப்பொருளை கொண்டு தீக்குச்சியின் நுனியானது உருவாக்கப்படுகிறது. 

மேற்கண்ட வேதிப்பொருள்கள் இருப்பதன் காரணமாக தீக்குச்சினை ஒன்றை ஒன்று உரசும் பொழுது வெப்பம் உருவாகி தீப்பற்றுகிறது.

உருவான விதம்: 

ஜான் வாக்கர் என்பவர் 1987 ஆம் ஆண்டு உரசும் பொழுது தீ உருவாகும் வகையில் தீக்குச்சிகளை உருவாக்கினார் 1830 ஆம் ஆண்டு வெள்ளை பாஸ்பரஸ் கொண்டு தீக்குச்சி உருவாக்கப்பட்டது. ஆனால் இது அதிக அளவு ஆபத்தாக இருந்ததால் இதனை கைவிட்டனர். இதனால் 1798 ஆம் ஆண்டு மறுபடியும் சிவப்பு பாஸ்பரஸ்களை கொண்டு தீக்குச்சினை உருவாக்கினார் இது மிகவும் பாதுகாப்பானதாக இருந்தது.

தீக்குச்சி என்பது பார்ப்பதற்கு சிறியதளவு இருந்தாலும் இதனை தவறாக பயன்படுத்தினால் பெரிய ஆபத்துகளை கூட உருவாக்கி தரக்கூடிய ஒரு வேதிப்பொருள் எனவே நீங்கள் இதனை உங்களுடைய தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நீங்கள் இதனை தவறாக பயன்படுத்தினால் இது உங்களுக்கே மிகவும் ஆபத்தாக முடியும். எனவே நீங்கள் தீக்குச்சிகளை சரியாக பயன்படுத்த வேண்டும்.

0 Comments