மூக்குத்திப்பூண்டின் சிறப்பும் மருத்துவ குணங்களும் | பருவதமலை விவசாயி

மூக்குத்தி பூண்டு என்பது பொதுவாக கிராமப்புற பகுதிகளில் அதிகளவு வளர்ந்து காணப்படக்கூடிய ஒரு மருத்துவ செடி ஆகும்.இந்த செடியானது சாலை விவரங்களில் மற்றும் வயல்வெளிகளில் மேலும் பல்வேறு வகையான தரிசு நிலங்களிலும் மேலும் கலைகளாகவும் இது அதிக அளவில் வளர்ந்து காணப்படுகின்றன. இந்த தாவரமானது ஒரு மூலிகை தாவரமாக விளங்கி வருகிறது. 

மேலும் இந்த தாவரம் ஒரு சிறிய தாவரமாக இதனுடைய வளர்ச்சி இருக்கிறது. மேலும் இதனுடைய தோற்றமானது ஒரு சிறிய தண்டு பகுதியுடன் கூடிய பூவின் நடுவில் உள்ள சிறிய மொட்டு போன்ற மஞ்சள் நிறத்தில் கூடிய மலரும் அதனை சுற்றி சின்ன சின்ன வெள்ளை நிறத்துடன் கூடிய பூவின் இதழ்களும் காணப்படுகின்றன. இதனுடைய இலைகள் ஆனது மிகவும் அழகாக இந்த தண்டுப் பகுதியை சுற்றி காணப்படுகின்றன. இந்த தாவரத்தில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. 

இந்த தாவரத்தின் கிராமப் பகுதியில் உள்ள மக்கள் பொதுவாக மூக்குத்தி பூண்டு ,தாத்தா பூ செடி, கிணற்று பாசான், ஊசி பூண்டு, அருவமனைப் பூண்டு, முருகன் பச்சிலை, செருப்படித்தலை, காய பச்சிலை என பெயர்களை கிராமப் பகுதியில் உள்ள மக்கள் இதனை அழைக்கின்றனர். இந்த மூக்குத்தி பூச்செடியில் அதிக அளவு மருத்துவ குணங்கள் இருக்கின்றன. 

மூக்குத்திப் பூச்செடியின் மருத்துவ குணங்கள்: 

இந்த மூக்குத்தி பூ செடியில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

காயங்களுக்கு மருந்தாக:

உங்களுக்கு ஏதாவது பல நாட்களாக அடிபட்டு ஆறாத காயங்கள் ஏதாவது இருந்தால் நீங்கள் அந்த இடத்தில் மூக்குத்தி பூச்செடியின் இலைகளை பறித்துக் கொள்ள வேண்டும். அந்த இலைகளை பறித்துக் கொண்டு கையின் மூலமாகவோ அல்லது ஏதாவது பொருளின் மூலமாகவோ அந்த தலையினை நன்றாக நசுக்கி கொள்ள வேண்டும். 

பிறகு அந்த தரையில் உள்ள சாரை நீங்கள் நன்றாக அடிபட்ட காயத்தில் அந்த சாரினை விட வேண்டும். சாரி என்னை விட்டு பிறகு ஒரு சில நாட்களிலேயே அந்த காயமானது முழுவதுமாக குணமடைந்து விடும். எனவே நீங்கள் இந்த தாவரத்தின் இலைகளை பயன்படுத்தி உங்களுடைய காயங்களை இயற்கை முறையில் குணப்படுத்தலாம். 

வெட்டு காயம்:

உங்களுக்கு ஏதாவது தவறுதலாக பொருளின் மீது உங்களுக்கு ஏதாவது உடலில் வெட்டு காயங்கள் ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக அதிகளவில் ரத்தம் வரும் அதனால் நீங்கள் இந்த மூக்குத்தி பூ செடியின் இலையினை பறித்து அதனை நன்றாக நசுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு வெட்டு காயம் பட்ட இடத்தில் நீங்கள் அந்த இலையின் சாரினை நன்றாக விட்டு இலையுடன் சேர்த்து அந்த காயத்தின் மேல் நன்றாக சிறிது நேரம் அடிபட்ட இடத்தில் அழுத்திப் பிடிக்க வேண்டும். பிறகு சிறிது நேரத்திலேயே உங்களுடைய உடலில் இருந்து வரும் ரத்தமானது நின்றுவிடும். மேலும் அந்த காயமும் சில நாட்களிலேயே மாறிவிடுகின்றனர். உங்களுக்கு இந்த தாவரத்தின் நிலையானது கிராமப்புற பகுதிகளில் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. 

மூட்டு வலி: 

உங்களுக்கு அதிக அளவில் வேலை செய்துவிட்டு மூட்டு வலிகள் ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக இந்த தாவரத்தில் உள்ள பூ தண்டு பகுதி மற்றும் இதனுடைய வேர்ப்பகுதியை எடுத்துக் கொண்டு அதனை சரியான முறையில் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் இதனை நீங்கள் ஒரு பாத்திரத்தில் போட்டு நல்லெண்ணையில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு கொதிக்க வைத்த சாரினை எடுத்து உங்களுடைய உடலில் எந்த இடத்தில் மூட்டுகள் வலிக்கிறதோ அந்த இடத்தில் நீங்கள் அதனை வைத்து நன்றாக கட்ட வேண்டும். பிறகு சிறிது நேரத்தில் உங்களுடைய வெளியானது நிவாரணம் அடைகிறது. இது ஒரு சிறந்த இயற்கை மருந்தாக அதிகளவில் மக்களுக்கு பயன்பட்டு வருகிறது. மேலும் இந்த தாவரத்தில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. 

சொறி மற்றும் தேம்பல்: 

உடலில் ஏதாவது சொறி சிரங்கு அல்லது தேம்பல் கொன்று உங்களுடைய உடலில் உள்ள தோலில் ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக இந்த இலையின் சாரினை எடுத்து உங்களின் உடல் பகுதியில் எந்த இடத்தில் சிரங்கு இருக்கிறதோ அந்த இடத்தில் நீங்கள் அந்த சாரினை நன்றாக தேய்த்துக் கொள்ள வேண்டும். பிறகு உங்களது உடலில் இது சொரிசிறங்கை குணப்படுத்துகிறது. மேலும் இந்த தாவரத்தில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் இருந்து வருகின்றன. 

கிராமப்புற பகுதிகளில் உள்ள மக்கள் அதிக அளவில் இந்த தாவரத்தினை பயன்படுத்தி உடலில் உள்ள காயங்களை குணப்படுத்தி வருகின்றனர். நகர்புற பகுதியில் உள்ள மக்கள் இதனைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். நகர்ப்புற பகுதிகளில் உள்ள மக்கள் உங்களுடைய கிராம பகுதியில் வந்தால் இந்த தாவரத்தினை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள் உங்களுக்கு இது ஒரு சிறப்பான மூலிகை செடியான அறிவீர்கள். இந்த தாவரமானது பரவலாக கிராமப்புற பகுதிகளில் காணப்பட்டு வருகிறது. 

மேலும் இந்த தாவரத்தினை பல்வேறு வகையான நாடுகளில் உணவுப் பொருட்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். நீங்கள் இந்த தாவரத்தினை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் இந்த தாவரமானது விஷத்தன்மையும் சிறிதளவு கொண்டது. எனவே நீங்கள் இந்த தாவரத்தினை உணவு பொருளாக பயன்படுத்தும் போது அதனைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் மருத்துவ ஆலோசனை செய்துவிட்டு நீங்கள் அதனை உணவு பொருட்களில் பயன்படுத்தலாம். எனவே இந்த தாவரத்தின் மூலிகைத்தன்மையை நீங்கள் தவறாக பயன்படுத்த வேண்டாம்.

இந்த மூக்குத்தி பூண்டு செடி ஆனது பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் இதில் உள்ள மருத்துவ குணம் அதிக அளவில் இருக்கிறது. கிராமப் பகுதியில் உள்ள மக்கள் இந்த செடியினை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். பெரும்பாலான மக்களுக்கு இந்த தாவரத்தின் மருத்துவ குணத்தை பற்றி தெரியாமல் இதனை மிகவும் சாதாரண தாவரம் என்று நினைத்திருக்கிறார்கள். எனவே இந்த தாவரத்தின் சிறப்பு மற்றும் மருத்துவ குணத்தை பற்றி நன்கு அறிந்து கொண்டு இதனை சரியாக பயன்படுத்த வேண்டும்.

0 Comments