இலந்தை பழத்தின் முக்கியத்துவமும் மருத்துவ குணங்களும் | The importance and medicinal properties of soorai fruit

சூரி பழம்‌ என்பது இலந்தை வகை பழமாகும்‌! இது மிகவும்‌ சுவை வாய்ந்தது மற்றும்‌ மார்கழி மாதத்தில்‌ அறுவடை செய்யப்படுகிறது. 

எங்கள் கிராமப்புறங்களில் இலங்கை பழம் என்று தன் மக்கள் அழைக்கிறார்கள். உங்கள் பகுதிகளில் இந்த பழத்தை என்ன பெயர் கொண்டு அழைப்பார்கள் என்று நமது கருத்துப் பக்கததில் தெரிவிக்கவும்.

இலந்தைப் பழம்

இலந்தை பழத்தைப் பற்றிய மேலும்‌ விவரங்கள்‌: 

மரம்‌:  இலந்தை மரத்தின்‌ ஒரு வகை.
சுவை:  மிகவும் சுவை வாய்ந்தது.
அறுவடை காலம்:  மார்கழி மாதம்( அதிகபட்சம் ஒரு மாதம்)
பயன்கள்:   இலந்தை பழம்‌   உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும்‌. இது ஒரு சிறந்த இனிப்பு பழமாகும்‌. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

மற்ற பெயர்கள்‌:  உங்கள்‌ பகுதியில்‌ இதன்‌ பெயர்‌ “சூரி பழம்‌” என்று அழைக்கப்படலாம்‌. 

வகை: இலந்தை(fruit) வகையைச் சார்ந்தது.
பழத்தின் நிறம்:  அடர் கருப்பு நிறம்.



குளிர்காலங்களில் மட்டுமே கிடைக்கக் கூடியவை பறவைகள் விரும்பி சாப்பிடக்கூடியவை மேற்கு தொடர்ச்சி மலையில் கிடைக்கக்கூடியவை புளிப்பு சுவை உடையவை அடுத்த தலைமுறைக்கு இது போன்ற மரங்களை நாம் கொண்டு செல்வோம் இதுபோன்ற மரங்களை பாதுகாப்போம்.

 இந்த சூரை பயத்தின் மரத்தில் முட்கள் அதிகம் நிறைந்து காணப்படும் எனவே பயத்தை மிகவும் கவனமாக பறிக்க வேண்டும் இந்த மரத்தின் கிளையானது மிகவும் சிறியதாக இருக்கும் மரத்தின் இலை மிகவும் லேசானதாக இருக்கும்.


இலந்தை பழம் (Jujube fruit) என்பது இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் கூடிய ஒரு சுவையான மற்றும் சத்தான பழமாகும். இது பொதுவாக நாட்டு இலந்தை, காட்டு இலந்தை, மற்றும் சீமை இலந்தை என பல வகைகளில் காணப்படுகிறது. இதன் இலைகள், பழங்கள், பட்டை மற்றும் வேர் என அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை.


இலந்தை பழத்தின் பயன்கள்

இலந்தை பழத்தில் வைட்டமின் C, வைட்டமின் A, வைட்டமின் B3, B6, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள ஃபிளவனாய்டுகள், பீமால், சப்போனின் போன்ற சத்துக்கள் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன.


இலந்தை பழத்தின்  மருத்துவ குணங்கள் :

  1. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல்: இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
  2. செரிமானத்திற்கு நல்லது: நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.
  3. நோய் எதிர்ப்பு சக்தி: வைட்டமின் C நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  4. எலும்பு மற்றும் பல் உறுதி: இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் எலும்புகளையும் பற்களையும் வலுப்படுத்தும்.
  5. இரத்த சோகையைத் தடுத்தல்: இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரித்து இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
  6. நினைவாற்றல் மேம்பாடு: நினைவாற்றலை அதிகரிக்கும் திறன் இலந்தை பழத்திற்கு உண்டு.
  7. தூக்கமின்மைக்கு தீர்வு: இலந்தை பழம் சாப்பிடுவது ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும்.
  8. சரும ஆரோக்கியம்: முகத்தில் சுருக்கங்கள் வராமல் இளமையான தோற்றத்தைத் தர உதவும்.
  9. உடல் சூட்டைக் குறைக்கும்: உடல் உஷ்ணத்தை குறைத்து, நீர்ச்சத்து இழப்பை சரிசெய்யும்.
  10. பெண்களுக்குப் பயன்: பைட்டோ ஈஸ்ட்ரோஜன் இருப்பதால் ஹார்மோன் சமநிலையைப் பராமரிக்க உதவுகிறது, குறிப்பாக மாதவிடாய் காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்.
  11. ஆன்டிஆக்ஸிடன்ட்கள்: இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல் சேதத்தைத் தாமதப்படுத்தி, நோய்களில் இருந்து பாதுகாக்க உதவும்.

இலந்தைப் பழச் சாகுபடி :


இலந்தை பயிரிட இருமண் பாட்டு செம்மண் நிலங்கள் மிகவும் உகந்தவை. உவர் நிலங்கள் மற்றும் வறட்சிப் பகுதிகளிலும் இதை பயிரிடலாம்.

  1. இரகங்கள்: பனாரசி, உம்ரான், கோலா, கைத்தளி, கோமா கீர்த்தி, காஷ்மீர் ஆப்பிள் பெர், KG ஆப்பிள் பெர், மிஸ் இந்தியா பெர் போன்றவை பிரபலமான ரகங்கள்.
  2.  பயிர் பெருக்கம்: மொட்டுக் கட்டப்பட்ட செடிகள் மூலம் இனப்பெருக்கம் செய்வது சிறந்தது.
  3. நடவு முறை: 8 மீட்டர் இடைவெளியில் குழிகள் தோண்டி, நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் மேல் மண் கொண்டு நிரப்பி நடவு செய்ய வேண்டும்.
  4.  நீர் நிர்வாகம்: இளம் செடிகளுக்கு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். காய்க்கத் தொடங்கிய மரங்களுக்கு நீர் தேவை குறைவு, ஆனால் காய்ப்பிடிப்பு நேரத்தில் நீர் பாய்ச்சினால் நல்ல மகசூல் கிடைக்கும்.
  5.  உரமிடுதல்: மரத்தின் வயதுக்கு ஏற்ப தொழு உரம் மற்றும் தேவையான இரசாயன உரங்களை இட வேண்டும்.
  6.  கவாத்து செய்தல்: பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நோய்வாய்ப்பட்ட, நலிந்து போன கிளைகளை வெட்டிவிட வேண்டும்.
  7. இலந்தை பழம் எங்கே கிடைக்கும்?
  8. இலந்தை பழம் பொதுவாக குளிர்காலத்தின் பிற்பகுதியிலும், வசந்த காலத்தின் தொடக்கத்திலும் (சுமார் ஜனவரி முதல் மார்ச் வரை) சீசனில் கிடைக்கும். குறிப்பாக நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இலந்தை மரங்கள் அதிகம் உள்ளதால், அப்பகுதிகளில் பரவலாகக் கிடைக்கும். உள்ளூர் சந்தைகள், பழக் கடைகள் மற்றும் சில ஆன்லைன் விற்பனை நிலையங்களிலும் இதை வாங்கலாம்.

இலங்கை பழம் சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்: 

இலந்தை பழம் பல நன்மைகளைத் தந்தாலும், சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்:
  1. அதிகமாக உண்ணும் போது இரத்த சர்க்கரை அளவில் மாறுபாடு ஏற்படலாம், எனவே அளவோடு உண்ண வேண்டும்.
  2. கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு உண்ண வேண்டும்.
  3. வெறும் வயிற்றில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும், பழம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
  4. இலந்தை பழம் ஒரு சத்தான மற்றும் ஆரோக்கியமான பழமாகும். உங்கள் உணவுப் பழக்கத்தில் இதைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் பல நன்மைகளை பெறலாம்.

இலந்தை பழத்தை சாப்பிடும் முறை:  


சுரைப்பயத்தை மிகவும் அடர் சிகப்பு நிறமாக இருக்கும்  பழங்களை பறிக்க வேண்டும். பறித்த பிறகு சேமித்த பழங்களை சாப்பிட்டு விட்டு அதன் கொட்டைகளை கீழே துப்பி விட வேண்டும்.


சூரைப் பழம் 

இந்த சூரை பழத்தின் காயானது லேசான சிகப்பு நிறத்தில் காணப்படும். பழமானது அடர் சிகப்பு நிறத்தில் காணப்படும். காயானது மிகவும் துவர்ப்பாக இருக்கும்; பழமானது மிகவும் இனிப்பாகவும் அதிக சுவையுடையதாகவும் இருக்கும்.

இலந்தை மரங்கள் அடர்ந்து உயரமாக வளரக்கூடியது. ஆனால் இந்த மரத்தில் ஏறுவது மிகவும் கடினம் ஏனென்றால் முட்கள் அதிகமாக இருக்கும். ஏறுபவர்கள் கை, கால் அனைத்தையும் கிழித்து விடுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது அதனால் மக்கள் இலந்தை மரத்தில் ஏறுவதற்கு தயங்குவார்கள். ஒரு சில பேர் மட்டும்தான் பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறி கிளையை உலுக்குவார்கள். 

இலங்கை பழங்கள் பச்சை நிறத்தில் காயாக இருக்கும் பழுத்தால் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் அப்படியே மெல்ல செஞ்சிவப்பு நிறத்தில் மாறிவிடும். பழத்தின் உள்ளே வழவழவென்று வெள்ளை நிறத்தில் மாவு போன்று இருக்கும் அதன் உள்ளே கொட்டை ஒன்று இருக்கும். கொட்டையுடன் சேர்த்து அந்த பழத்தை சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும்; ஏனென்றால் இலந்தை பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் இருக்கும்.

0 Comments