கரும்பின் சிறப்பும் அதன் மருத்துவ குணங்களும்

கரும்பானது தமிழ்நாட்டில் அதிக அளவு உற்பத்தி செய்யக்கூடிய ஒரு பயிராக இருக்கிறது. மேலும் இந்தக் கரும்பை வைத்து பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த கருமானது மெத வெப்பமண்டல பகுதிகள் மற்றும் துணை நிர்வாகம் என்ற பகுதிகளில் அதிக அளவு வளர்ந்து காணப்படுகிறது. 

இந்தக் கரும்பு பயிரானது சர்க்கரை உற்பத்திக்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த கரும்பானது தமிழ் பண்டிகையான தைப்பொங்கல் அன்று அனைவரும் வீட்டிற்கு முன்பு மற்றும் இந்த தைத்திருநாளில் இந்த கரும்பினை பயன்படுத்துகிறார்கள். 

கரும்பு பயிர் ஆனது அதிக அளவு வடிகால் நிறைந்த மற்றும் வண்டல் நிறைந்த மண் பகுதிகளில் அதிக அளவு வளர்ந்து காணப்படுகின்றது. கிராம பகுதியில் உள்ள மக்கள் இந்த கரும்பினை அதிகப்படியாக விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த கரும்பு பயிறானது தமிழ்நாட்டில் பெரும்பாலும் கிராமப்புற பகுதிகளில் அதிக அளவு பயிர் செய்து வரப்படுகிறது. 

கரும்பிலிருந்து தயாரிக்க கூடிய பொருட்கள்: 

  • இந்த கரும்பை நாம் எடுத்து அதனை வெல்லம் தயாரிப்பதற்கு பயன்படுகிறது. 
  • மேலும் இந்த கரும்பு சாரானது நேரடியாக குடிப்பதற்கு குடிபானமாக பயன்படுகிறது. 
  • கரும்பின் சாரை வைத்து சர்க்கரை தயாரிப்பதற்கு பயன்படுகிறது. சர்க்கரை என்ற சொல்லானது சர்க்கரா என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்து உருவானதாகும்.
  • கரும்பின் உடைய இலைகள் ஆனது மாடுகளுக்கு மற்றும் சில உயிரினங்களுக்கு உணவு பொருட்களாக பயன்படுகிறது. 
  • இதனை கால்நடைகள் விரும்பி சாப்பிடுகின்றன. மேலும் இந்த கரும்பு எத்தனால் என்று எரிபொருள் தயாரிப்பதற்கு பயன்படுகிறது.

கரும்பின் தோற்றம்: 

கரும்பு பயிரனது பசுபிக் தீவுகள் மற்றும் சீனா இந்தியா போன்ற நாடுகளில் இருந்து உருவானது.இந்தக் கரும்பு பயிரின் வடிவம் பார்ப்பதற்கு மிகவும் குச்சி போன்ற வடிவத்தினை உடையது. இதனுடைய தண்டுப் பகுதி எனது நாம் சாப்பிடக்கூடிய உணவு பொருளாக இருக்கிறது. 

இதன் தண்டானது அதன் அடர்த்தியான தோள்களின் நடுவில் கரும்புவின் சாரானது இருக்கிறது. மேலும் கரும்பு பயானது பல்வேறு ரகங்கள் இருக்கின்றன. இந்த கரும்பினுடைய இலைகளானது மிகவும் சிறியதாக அதிக அளவு நீளம் உடையதாக காணப்படுகின்றன. 

நீங்கள் இந்த கரும்பினை அப்படியே உடைத்து அதன் அடர்த்தியான தோள்களை உரித்து விட்டு நீங்கள் அதனை மென்று அதனுடைய சாரினை எடுத்துக்கொண்டு அதனுடைய சக்கையினை சாப்பிடக்கூடாது.

வெல்லம் தயாரிக்கும் முறை:

  • கரும்பு பயிர்களை அதன் தண்டு பகுதிகளை வெட்டி அதனை வெள்ளம் தயாரிக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். பிறகு வெள்ளம் தயாரிக்கும் இயந்திரத்தில் கரும்பினை அதனுடைய சாறுகள் வடிகட்டி பெரிய அளவு உள்ள பாத்திரத்தில் அதன் சாறுகள் வடிகட்டி வரப்படுகின்றன. 
  • அதனுடைய சக்கைகளை அப்படியே இயந்திரமானது மற்றொரு பகுதியில் வெளிய அனுப்புகிறது. இந்த பாத்திரத்தில் உள்ள கரும்பு சாரானது கிராமப்புற பகுதிகளில் ஆலபால் என அழைக்கப்படுகிறது. இந்த கரும்பு சாரினை நீங்கள் பெரிய அளவு உள்ள பாத்திரத்தில் நன்றாக அந்த சாரினை நெருப்பைக் கொண்டு காய்ச்ச வேண்டும். 
  • பிறகு அந்த கரும்பு சாரானது பதப்படுத்தப்பட்டு வருகிறது. பிறகு நீங்கள் அதில் ஒரு சில தேவையான பொருட்களை போட வேண்டும். அதன் பிறகு நீங்கள் அதனை ஒரு பெரிய இடத்தில் அதனை சரியான பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். பிறகு நீங்கள் அதனை ஒரு வெள்ளம் வடிவம் போன்ற உள்ள பாத்திரத்தில் ஊற்றி ஒரு துணி கொண்டு அதனை அப்படியே சுற்றி வைக்க வேண்டும்.

கரும்பு வளர்ப்பு முறைகள்: 

நிலத்தை தயார் செய்தல்:

  • உங்களுடைய நிலத்தை நீங்கள் 30 சென்டிமீட்டர் வரை சரியாக உழவு செய்ய வேண்டும்.
  •  மேலும் இரண்டு முறை அல்லது மூன்று முறை மண் சீராக சமநிலை அடையும் முறை உழ வேண்டும். 
  • மண்ணில் பார்கள் அமைத்து அதனை சரியான முறையில் கரும்பு நடுவதற்கு தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். 
  • பார்ப்பதற்கு நீளமானது மிகவும் சீரான நிலையில் இருக்க வேண்டும். 

விதை நேர்த்தி: 

  • ஆறு மாதம் அல்லது நோய்கள் இல்லாத கரணைகளுடைய கரும்புகளை தேர்வு செய்ய வேண்டும். 
  • பிறகு அதனை தேவையான அளவு வெட்டிக்கொண்டு தேவையில்லாததை தனியாக வைக்க வேண்டும். 
  • சரியான உரங்களை பயன்படுத்தி நீரில் சிறிது நேரம் நன்கு ஊற வைத்து கொள்ள வேண்டும். 

நடவு முறை: 

  • தயார் செய்த நேரத்தில் நீங்கள் தேர்வு செய்த விதைகளை சரியான முறையில் கரணைகளுடைய பகுதிகளை பார்த்து சரியாக மண்ணில் நட வேண்டும். 
  • இந்த கரும்புகளை பல்வேறு வகைகளில் நடலாம் உங்களுடைய நிலத்தை பொறுத்து நீங்கள் இந்த கருமையை சரியான முறையில் நட வேண்டும். 

தேவையான உரங்கள்: 

  • கரும்பு பயிருக்கு நீங்கள் அதிக அளவு இயற்கை உரமான தொழு உரங்களை பயன்படுத்த வேண்டும். 
  • கரும்பின் வேர் வளர்வதற்கு நன்கு மக்கிய குப்பை உரத்தை பயன்படுத்த வேண்டும்.
  • மேலும் பசுமை வரும் மற்றும் பஞ்சகாவியம் பயன்படுத்தி நீங்கள் பாதுகாப்பாக வளர்க்கலாம்.

நீர் பாசனம்: 

வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் நீர் பாய்ச்சுவது அவசியமான ஒன்றாக இருக்கிறது. வெயில் காலங்களில் நீங்கள் தேவையான அளவு பயிர் காய விடாமல் நீர் பாய்ச்ச வேண்டும். மழைக்காலங்களில் குறைந்த அளவு நீர் பாய்ச்ச வேண்டும்.

0 Comments