பாதாம் மரமானது அதிக அளவு மருத்துவ குணங்களை கொண்ட ஒரு மரமாக விளங்கி வருகிறது. இந்த பாதாம் மரமானது பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும். பாதம் மரத்தில் உள்ள பக்க கிளைகளானது மிகவும் பார்ப்பதற்கு வழுவழுப்பானதாக இருக்கும். இந்த பாதாம் மரம் ஆனது பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை நமது உடலுக்கு வழங்கக்கூடிய தன்மை கொண்டது. இந்த பாதாம் உணவுப் பொருட்களின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
நமது இந்தியாவில் பாதாம் ஆனது ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற பகுதிகளில் பாதாம் மரம் ஆனது அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. மேலும் பாதாம் மரம் ஆனது நமது உடலுக்கு பல்வேறு வகையான சத்துக்களை அளிக்கக்கூடிய ஒன்றாக விளங்கி வருகிறது. மேலும் இந்த பாதாம் மருத்துவத்தில் மற்றும் வணிகத்திலும் பல்வேறு வகையான பயன்பாடுகளைக் கொண்டு ஒரு முக்கிய மரமாக இருந்து வருகிறது.
பாதாமில் உள்ள உடல்நல நன்மைகள்:
- இந்த பாதாமில் அதிக அளவு புரதங்கள் வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் போன்றவைகள் அதிக அளவு இருப்பதால் நமது உடலுக்கு பல்வேறு வகையான வலிமையை அளிக்கிறது.
- இந்த பாதாமை இதய நோய் உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் கொழுப்புகளை குறைக்க நினைப்பவர்கள் அனைவரும் இந்த பாதாமினை உடலுக்கு எடுத்துக் கொள்ளலாம்.
- மேலும் இதில் புற்று நய் எதிர்ப்பு மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் உணவு பொருளாக இருந்து வருகிறது.
- இந்த பாதாம் சாப்பிடுவதன் மூலம் தோல் மற்றும் முடி ஆரோக்கியமானது அதிகளவில் மேம்படுகிறது.
- பாதாம் ஆனது மருத்துவத்தில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இதில் அதிக அளவு பசியை தூண்டும் தன்மையைக் கொண்டது. மேலும் மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.
முக்கிய குறிப்புகள்:
- நாம் இதை அதிக அளவு உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் நமக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது மேலும் அலர்ஜியும் ஏற்படுகிறது.
- இதை அதிக அளவு சாப்பிடுவதன் மூலமாக மயக்கம் வாந்தி போன்ற விளைவுகள் கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
- பாத மீனை சாப்பிடுவதற்கு முன்பு கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று இருக்கிறது எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும்.
பாதாம் மரம் எப்படி வளர்ப்பது?
இந்த பாதம் மரத்தினை நீங்கள் எளிய முறையில் வீட்டிலும் வளர்க்கலாம் தோட்டத்திலும் வளர்க்கலாம். இந்த பாதாம் மரம் வளர்ப்பது சுவையானதும் சத்தானதும் பொறுமை தேவைப்படும் ஒரு வேலையாகும்.
விதை தேர்வு செய்யும் முறை:
- நீங்கள் நல்ல தரமான பாதாம் பருப்புகளை முதலில் தேர்ந்தெடுக்கவும்.
- தேர்ந்தெடுத்த மாதம் விதைகளை நீங்கள் ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் நன்றாக ஊற வைக்க வேண்டும்.
- அதன் பிறகு ஈரப்பதம் உள்ள ஒரு காகிதத்தில் அதனை போர்த்தி குளிர்சாதன பெட்டியில் 10 டிகிரி செல்சியஸ் வைக்க வேண்டும்.
- அந்த பாதாம் விதைகளானது சிறிதளவு முளைக்கும் வரை நீங்கள் 10 முதல் 15 நாட்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
- வாதம் விதைகள் ஆனது சிறிதளவு முளைத்தவுடன் நடுவதற்கு தயார் நிலையில் இருக்கிறது.
நடவு செய்யும் முறை:
- நீங்கள் நல்ல மண்புழு உரம் மற்றும் மாட்டுச்சாணம் கலந்த நல்ல களிமண்ணை தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு மிகவும் சிறந்ததாக இருக்கும்.
- நீங்கள் இந்த பாதாம் விதைகளை நவம்பர் மாதத்திற்கு முன்பாக நடவு செய்தால் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
- நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இந்த பாதம் விதைகளை அந்த மண்ணில் சரியான முறையில் நட்டு வைக்க வேண்டும்.
- மண்ணில் நட்டு வைத்த பிறகு நீங்கள் அதனை சரியான முறையில் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
- முக்கியமாக அதிக அளவு நீர் தாங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் வெயில் காலங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாசனம் சரியான முறையில் செய்ய வேண்டும்.
- மேலும் விதைகளை தெரிய உள்ள களைகளை சரியான முறையில் நீங்கள் எடுக்க வேண்டும்.
வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு:
- நீங்கள் பாதாமரத்தினை மிதமான வெப்பம் மற்றும் சூரிய ஒளி படும் இடத்தில் நீங்கள் அதனை நட்டு வைக்க வேண்டும்.
- நீங்கள் பாதம் மரங்களுக்கு சத்தான இயற்கை உரங்களை போடுவதன் மூலமாக இந்த மரங்களுக்கு உள்ள சத்து குறைபாடுகளை நீங்கள் சரி செய்யலாம்.
- இந்த பாதாம் மரம் ஆனது பயம் தருவதற்கு சுமார் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் தேவைப்படுகின்றன.
மரத்தின் சிறப்புகள்:
- இந்த மரமானது மிகவும் அழகானதாக காணப்படுகின்றன.
- மேலும் இந்த மனமானது குடை போல் மிகவும் அழகாக வளர்ந்து வருகின்றன.
- இது சுமார் 35 மீட்டர் வரை வளரக்கூடிய மரமாக இருக்கிறது. இதனுடைய கிளைகள் மற்றும் இலைகள் மிகவும் படர்ந்து அழகானதாக காணப்படுகின்றன.
- நீங்கள் இதனை சரியான முறையில் அறுவடை செய்து நீங்கள் பாதம் பருப்பினை எடுத்து பல்வேறு வகைகளில் இதனை பயன்படுத்தி வரலாம்.
பாதாமில் செய்யக்கூடிய சில உணவு வகைகள்:
பாதாம் அல்வா:
இதனை நீங்கள் பாதாம் விதைகள் மற்றும் நெய்,சர்க்கரை,ஏலக்காய் போன்றவைகளை சேர்த்து நீங்கள் சுவையான பாதாம் அல்வாவை தயாரிக்கலாம்.
பாதாம் பூரி:
பாதாம் மாவு,மைதா,நெய் மற்றும் எண்ணெய் இதனை சேர்த்து நீங்கள் பாதம் பூரி தயார் செய்யலாம்.
பாதாம் கேக்:
பாதாம்மாவு,கோதுமை மாவு,மற்றும் வெண்ணெய் போன்றவைகளை சேர்த்து நீங்கள் பாதம அல்லது பாதாம் பிஸ்கட்களை தயாரிக்கலாம்.
பாதாம் பாயாசம்:
பாதாம் விதைகள்,பால்,சர்க்கரை போன்றவைகளை சேர்த்து நீங்கள் பாயாசம் தயாரித்து சுவையாக சாப்பிடலாம்.
பாதாம் சட்னி:
பாதாம் பருப்பு மற்றும் பச்சை மிளகாய்,பூண்டு,தேங்காய் போன்றவைகளை சேர்த்து நீங்கள் சுவையான பாதாம் சட்னியை தயாரிக்கலாம்.
பாதாம் லட்டு:
பாதாம் மாவு,தேன் மற்றும் நெய் போன்றவர்களை சேர்த்து நீங்கள் பாதம் லட்டு தயாரிக்கலாம்.
பாதாம் சாலட்:
வெட்டிய பாதங்கள் மற்றும் பழங்கள்,தேன் தயிர் போன்றவைகளை சேர்த்து நீங்கள் பாதாம் சாலட் தயாரிக்கலாம்.
தண்ணீர் பானங்கள்:
பாதாம் பால்:
பாதாம் விதைகள் மற்றும் பால்,ஏலக்காய் போன்றவர்களை சேர்த்து நீங்கள் பாதம் தயாரித்து நீங்கள் சுவையாக சாப்பிடலாம். இது உடலுக்கு அதிக அளவு வலிமையை தரக்கூடிய ஒன்றாக விளங்கி வருகிறது.
பாதாம் ஸ்மூதி:
பாதாம் விதைகள்,வாழைப்பழங்கள்,தயிர் மற்றும் தேன் போன்றவற்றை சேர்த்து இதை தயாரிக்கலாம்.
மேலும் இந்த பாதாமில் பல்வேறு வகையான உணவுப் பொருட்களை தயாரித்து சாப்பிடலாம். இது உடலுக்கு அதிக அளவில் ஊட்டச்சத்துகளை தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. எனவே நீங்கள் உங்கள் உணவில் பாதமினை சேர்த்து சாப்பிடுவது உங்கள் உடலுக்கு மிகுந்த சத்துக்களை தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
0 Comments