குப்பை மேனியின் மருத்துவ குணங்கள்

 குப்பைமேனியின் அறிவியல் பெயர் அகாலிகா இண்டிகா ஆகும். குப்பைமேனி (Acalypha indica) ஒரு பரவலாகக் காணப்படும் மூலிகைத் தாவரம். குப்பைமேனி என்கிற இதன் பெயர் குறிப்பிடுவது போல, "குப்பை போல் (நோய்களால்) ஆகிவிட்ட மேனியை குணப்படுத்தும்" தன்மையால் இது குப்பைமேனி என்று அழைக்கப்படுகிறது. 

எங்கள் பருவதமலை சுற்றியுள்ள கிராமங்களில் அதிகமாக காணப்படும் குப்பைமேனி செடி மக்கள் பலர் பயன்படுத்துவதில்லை. ஆனால் இதில் உள்ள மருத்துவ குணங்கள் அறிந்தால் மக்கள் பயன்படுத்தாமல் இருக்கப் போவதுமில்லை.

இது சாலை ஓரங்களிலும், தோட்டங்களிலும் தானாகவே வளரும் ஒரு சிறு செடி. இந்த பதிவில் குப்பைமேனி செடியின் மருத்துவ குணங்கள் மற்றும் அதன் வளர்ப்பு முறைகளை பற்றி விரிவாகக் காண்போம்.

குப்பைமேனியின் மருத்துவப் பயன்கள் :

குப்பைமேனி செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை. அதன் இலைகள், வேர்கள் என அனைத்தும் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் முக்கிய மருத்துவ குணங்கள் சில:

  1. தோல் நோய்கள்: குப்பைமேனி இலைகளை மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து, சருமத்தில் பூசி வந்தால் அரிப்பு, சொறி, சிரங்கு, படை, முகப்பரு, கரும் புள்ளிகள் போன்ற பல தோல் நோய்கள் குணமாகும். காயங்கள் மற்றும் படுக்கைப் புண்களுக்கும் இது நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. தேவையற்ற முக முடிகளை நீக்கவும் இது உதவுகிறது.
  2. வயிற்றுப் புழுக்கள் மற்றும் மலச்சிக்கல்: குப்பைமேனி இலைச்சாற்றை விளக்கெண்ணெய் அல்லது பால் கலந்து குடிப்பதன் மூலம் குடல் புழுக்கள் வெளியேறும். மலச்சிக்கலுக்கும் இது சிறந்த தீர்வு. இதன் வேர் மலமிளக்கியாக செயல்படுகிறது.
  3. சளி, இருமல் மற்றும் சுவாசக் கோளாறுகள்: குப்பைமேனி இலைச்சாறு நெஞ்சுக்கோழையை நீக்கி, இருமலைக் கட்டுப்படுத்தும். சளி, ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கும் இது நன்மை பயக்கும்.
  4. உடல் வலி மற்றும் மூட்டு வலி: குப்பைமேனி இலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி உடலில் தேய்த்து வந்தால் உடல் வலி மற்றும் மூட்டு வலி நீங்கும்.
  5. மூலம்: மூலம் நோய்க்கு குப்பைமேனி ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இதன் சமூல சூரணம் (செடி முழுவதையும் காயவைத்து பொடித்தது) நெய்யுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய்கள் குணமாகும்.
  6. இரத்த சுத்திகரிப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி: குப்பைமேனி உடலில் உள்ள நஞ்சுகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
  7.  தலைவலி: குப்பைமேனி இலை பொடியை மூக்கில் நசியமிட்டால் தலைவலி குணமாகும்.
  8. இதர பயன்கள்: விஷக்கடி, காய்ச்சல் போன்றவற்றுக்கும் குப்பைமேனி பயன்படுத்தப்படுகிறது. 

குப்பைமேனியை பயன்படுத்துவதற்கான வழிகள் :

  1. குழம்பு / பற்று: குப்பைமேனி இலைகளை மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து புண்கள், காயங்கள், தோல் நோய்களுக்கு பற்றாகப் போடலாம்.
  2. எண்ணெய்: குப்பைமேனி இலைச்சாற்றை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி குப்பைமேனி எண்ணெய் தயாரிக்கலாம். இது தோல் நோய்கள் மற்றும் உடல் வலிக்கு பயன்படுத்தப்படுகிறது.
  3. கஷாயம் / சாறு: இலைகளை நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக அருந்தலாம் அல்லது சாறு எடுத்து அருந்தலாம். இது சளி, இருமல், மலச்சிக்கல் மற்றும் குடல் புழுக்களுக்கு உதவும்.
  4. பொடி: குப்பைமேனி இலைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, பால், தேன் அல்லது நெய்யுடன் கலந்து சாப்பிடலாம்.

குப்பைமேனி கிடைக்கும் இடங்கள்

குப்பைமேனி பெரும்பாலும் களைச்செடி போல் சாலை ஓரங்களிலும், தோட்டங்களிலும், வெட்டவெளிகளிலும் தானாகவே வளரும். 

இதன் பயன்பாட்டை மக்கள் உணர்வதில்லை இதிலுள்ள மருத்துவ குணங்களை மக்கள் அறிந்து கொண்டு இயற்கை மருந்துகளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும். ஆனால் முன்னொரு காலத்தில் இருந்த இயற்கை வைத்தியர்கள் சித்த வைத்தியர்கள் இந்த செடியை பயன்படுத்தாத நாட்டு மருந்தை உருவாக அப்படி ஒரு சிலர் தான் கடைகளை தொடங்கி நாட்டு மருந்து சித்த மருந்துகளை விற்பனை செய்து வருகிறார்கள். 

குப்பைமேனி தழைகளை காய வைத்து அரைத்து பொடி ஆக்கி அந்த பொடி விற்பனை இந்த பொடி எங்கே கிடைக்கும் என்று மக்கள் நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கலாம். உங்கள் பகுதியில் உள்ள அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் இதன் பொடி கிடைக்கும்.

கவனிக்க வேண்டியவை: 

இதை நாம் அதிக அளவு பயன்படுத்துவதன் மூலமாக வாந்தி பேதி போன்றவர்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. 

கர்ப்பிணி பெண்கள் மற்றும் சிறுவர்கள் இதனை பயன்படுத்துவதற்கு முன்பாக ஒரு முறை இரு முறை மருத்துவரின் ஆலோசனையை கேட்டு நீங்கள் பயன்படுத்தினால் உங்களுக்கு நல்லது. இதை நாம் ஒரு அளவாக தன் பயன்படுத்த வேண்டும். இதனை மருந்தாக பயன்படுத்தும் போது ஒரு அளவை கடைபிடித்து அதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

0 Comments