வாழை மரத்தின் பல்வேறு பயன்பாடுகள் | Various uses of the banana tree

வாழை மரத்தின் ஒவ்வொரு பகுதியின் மருத்துவ சிறப்புகள்.

வாழை மரத்தின் தண்டு பகுதியில் இருந்து வேர் முதல் நுனிவரை வாழை மரத்தின் மொத்த பாகங்களும் மனிதர்களுக்கு அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய ஒரு மரமாக இருந்து வருகிறது. வாழை மரத்தின் சிறப்புகள் மற்றும் அதன் தனித்துவமானது ஏராளமாக இருக்கின்றன. வாழை மரத்தில் நாம் பல்வேறு வகையான மருத்துவ சிறப்புகள் இந்த மரத்தில் நிறைந்துள்ளன. எனவே நாம் வாழை மரங்களை அதிக அளவு பயிரிட்டு அதன் மருத்துவ குணங்களை அறிந்து நாம் வாழை மரத்தினை பயிரிடுவோம்!

1) வாழை இலை : 

வாழை மரத்தின் விலை அகலமாக விரிந்து பரந்து காணப்படும். ஆதலால் பல தேவைகளுக்கு வாழை இலை பயன்படுகிறது. குறிப்பாக பாரம்பரிய உணவு வாழை இலைகள் தான் ஆரம்பிக்கிறது. பண்டைய காலத்து மக்கள் முதல் இன்றைய காலத்தில் மக்கள் வரை வாழை இலை விருந்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

வாழை இலையை அறுத்து அதில் அறுசுவை உணவை போட்டு சாப்பிட்டால் அந்த உணவின் சூட்டில் வாழை இலையின் சத்துக்கள் உடலுக்கு சென்றடையும் என்பது மருத்துவ மரபு. அதுதான் உண்மையும் கூட. அதனால்தான் வாழை இலையில் நிறைய உணவகங்கள் உணவு பரிமாறுகிறார்கள். ஆனால் பல உணவகங்களில் பிளாஸ்டிக் இலைகள் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது அதில் உணவு சாப்பிட்டால் பல நோய்கள் நம்மை தாக்கும் அபாயம் உள்ளது. ஆதலால் மக்கள் அனைவரும் பிளாஸ்டிக் இலைகளில் உணவு உண்ணாமல் முடிந்தவரை வாழை இலையை பயன்படுத்துவது மிக்க நல்லது. 

ஏனென்றால் பிளாஸ்டிக் இலை சாப்பிட்டு விட்டு தூக்கி போட்டு விட்டார் அதை மண்ணில் மட்க பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகும். இது சுற்றுச்சூழலுக்கும் உடலுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. ஆனால் வாழை இலை உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதனால்தான் வாழை இலையில் உணவு சாப்பிட சொல்வது. இனியாவது திருந்துங்கள் மக்களே! 

வாழை இலை விருந்தில் தலைவாழை இலை விருந்தை தான் அனைவரும் மதிப்பார்கள். தலைவாழை என்றால் வாழை இலையின் நுனிப்பகுதி ஆகும். ஒரு வாழையிலேயே அறுத்தால் அதை ஐந்து பேருக்கு மேல் உணவு பரிமாற முடியும். ஏனென்றால் அந்த அளவுக்கு ஒரு வாழை இலை நீளமாக அகலமாக இருக்கும்.

2) வாழைக்காய் : 

வாழை மரத்தில் காய்க்கும் வாழைக்குலை பழுக்காமல் திடமாக இருந்தால் அது வாழைக் காய் ஆகும். பொதுவாக வாழைமரத்தில் காய் வகைகள் என்று இரண்டு வகை உள்ளது. அதில் காய் வகை வாழை மரங்கள் தான் வாழைக்காய் வைக்கிறது. 

இந்த வாழைக்காய் மூலம் குழம்பு, பொறியல், கூட்டு, பஜ்ஜி உள்ளிட்ட பல உணவு வகைகள் தயாரிக்கிறார்கள். இது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது.

3) வாழைத்தண்டு : 

வாழைத்தண்டு என்பது வாழை மரத்தின் உள்ளே இருக்கும் நேராக செல்லும் வெள்ளை நிறத்தில் உள்ள பகுதியாகும். 

இந்த வாழைத்தண்டை எடுப்பதற்கு வெட்டிய வாழை மரத்தின் உள்ளே வாழை பட்டைகளை பிரித்து பார்த்தால் இருக்கும். இப்படித்தான் வாழைத்தண்டை வெளியே எடுக்க முடியும்.

வாழைத்தண்டை மரத்திலிருந்து வெட்டி எடுத்து அதை நன்றாக நறுக்கி குழம்பு வைத்தோபொரியல் செய்தோ சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் சேர்கிறது.

வாழைத்தண்டில் அதிகமான நார்ச்சத்து உள்ளது. ஆதலால் அடிக்கடி வாழைத்தண்டை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கோளாறுகள் எதுவுமே வராது. இயற்கையின் அருமருந்து வாழைத் தண்டு.

4) வாழைப்பழம் : 

வாழை மரத்தில் காய்க்கும் பழ வகை வாழைப்பழம் ஆகும். உலகிலே அதிகம் உண்ணப்படும் பழம் வாழைப்பழம் தான். ஏனென்றால்  இது உடனடியாக ஆற்றலை தரக்கூடியது. ஆதலால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் வாழைப்பழம் சாப்பிடுகிறார்கள். வாழைப் பழத்தின் வைட்டமின்கள் தாது சத்துகள் நார் சத்துக்கள் என பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. உடலுக்கு செரிமானம் அளிக்கக்கூடிய உணவுகளில் வாழைப்பழமும் முக்கியமானது.

வாழைப்பழத்தில் நிறைய வகைகள் உள்ளது. அதில் குறிப்பிட்டு வேண்டுமென்றால் கற்பூர வாழை, பச்சை வாழை, மஞ்சள் வாழை, ரஸ்தாளி, செவ்வாழை, நேந்திரம் உள்ளிட்ட பல வகைகளில் வாழைப்பழங்கள் உலகெங்கிலும் விளைகின்றது. 

5) வாழைப்பூ :

வாழை மரத்தில் வாழைக்குலை தொங்கும் போது முதலில் பூ ஒன்றுதான் வெளியே வரும். அந்தப் பூவில் இருந்து தான் மெல்ல மெல்ல வாழைக்குலை தழைக்க தொடங்கி வாழை காய்களாக உருவெடுக்கிறது. படிப்படியாக வாழைப்பூ வாழை காய்களுக்கு கீழே செல்லும். கடைசியாக விவசாயிகள் இந்த வாழைப்பூவை வெட்டி எடுத்துக் கொண்டுப் போய் அதை சுத்தம் செய்து உரித்து சீர் செய்து தேவையில்லாததை எடுத்துவிட்டு தேவையானவற்றை அறுத்து குழம்பு அல்லது கூட்டு பொரியல் வைப்பார்கள்.

குறிப்பாக வாழைப்பூவில் சுடும் வடை அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. வாழைப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளதால் மக்கள் அதிகமாக திரும்பி சாப்பிடுகிறார்கள். 

அது மட்டுமல்லாமல் தேனீக்கள் வாழைப்பூவில் உள்ள துவர்ப்பு சுவையா தேன் இருக்கும். இந்த தேனை வாழைப்பூ தேன் என்று அழைப்பார்கள். வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் தான் இருக்கும். 

6) வாழை வேர் : 

வாழை மரத்தின் வேர் பயன்படுத்தி வாழை மரங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பயிர் செய்து கொள்ள முடியும் ஏனென்றால் வாழை மரத்திற்கு விதைகள் கிடையாது. வாழைப்பழத்தில் கருப்பு நிறத்தில் விதைகள் இருக்கும் ஆனால் அந்த விதைகளை பயன்படுத்தி வாழைக் கன்றை உருவாக்க முடியாது. வேர் மூலமாகத்தான் கன்றுகள் வளரும். 

வாழைமரம் பக்க கன்றுகள் வைத்து அடுத்தடுத்து வளரக்கூடியது. ஒரு வாழைமரம் தனது வாழ்நாளில் ஒரே ஒரு குலை தான் காய்க்கும். அதன் பிறகு வாழை மரம் காய்ந்து விடும். அதனால் வாழைக்குலையை அந்த வாழை மரத்தையும் சேர்த்து அடியோடு வெட்டி விடுவார்கள். குலை தள்ளிய வாழை மரத்தை வெட்டிய பிறகு அதன் பக்கத்திலிருந்து பக்கக் கன்றுகள் மூலம் வாழைமரம் செழித்து வளரும். இதனால்தான் "வாழையடி வாழையாக வாழ வேண்டும் "என்று பாரம்பரியமாக பழமொழி கூறி வருகிறார்கள்.

0 Comments