எருக்கன் செடி (Calotropis) என்பது மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு தாவரமாகும். இது பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. எருக்கன் செடியின் பால், இலை, பூ போன்ற பாகங்கள் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.
எருக்கன் செடியில் மருத்துவப் பண்புகள் பல உள்ளன.இது உடலுக்கும் சருமத்திற்கும் பல வழிகளில் நன்மை பயக்கிறது.குறிப்பாக, எருக்கன் இலைகள் மூட்டு வலி, தோல் புண் மற்றும் காய்ச்சல் போன்றவற்றுக்கு உதவுதின்றன.
எருக்கன் செடியின் மருத்துவப் பண்புகள்:
எருக்கன் செடியில் பலவிதமான நன்மைகள் மருத்துவ குணங்கள் இருப்பதால் இது மக்களுக்கு மிக அவசியமாக தேவைப்படுகிறது. இப்பொழுது ஒவ்வொரு நோய்க்கும் எருக்கஞ் செடி எப்படி பயன்படுகிறது என்பதை பற்றி விரிவாக காண்போம். இந்த எருக்கஞ்செடி நமது உடலுக்கு பல்வேறு வகையான மருத்துவ குணங்களை அளிக்கிறது.
இந்த இருக்கு செடியானது அதிக அளவு மூலிகைத் தன்மையைக் கொண்ட ஒரு செடியாகும். இந்த எருக்கஞ்செடி இரண்டு வகையாக இருக்கிறது. அதில் நீல நிறமாக இருக்கும் ஒரு எருக்கஞ்செடி உள்ளது. மற்றொன்று வெள்ளை நிறமாக இருக்கும் எருக்கஞ்செடி என இரண்டு வகைகளாக இருக்கின்றன.
இந்த எருக்கஞ்செடி ஆனது பல்வேறு வகையில் நமக்கு உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளித்து வருகிறது. மேலும் இது உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இந்த செடியை அதிகளவு பால் சுரக்கின்றன.
எருக்கஞ்செடியில் உள்ள மருத்துவ குணங்கள்:
- இந்த எருக்கஞ்செடி ஆனது இதில் உள்ள பூக்களை நாம் பறித்து அதில் மிளகு சேர்த்து நீங்கள் தேனில் தொட்டு சாப்பிட்டால் உங்கள் உடலில் உள்ள ஆஸ்துமா பிரச்சனைகள் சளி பிரச்சனைகளை சரி செய்வதற்கு உதவுகிறது.
- எருக்கன் செடியில் உள்ள பாலை நாம் பாம்பு எரும்பு தேள் மற்றும் குளவி போன்றவைகள் கடித்த இடத்தில் நாம் இதனை தடவினால் நமது உடலில் உள்ள விஷம் இறங்குகின்றன.
- நாம் நாம் இந்த எருக்கஞ்செடியில் உள்ள இலைகளைப் பறித்து அதை சூடான செங்கலில் சிறிது நேரம் வைத்து அதனை நாம் பாதத்திற்கு அடியில் வைத்தால் குதிகால் வலிகள் குணமாகும்.
- நாம் இந்த பூக்களை பறித்து அதனை நன்கு உலர்த்திவிட்டு அதனை பொடியாக வேண்டும். பொடியாக்கிய இருக்கும் போது எடுத்து நீங்கள் உங்களது புண்ணின் மேல் தடவி வருவதன் மூலமாக உங்களுடைய புண்கள் குணமாகின்றன.
- விளக்கெண்ணையில் இருக்கேன் செடியின் இலையில் உள்ள சாறுகளை விட்டு சாப்பிட்டு வந்தால் நமக்கு மலச்சிக்கல் குணமாகின்றன.
- எருக்கஞ்செடியில் உள்ள பூக்களை எடுத்துக் கொண்டு அதில் பூ சேர்த்து அதனை நாம் பொடியாக்கி பருப்பு பொடியின தயாரிக்கலாம். இதன் மூலமாக பற்களில் உள்ள புழுக்கள் மற்றும் பல் வலிகள் குணமாகின்றன.
- நாம் எருக்கஞ்செடியில் உள்ள சாறு மற்றும் அதனுடன் மஞ்சள் சிறிதளவு கடுகு எண்ணெயை சேர்த்து தடவி வந்தால் நமக்கு சொறி சிரங்கு போன்றவைகள் குணமடைகின்றன.
- நாம் காது வலிக்கும் இதனை பயன்படுத்தலாம்.
- இந்த செடியானது யானைக்கால் வியாதி உள்ளவர்களுக்கும் பயன்படுகிறது. நாம் இதை எல்லாம் ஒரு அளவிற்கு தான் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் நமது உடலுக்கு மிகவும் பாதிப்பாக அமையும்.
மேலும் சில தகவல்கள்:
- இந்த எருக்கம் செடியானது கிராமப்புற பகுதிகள் மற்றும் தோட்டங்களில் தானாகவே வளர்ந்து வருகிறது. இதனை ஒரு சிலர் தெய்வத்திற்கும் இந்த பூவினை பயன்படுத்தி வழிபடுபவர்கள்.
- இந்த எருக்கஞ்செடி ஆனது கிராமப்புற பகுதிகளில் பல்வேறு இடங்களில் பரவலாக காணப்பட்டு வருகிறது இதனை நாம் சரியான முறையில் பயன்படுத்தினால் நமது உடலுக்கு பல்வேறு மருத்துவ குணங்களை வழங்குகிறது.
- இதனை நாம் தவறான முறையில் பயன்படுத்த கூடாது. இந்த எருக்கன் செடியில் உள்ள எந்த பகுதியை நாம் சிறிதளவு சுரண்டினால் கூட மரத்திலிருந்து பால் சுரக்கின்றன.
- மேலும் இந்த எருக்கஞ்செடி ஆனது ஆன்மீகத்திலும் முக்கியத்துவம் கொண்ட ஒரு செடியாக விளங்கி வருகிறது. இந்த எருக்கஞ்செடியில் உள்ள சாரினை சரியான முறையில் நாம் எடுத்து அதனை பல்வேறு வகைகளில் மருத்துவத்திற்கு பயன்படுத்தி வர வேண்டும்.
எருக்கஞ்செடியில் உள்ள சிறப்பு தன்மைகள்:
- இந்த எருக்கஞ்செடி ஆனது வறட்சியையும் தாங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.
- நீர் இல்லாத காலகட்டங்களில் கூட இந்த செடியானது வறட்சியை தாங்கி பசுமையாக காணப்படுகிறது.
- மேலும் இந்த எருக்கஞ்செடியானது நிலத்தடி நீரை பாதுகாக்கின்றன. இதன் மூலம் நமக்கு நீர் வளம் ஆதாரம் மேம்படுகிறது.
- பறவைகள் மற்றும் பூச்சிகளுக்கு இது தங்கும் இடத்தையும் இதில் உள்ள பூக்களில் உள்ள தேனை சுரப்பதற்கும் இது பயன்படுகிறது.
- இந்த எருக்கஞ்செடியானது நிலத்தின் மேல் உள்ள தேவையற்ற ரசாயன நச்சுகளை நீக்கி செயற்கை உரங்களை பயன்படுத்தாமல் இருப்பதற்கு இந்த எருக்கஞ்செடியானது உதவுகிறது.
0 Comments