வாழை மரம்:
வாழை மரமானது தமிழக மக்களின் பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் மருத்துவத்திலும் விவசாயத்திலும் சிறந்து விளங்கக்கூடிய ஒரு செடி வகை பயிராகும். வாழை மரத்தில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம் வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் மிகவும் அதிகளவில் பயனுள்ளதாக இருக்கின்றன. வாழை மரமானது தென்கிழக்கு ஆசியாவில் தோன்றியது. வாழை மரத்தின் இலை பூ காய் தண்டு கனி அனைத்தையும் நாம் அன்றாட வாழ்வில் அதிக அளவில் பயன்படுத்துகிறோம்.
வாழை சாப்பாட்டில் இதன் பயன்பாடுகள்:
வாழை இலை:
- பொதுவாகவே வாழை இலையானது திருமணங்கள் மற்றும் திருவிழாக்கள் உணவகங்கள் மற்றும் சாப்பாடு சாப்பிடுவதற்கு பெரும்பாலும் வாழை இலையை நாம் பயன்படுத்துகிறோம்.
- மேலும் வாழை இலையானது அதிகளவில் பயனுடையதாக உள்ளது.
- வாழை இலையை சமையலுக்கும் பயன்படுத்தலாம்.
- வாழை இலையில் சாப்பிடுவதன் மூலம் நம் உடல் ஆரோக்கியம் அடைகிறது.
- பண்டைய காலங்களில் மக்கள் பெரும்பாலும் விவசாயம் செய்துவிட்டு வாழையிலேயே பயன்படுத்தி உணவுகளை அருந்தினர்.
- இதனாலையே அவர்கள் மிகவும் ஆரோக்கியத்துடனும் உடல் நலத்துடனும் வாழ்ந்து வந்தனர்.
வாழைப்பூ:
- வாழைப்பூவை வைத்து நாம் பொரியல் செய்யலாம்.
- இதன் மூலம் நமது உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்.
- வாழைப்பூவில் அதிகளவில் நார்சசத்து மிகுந்ததாக உள்ளது.
வாழைக்காய்:
- வாழைக்காய் ஆனது பொரியல் செய்ய அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
- மேலும் பஜ்ஜி சுடுவதற்கும் வாழைக்காயை பயன்படுத்தி வருகின்றனர்.
- இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்து அதிக அளவில் உள்ளது இதனால் நம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
வாழைப்பழம்:
- வாழை மரத்தில் உள்ள பழத்தினை நாம் அப்படியே சாப்பிட்டு வரலாம்.
- வாழைப்பழமானது மலச்சிக்கலை தடுக்கிறது.
- வாழைப்பயத்தினை கொண்டு நாம் இதை பழச்சாராக மிக்ஸியில் அரைத்தும் பருகலாம்.
வாழைத்தண்டு:
- வாழைத்தண்டு சாறை குடிப்பதன் மூலம் உடலில் உள்ள உப்புகளை வெளியேற்ற பயன்படுகிறது .
மருத்துவத்தில் இதன் பயன்படுங்கள்:
- வாழைப்பூவில் அதிகளவில் இரும்பு சத்து உள்ளது மற்றும் மாதவிடாய் கோளாறுகளுக்கு இது அதிக அளவில் பயன்படுகிறது.
- வாழைத்தண்டு சாறு பயன்படுத்தினால் சிறுநீரை பெருக்கும் மேலும் பித்தப்பையை கட்டுப்படுத்தவும் இது பயன்படுகிறது.
- வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது ரத்த அழுத்தம் மற்றும் மலச்சிக்கலை தடுக்கவும் இது பயன்படுகிறது.
- வாழை இலையானது உணவு பரிமாற்றத்தில் பயன்படுகிறது மற்றும் நமது உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.
- உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மன அழுத்தம் புற்றுநோய் மற்றும் இதய நோய்களை தடுக்கிறது.
பண்பாட்டில் இதன் பயன்கள்:
- திருமணங்கள் மற்றும் சடங்குகளில் வாழை மரங்கள் கட்டுவது வழக்கம்.
- இது சுப நிகழ்ச்சிகளில் ஒரு அடையாளமாக உள்ளது.
- வாழையடி வாழையாக குடும்பம் வளர வேண்டும் என்ற அடையாளமும் உள்ளது.
- வாழை இலையில் உணவு சாப்பிடுவது தமிழரின் மரபாக உள்ளது.
வாழையின் சில வகைகள்:
பேயன்,ரஸ்தாலி,பச்சை,நாட்டு,மலை,நவரை,சர்க்கரை,செவ்வாழை.பூவன், கற்பூரம்,மொந்தன்,நேந்திரம்,கரு,அடுக்கு,வெள்ளை,ஏலரிசி,மோரிஸ்,மட்டி போன்ற பல்வேறு வகையான வாழை ரகங்கள் இருக்கின்றன.
எப்படி வாழைமரம் வளர்ப்பது?
வாழைத்தோட்டம் பார்ப்பதற்கு கண்களுக்கு மிகவும் அழகாக இருக்கும் மற்றும் வீட்டிற்கு நல்லது நம் உடல் நலம் அதிக அளவில் பயனளிக்கக் கூடிய வகையில் இந்த மரமானது அமைந்துள்ளது.
மண் வகை:
- நல்ல நீர் வடிகட்டும் மண் வகை தேவை.
- நன்கு சத்து நிறைந்த மண் தேவை வண்டல் மண் சிறந்தது.
கன்றுகளை தேர்ந்தெடுத்தல்:
- நல்ல வேர்களை கொண்ட தண்டுகளை நாம் பயன்படுத்த வேண்டும்.
- வேர்கள் நன்கு இருக்க வேண்டும்.
- தண்டு கிழங்குகளை பயன்படுத்தினால் நாம் விரைவில் வளர்ச்சி காணலாம்.
நடுதல் முறை:
- நாம் ஒரு அடி அளவிற்கு மண்ணைத் தோண்டி வண்டி போகும் அளவுக்கு ஒரு கன்றுக்கும் மற்றொரு கன்றுக்கும் இடைவெளி விட்டு நட வேண்டும்.
நீர் பாசனம்:
- கோடை காலங்களில் தினமும் நீர் பாசனம் தேவை
- மண்ணின் மேல் வறண்ட உடன் நீர் பாய்ச்சுதல் மிகவும் அவசியமானது.
பராமரிப்பு முறை:
- அடிக்கடி வாழைமரம் வளர்ந்தவுடன் சுற்றியுள்ள தேவையற்ற சடங்குகளை நீக்க வேண்டும்.
- தேவையற்ற கலைகளை எடுக்க வேண்டும்.
- வாழைக்கன்று குலை வைத்தவுடன் அதை வெட்டிவிட்டு வாழை தண்டை வெட்டி வட வேண்டும்.
- அதன் பிறகு மீண்டும் வாழைகுலை வைக்கும்.
0 Comments