புலிகள் என்பது வனத்தில் வாழக்கூடிய ஒரு உயிரினமாகும். புலிகள் என்பது காட்டின் வலிமையையும் அழகையும் மற்றும் உயிரியல் சமநிலையும் நிலை நிறுத்தி வர கூடிய ஒரு உயிரினமாகும். புலிகள் என்பது பூனை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெரிய இனமாகும். இது ஆசியாவின் அதிக அளவில் காணப்படுகிறது. புலிகளுக்கு வலிமை மற்றும் வேகம் மற்ற உயிரினத்தை விட அதிகமாக இருக்கும். புலிகள் மேல் இருக்கும் கோடுகள் ஒவ்வொரு புலிக்கும் சிறிதளவு மாறுபட்டே இருக்கும்.
புலிகள் பெரும்பாலும் காட்டில் கம்பீரமாகவே இருக்கின்றன. புலிகள் அடையாளக் குறியீடுகள் கூட பயன்படுத்தப்படுகிறது. புலிகள் மஞ்சள் நிறத்திலும் அதன் தோள்களில் கருப்பு மற்றும் வெள்ளை கோடுகளை கொண்டிருக்கும். புலிகள் தனக்குத் தேவையான உணவுகளை தானே எடுத்துக் கொள்கிறது.காட்டில் உள்ள பிற உயிரினங்களை தனக்கு இரையாக எடுத்துக் கொள்கிறது.
புலிகள் தனக்கென்று தனித்துவமான அடையாளங்களை கொண்டுள்ளன. இது தனியாக வாழும் உயிரினம் ஆகும். புலிகள் தொடர்ந்து இறைச்சிகளை தடவும் மற்றும் குட்டிகளை வளர்க்கவும் சமநிலை பகுதியை தேர்ந்தெடுத்து அங்கு உயிர் வாழ்கின்றன. புலிகள் தனக்கென எல்லையை பிரித்து தனித்துவமாக வாழும் உயிரினமாகும்.
புலிகள் பண்டைய புராணங்களிலும் கலாச்சாரங்களிலும் மற்றும் கதைகளிலும் புலிகளைப் பற்றி சிறப்பித்து மற்றும் அதன் செயல்களை குறித்தும் நிறைய எழுதப்பட்டிருந்தன. புலிகளை கொடியாகவும் சின்னங்களாகவும் மற்றும் திரைப்படங்களின் பெயராகவும் நிறைய இதன் பெயரை பயன்படுத்திக் கொண்டுள்ளனர். புலிகள் மக்களை அச்சுறுத்துவதன் காரணமாக நிறைய புலிகளை சரணாலயத்திலும் வளர்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் புலிகள் சரணாலயம் ஆனது முண்டந்துறையில் அமைந்துள்ளது. புலிகள் அதிக அளவில் அதிகாரிகள் மூலம் பிடிக்கப்பட்டு சரணாலயத்தில் மிகவும் சிறப்பாக வளர்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ற சூழலை அங்கு உருவாக்கி கொடுத்து நீர் அதற்கு தேவையான இறைச்சி அனைத்தையும் அவர்கள் எடுத்துக் கொண்டு வந்து அங்கேயே கொடுப்பார்கள். மக்கள் அனைவரும் புலிகள் சரணாலயத்திற்கு சென்று புலிகளின் செயல்களையும் பார்ப்பார்கள்.
புலிகள் வாழ்விடம் மற்றும் பரவல்:
- புலிகள் பெரும்பாலும் அடர்ந்த காடுகள் சதுப்பு நிலக்காடுகள் மற்றும் புல்வெளி நிறைந்த காடுகளில் உயிர் வாழ்கின்றன.
- உலக அளவில் நிறைய புலி வகைகள் உள்ளன.
- அதில் ஒரு சில புலிகள் வங்காளப்புலி,சுமத்திர புலி,மலேசிய புலி,சைபீரியன் புலி,இந்தோனேசியா புலி,தென் சீன புலி.
புலிகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்:
- புலிகள் தனித்துவமாக இருக்கும் அதன் மேல் நமது கைரேகை போன்ற கோடுகள் காணப்படுகின்றன.
- புலிகள் ஆனது நன்றாக நீந்தக் கூடிய தன்மையைக் கொண்டுள்ளது.
- இதனால் வெயில் காலங்களில் புலிகள் உடல் சூட்டை தணிப்பதற்காக நீரில் நீந்தி தனது உடல் சூட்டினை தடுக்கின்றன.
- புலிகள் கர்ஜித்தால் அதிகளவு சத்தம் எழுகின்றன.
வேட்டையாடுதல் மற்றும் உணவு:
- புலிகள் பெரும்பாலும் இறைச்சியை மட்டுமே சாப்பிடுகின்றன.
- மான்கள்,காட்டுப்பன்றி மற்றும் காட்டெருமை போன்ற முக்கிய இரைகளை மட்டுமே தனக்கு உணவாக எடுத்துக் கொள்கிறது.
- புலிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் மட்டுமே வேட்டையாடுகின்றன
- ஏனென்றால் இரவு நேரங்களில் அதன் பார்வையானது அதிகளவில் கூர்மையாக இருக்கின்றன.
- இதனால் இரையை சிறப்பாக வேட்டையாடுகின்றன.
புலிகள் இனப்பெருக்கம்:
- பெண் புலியானது குட்டியை இரண்டு வயது வரை பராமரித்து வளர்கின்றன.
- பெரும்பாலும் புலிகள் 10 முதல் 15 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழும் தன்மை கொண்டவைகள் ஆகும்.
புலியின் அபாயங்கள்:
- புலிகள் அழிந்து வரும் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
- ஏனென்றால் புலிகள் வாழ்விடத்தை அழிப்பதும் மற்றும் வேட்டையாடுதல் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
- காடுகளை அழிப்பதன் மூலமும் புலிகள் தனது வாழ்விடத்தை இழக்கின்றன .
- சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29 என அறிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்:
- புலிகளை பாதுகாப்பதற்கான பல்வேறு வகையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வந்து வருகிறது.
- புலிகள் வாழ்விடத்தை பாதுகாக்கவும் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் இந்தியா பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
- புலிகள் வாழும் தன்மையையும் புலிகள் வேட்டையாடுதலும் மற்றும் புலிகளின் எண்ணிக்கையை கண்காணிப்பதற்கும் கண்காணிப்பு கேமராக்கள் வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன.
- GIS தொழில் நுட்பம் ஆனது புலிகளின் வாழிடத்தை வரைபடமாக கொடுப்பதற்கு பயன்படுகிறது.
வாழ்விடம் பாதுகாப்பு:
- புலிகளை பாதுகாப்பதற்காக புலிகள் வைத்து தடங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு வனப்பகுதியில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- அழிந்த காடுகளை மீட்டெடுத்து அழிந்த காடுகளை மீண்டும் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
சமூகப் பங்களிப்பு:
- பழங்குடி மக்கள் பெரும்பாலும் வனப்பகுதியில் வாழ்ந்து வந்தனர்.
- அவர்களை ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
- புலிகள் காப்பகத்திற்கு அருகில் வாழும் மக்களுக்கு அங்கேயே வேலைவய்ப்பு வழங்கி வருகின்றனர்.
வேட்டையாடுதல் தடுப்பு சட்டம்:
- புலிகளை வேட்டையாடினால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 இன் படி கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.
- புலிகளை வேட்டையாடுவதை தடுப்பதற்காக சிறப்பு படைகளும் தனியாக அமைக்கப்பட்டுள்ளன.
- இந்த முயற்சிகள் மூலமாக இந்தியாவானது புலிகளை பாதுகாக்கும் முயற்சியில் முன்னிலை வகித்து வருகின்றன.
0 Comments