சும்மா பார்த்தாலே சாப்பிட தூண்டும் அளவிற்கு இருக்கும் நவாப்பழம் மரம் ஆனது மிகவும் பசுமை மாறாமல் அனைத்து காலநிலைகளிலும் மிகவும் பசுமையாகவே பார்ப்பதற்கு இருக்கிறது. நவாப்பழம் மரம் ஆனது இயற்கை நமக்கு கொடுத்த ஒரு சிறந்த பரிசாகும்.
அதனால் இதனை நாம் பாதுகாத்துக் கொள்ள நீரி விநாயகர் களுக்கு இந்த மரமானது சிறந்து விளங்கி வருகிறதுஇந்த நவாப் பழத்தில் அதிக அளவு மருத்துவ குணங்கள் இருக்கின்றன. நவாப்பழம் மரமானது கிளைகள் அடர்த்தியாகவும் பசுமை மாறாமலும் காணப்படுகின்றன. இந்த மரமானது இந்தியா மற்றும் இந்தோனேசியாவை பூர்வீகமாகக் கொண்டு இருக்கிறது. இந்த நவாப்பழம் மரமானது சுற்றுச்சூழலுக்கு மிகவும் அதிகளவில் பயன்படக்கூடிய ஒரு தரமாக இருந்து வருகிறது. இந்த மரமானது 30 அடிக்கும் மேல் வளரக்கூடியது.
சுமார் 1000 ஆண்டுகள் வரை இந்த மரமானது இருக்கும். நவாப்பழம் மரம் பெரும்பாலும் கிராமப்புற பகுதிகளில் உள்ள காடுகளின் எல்லைகளில் அதிக அளவில் காணப்பட்டு வருகின்றது. இந்த பழமானது கிராமப்புறங்களில் உள்ள காடுகளில் அதிக அளவு வளர்ந்து காணப்படுவதால் அங்குள்ள மக்கள் அதனை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.
அடையாளம்:
இந்த மரத்தின் பழம் ஆனது அடர் கருப்பு நிறத்திலும் நீல நிறத்திலும் இருக்கின்றது. இதனுடைய இலைகளானது நீலகிரி மரத்தின் இலையைப் போன்று காணப்படுகின்றன. அடர்ந்த கிளைகளுடன் மனது மிகவும் பசுமையாக இருக்கிறது. இந்த மரமானது மிகவும் வழுவழுப்பான தண்டுகளை கொண்டுள்ளது. இந்த நாவல் மரத்தின் இலைகள் பழங்கள் மற்றும் தண்டுகள் அனைத்தும் அதிகளவு மருத்துவ குணங்களை கொண்டுஇருக்கின்றன.
மரத்தின் பண்புகள்:
பெரும்பாலும் அனைத்து வகையான மண்ணிலும் வளரக்கூடிய ஒரு மரமாகும்.
கிராமங்களின் சாலையோரத்திலும் குளங்களின் கரைகளிலும் ஓடைகளின் கறைகளிலும் ஆற்றங்கரைகளிலும் பெரும்பாலும் இம்மரமானது வளர்ந்து காணப்படுகிறது.
மருத்துவ பயன்கள்:
நவாப் பழத்தில் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் ரத்தம் மறுசுழற்சி செய்ய உதவுகிறது. ரத்தம் மிகவும் சத்தானதாகவும் இருக்க உதவுகிறது.
இந்த பழத்தினை சாப்பிடும் போது செரிமானத்திற்கு உதவுகிறது மேலும் வயிற்றுப் பகை சரி செய்யவும் உதவுகிறது. நம் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வாக விளங்கி வருகிறது.
நவாப் பழத்தின் விதை மற்றும் பழச்சாறானது நமது உடலின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்து உதவுகிறது. நீரிழிவு நோயிலிருந்து தடுக்கிறது.
கவனிக்க வேண்டியவைகள்:
சளி காய்ச்சல் மற்றும் தொண்டைகளுக்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. நாம் இந்த மரத்தினை வீட்டுப் பகுதியில் வளர்ப்பது ஆபத்தாக இருக்கலாம் அதனால் நீங்கள் தோட்டத்தில் அல்லது உங்கள் இடத்திலோ வைப்பது நல்லது.
நவாப்பழம் மரம் எப்படி வளர்ப்பது?
நவாப்பழம் மரத்தினை நாம் வீட்டில் வளர்ப்பது பாதுகாப்பானது அல்ல எனவே நீங்கள் உங்களது நிலப்பரப்பில் வளர்த்தால் அதுவே சிறந்தது. எனவே நீங்கள் நிலப்பரப்பில் மரம் வளர்ப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்!
விதையை தேர்ந்தெடுத்தல்:
நீங்கள் நவாப் பழத்தினை அப்படியே சாப்பிட்டு விட்டு நீங்கள் அதனுடைய விதைகளை அப்படியே மண் மீது நட்டால் அதே வளரக்கூடியது.
இருந்தாலும் நீங்கள் விதையாக நடுவதை விட நீங்கள் சிறுசிறு கன்றுகளாக வாங்கி நட்டால் சிறந்தது எனவே நீங்கள் நவாப்பழம் கன்றுகளை வாங்கி சேகரித்து வைத்துக் கொள்ளவும்.
நிலத்தை சரிபார்த்தல்:
அனைத்து மண் வகைகளிலும் இது வளரக்கூடியது. இருந்தாலும் இதற்கு உயிர் சத்துக்கள் மிகுந்த செம்மண் சிறந்ததாக இருக்கும். நீரினை நன்றாக வடிகட்டும் மண்ணாக இருந்தால் மிகவும் செடி வளர ஏற்றதாக இருக்கும். நீங்கள் இந்த செடி வளர அதிகளவு சூரிய ஒளி படும் இடத்தில் நட்டு வைத்தால் சிறப்பாக வளரும்.
நீங்கள் வைத்திருக்கும் கன்றுகளின் வேர்கள் மறையும் அளவிற்கு ஏற்றபடி குழிகளை தோண்டி வைக்க வேண்டும். பிறகு நீங்கள் வைத்திருக்கும் கன்றுகளின் வேர்கள் மறையும் அளவிற்கு சரியான இடைவெளியில் கன்றுகளை நட்டு வைக்க வேண்டும்.
நீர் பாசன முறை:
இது வளர நீர் அதிக அளவில் தேவைப்படாது இருந்தாலும் ஆரம்ப கட்டத்தில் வாரத்திற்கு இரண்டு முறையாவது நீர் விட வேண்டும். மரம் வளர்ச்சி அடைந்த பிறகு நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் நீர் விட்டால் போதுமானது.
மண் மிதமான ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். நீரினை அதிக அளவு தேங்கி வைத்து விடக்கூடாது.
உரம் :
நீங்கள் இதற்கு இயற்கை உரங்களை பயன்படுத்தினால் மிகவும் சிறந்தது.
மாட்டு சாணம் கோழி மலம் மற்றும் பசுமை நிறைந்த இயற்கை உரங்களை பயன்படுத்தினால் இதற்கு சிறந்தது.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மண்ணை சீரமைத்து நீங்கள் பராமரித்து உரங்களை விட்டு வர வேண்டும்.
பராமரிப்பு முறை:
செடி வளரும் கட்டத்தில் இலைகள் மேல் பூச்சிகள் இருந்தால் நீங்கள் அதற்கு இயற்கை உரமான வேப்ப எண்ணெய் பயன்படுத்தலாம்.
மரம் அதிக அளவு அடர்த்தியாக கிளைகள் வளர்ந்தவுடன் நீங்கள் கிளைகளை சரியாக வெட்டி பராமரித்து வளர்க்க வேண்டும்.
சுவாரசியமான தகவல்கள்:
மரம் மிகவும் அடர்த்தியாக உள்ளதால் பறவைகளுக்கு வீடு கட்டுவதற்கு மிகவும் ஏற்ற இடமாக இந்த மரம் இருந்து வருகிறது.
மேலும் தேனீக்களுக்கு தேன் கூடு கட்டுவதற்கும் இந்த மரம் பாதுகாப்பானதாக உள்ளது.
0 Comments