கொசு மற்றும் கொசு செயல்பாடுகள் | Mosquito and mosquito activities

கொசுக்கள் கடிப்பதன் மூலம் பல்வேறு வகையான நோய்கள் உடலுக்கு ஏற்படுகின்றன. பெண் கொசுக்கள் மட்டுமே மனிதர் உடலில் இருந்து அதிகளவில் ரத்தத்தை உறிஞ்சுகின்றன. கொசுக்கள் பெரும்பாலும் தாவர சாறுகளை உணவாக எடுத்துக் கொள்கின்றன. கொசுக்கள் என்பது கண்களுக்கு மிகவும் அரிதாக தென்படக்கூடிய ஒரு பூச்சியாக உள்ளது. இந்த கொசுக்கள் உடலை கடிக்கும் பொழுது மிகவும் துரிதமாக நமது உடலை கடித்து நம் உடலில் உள்ள ரத்தத்தை எடுத்துச் செல்கிறது. 

இதன் மூலமாக நமது உடலுக்கு பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுகிறது. நோய் உள்ள ஒரு மனிதனின் உடலில் இருந்து ரத்தத்தை எடுத்து விட்டு பிறகு நோய் இல்லாதவர் உடலில் இந்த கொசுவானது ரத்தத்தை எடுக்கும்பொழுது மனிதர்களுக்கு பல்வேறு வகையான நோய் தொற்றுகள் கொசுக்களின் மூலம் பரவுகின்றன. எனவே நாம் கொசுக்கள் இடம் இருந்து மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

கொசுக்கள் பொதுவாக மாலை நேரங்களில் சுறுசுறுப்பாக உள்ளன. இதனால் மாலை நேரங்களில் மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே கொசு அதிக அளவில் நமது உடலை தாக்குகிறது.கொசுக்கள் மூலம் மனித உடலுக்கு அதிகப்படியான நோய்களை ஏற்படுத்துகிறது. டெங்கு,மலேரியா போன்ற நோய்கள் கொசுக்கள் மூலமே அதிக அளவில் பரவப்படுகின்றன. கொசுக்கள் உலகம் முழுவதும் பரவலாக காணப்படும் ஒரு பூச்சிகள் ஆகும்.

கொசுக்கள் என்பது குளுசிடே என்ற இனத்தைச் சேர்ந்த பூச்சிகள் ஆகும். இதன் உடல் பகுதியானது மிகவும் சிறியதாக காணப்படும். மேலும் இதனின் உடலில் இரண்டு இணை இறக்கைகள் காணப்படுகின்றன. இதற்கு மூன்று இணை நேர் கால்களை கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் கொசுக்கள் நோய் பரப்பும் காரணியாக இல்லை என்றாலும் அது டெங்கு,மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன.

கொசுக்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்: 

  • ஒரு கொசுவின் ரெக்கை ஆனது ஒரு வினாடிக்கு 300 முதல் 600 முறை ரெக்கைகள் துடிக்கின்றன. 
  • சில கொசுக்கள் 100 மயில் தூரம் பறக்கக்கூடிய தன்மையும் கொண்டுள்ளது. 
  • உலகில் பழம்ஏறக்குறைய 3500 க்கும் மேற்பட்ட கொசு வகைகள் உள்ளன.
  • பெண் கொசுக்கள் தங்களின் துணைக்கொசுவின் இசையை ஒத்திசைத்து பறக்கின்றன.

வாழும் இடம்: 

  • மிகவும் ஈரப்பதமான மற்றும் வெப்பமான இடங்களை விரும்புகிறது. 
  • கொசுக்கள் பெரும்பாலும் வாகனங்களின் டயர்கள் மற்றும் தொட்டிகளில் தேங்கி இருக்கும் நீர்,குட்டைகளில் தேங்கி இருக்கும் நீர் போன்றவற்றில் உருவாகி அங்கு உயிர் வாழ்கின்றன.
  • இந்த மாதிரியான வாழிடங்கள் கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு மிகவும் நன்றாக உள்ளது.

கொசுக்கள் மூலம் பரவும் முக்கிய நோய்கள்: 

மலேரியா- மலேரியா காய்ச்சல் ஆனது கொசுக்கள் கடித்தவுடன் பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி மூலமாக மலேரியா காய்ச்சல் ஏற்படுகிறது.

டெங்கு- DEN வைரஸ்கள் மூலம் ஏற்படுகிறது. 

சிக்கன் குனியா- இது மனித உடலுக்கு மூட்டு வலியை கை கால் வலிகளை ஏற்படுத்தி மனித உடலை தாக்குகிறது. 

ஜிகா வைரஸ்- இந்த வைரஸ் மனித உடலை தாக்கி காய்ச்சல் ஏற்படுத்துகிறது. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் ஆபத்தானது.

மஞ்சள் காய்ச்சல்- ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் பொதுவாக இது பரவி வருகிறது. 

கொசுக்களை கட்டுப்படுத்த சில தடுப்பு முறைகள்: 

  • நம் வீட்டிலும் நம் வீட்டின் சுற்றுப்புறத்திலும் உள்ள பகுதிகளில் உள்ள தேவையற்ற தேங்காய் ஓடுகள்,தொட்டிகள் மற்றும் மழைநீர் தேங்கும் தேவையற்ற பொருட்களை நாம் அகற்ற வேண்டும்.
  • இதன் மூலமாகவே பெரும்பாலும் மழைநீர் தேங்கி அதில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்து முட்டையிட்டு இதன் மூலமாகவே அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. 
  • கொசுக்களிடம் இருந்து நம்மளை பார்த்துக் கொள்ள கொசு வலைகள் மற்றும் திரைகளை பயன்படுத்தலாம். 
  • DEET கொண்ட கொசு விரட்டிகளை நாம் பயன்படுத்தலாம். 
  • நாம் கொசுக்களுக்கு எதிரான தடுப்பூசிகளை பயன்படுத்தலாம். 
  • கொசுக்களை நமது உடலை கடிக்காமல் இருக்க நாம் பேண்ட் ஷர்ட் போன்ற முழு ஆடைகளை பயன்படுத்தலாம். 

கொசுக்களின் வாழ்க்கை சுழற்சி: 

  • கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு பிறகு கொசுக்கள் நீரில் தனது முட்டைகளை இடுகின்றன. 
  • அடுத்தது லார்வாக்களாக மாறுகின்றன.
  • அடுத்த படியாக புழு,கூட்டு புழு மற்றும் கொசுக்காக வளர்ந்து ஐந்து நிலைகளை கொண்டிருக்கும்.

உடல் அமைப்புகள்: 

  • கொசுக்களின் தலைப்பகுதியானது கண்கள் மற்றும் ஊசி போன்ற நாக்குகளை கொண்டு இருக்கின்றன. 
  • முதுகு பகுதியில் இரண்டு இறக்கைகள் மற்றும் கால்களை கொண்டுள்ளன. 
  • வயிற்றுப் பகுதியில் ரத்தம் மற்றும் முட்டைகளை வைத்துக் கொண்டிருக்கின்றன. 
  • மூன்று ஜோடி கால்களை கொண்டுள்ளன.

சுவாரஸ்யமான தகவல்கள்: 

  • ஒரு பெண் கொசுவானது ஒரே நேரத்தில் 100 முதல் 300 முட்டைகளை இடுகின்றன. 
  • கொசுக்கள் மனிதர் வெளிய விடும் கார்பன் டை ஆக்சைடு அடையாளம் காண்கின்றன.
  • தமிழ்நாட்டில் கொசுக்கள் மூலம் ஏற்படும் நோய்கள் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் உள்ளன. இதனால் நம் கொசுக்களிடமிருந்து மிகவும் எச்சரிக்கையாக வேண்டும்.

                   "கொசு சிறியது ஆனால் நோய்தான் பெரியது!"

0 Comments