வேப்பங்குச்சியின் மருத்துவ குணங்கள் | Medicinal properties of Neem

வேப்ப மரங்கள் பொதுவாகவே அதிக அளவு பயன்களை தொடக்கூடிய ஒரு மரமாக விளங்கி வருகிறது. இந்த மரத்தில் அதிக அளவு கிருமி நாசினியை தடுக்கக்கூடிய ஒரு மரமாக இருக்கிறது. மேலும் இந்த மரத்தின் இலைகள் பூக்கள் மற்றும் இதனுடைய கிளைகளை கூட நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகிறோம். பொதுவாக இந்த வேப்ப மரத்தின் குச்சிகளை நாம் பல் துலக்குவதற்கும் பயன்படுத்துகிறோம். இதன் மூலமாக நமது பற்கள் மற்றும் வாய் பகுதிகளில் உள்ள கிருமிகளை இது தடுக்கிறது.

வேப்ப மரத்தின் பாகங்கள் அனைத்துமே கசப்பாகத்தான் இருக்கும் ஆதலால் மக்கள் பயன்படுத்துவதற்கு தயங்குவார்கள். ஆனால் வேப்பமரம் பல்வேறு மருத்துவ குணங்களை பெற்றிருப்பதால் அவசியமான ஒன்றாக இயற்கை மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.


இன்றளவும் நிறைய பேர் வேப்பங்குச்சி பயன்படுத்தி தான் பற்களை துலக்கி வருகிறார்கள். அதை விடுங்கள் வேப்பங்குச்சியை பயன்படுத்துவதை பார்த்து தான் இன்று நாம் பயன்படுத்தி வரும் செயற்கை பிளாஸ்டிக் பல்துலக்கி கண்டுபிடித்தார்கள்.

அது எப்படி என்று உங்களுக்கு தெரியாமல் இருக்கும் நான் அதைக்கான விளக்கம் கூறுகிறேன். அவர் நல்ல 

வேப்பங்குச்சியில் பல் துலக்குவது எப்படி? 

ஒரு நல்ல முதிர்ந்த வேப்ப மரத்தில் இருந்து உருளை வடிவில் நேரமாக இருக்கும் மரக் குச்சியை உடைத்து அதில் ஐந்து அல்லது ஆறு இன்ச் அளவில் நேரான குச்சியை உடைத்துக் கொள்ளவும். 

அதன் பிறகு அந்த குச்சியின் மேல் உள்ள தோலை உரித்து எடுக்க வேண்டும். ஏனென்றால் அப்படியே கடித்து பல் துலக்க ஆரம்பித்து விட்டால் வாய் கசக்கும். கசப்பு சத்துக்கள் நிறைந்துள்ள பொருட்கள் குச்சியின் தோளில் உள்ளது.

அதனால் அந்த தோலை உரித்து விட்டு உள்ளே வெள்ளை நிறத்தில் குச்சி இருக்கும். அதை கடித்து நார்களை பிரித்துக் கொள்ள வேண்டும். 

இப்பொழுது அந்த வேப்பங்குச்சியில் குச்சி நார்களை பயன்படுத்தி பல்லை தேய்த்து நன்கு பல் துலக்கினோம். வேப்பங்குச்சியில் இருந்து கசப்பு தன்மை வாயில் பரவி உள்ளே இருந்த கிருமிகளை அழித்தது. அந்த வேப்பங்குச்சியில் பல் துலக்கி வந்தால் நாம் சம்பாதிக்க முடியாது அது எப்படியாவது ஒரு சம்பாதிக்கும் பொருளாக மாற்ற வேண்டும் என கருதியவன் வேப்பங்குச்சி வடிவத்தில் செயற்கை பிளாஸ்டிக் பல் துலக்கியை கண்டுபிடித்து அதற்கு பல் பசை என்று தனியாக ஒன்று கண்டுபிடித்து நம்மை அதற்கு பழக்கமாக்கினான். 

நாமும் அதை பழகிக் கொண்டு இன்று பல் துலக்கி பல் பசை இல்லாமல் பல் துலக்கவே மாட்டார்கள். பிறகு 30 வயதிற்குள் பல் செட்டை மாட்டிக்கொண்டு திரிகிறார்கள்.

  பிளாஸ்டிக் பல் துலக்கிக்கும்     வேப்பங்குச்சிக்கும் இடையேயான   வித்தியாசம் :  

ஆதிகாலத்திலிருந்து நாம் வறட்டி சாம்பலை பயன்படுத்தி பல் துலக்கணும் மண் பயன்படுத்தி பல்துலகினோம் முக்கியமாக வேப்பங்குச்சி மற்றும் வேலமர குச்சி ஆலமர குச்சி இவற்றை பயன்படுத்தி தான் அதிகமாக பல் துலக்கி வந்தோம்.

அப்போதெல்லாம் பல் உறுதியாக இருந்தது 90 வயது கிழவனுக்கும் பல் விழாமல் உறுதியாக இருந்தான். ஆனால் இப்போது இந்த மூடர் கூட்டம் முன்னேற்றம் வளர்ச்சி நாகரிகம் என்ற பெயரில் செயற்கை பல் துலக்கியான பிளாஸ்டிக் பல்துலக்கி கொண்டு வந்தார்கள். இந்த பல்துலைக்குயில் செயற்கையாக உருவாக்கப்பட்ட வேதிப்பொருள்களால் ஆன பல் பசையை போட்டு பல் துலக்கினால் 40 வயதிற்குள் பல் கொட்டுவது உறுதி. 

அதிலும் குறிப்பாக இந்த செயற்கை பல் துலக்கியில் பல் துலக்கினால் ஈறுகள் பலவீனமாகி பல் உறுதி தன்மையை இழக்கிறது.

வேப்பங்குச்சியில் பல் துலக்குவதை விட பிளாஸ்டிக் பல் துலக்கியில் பல் விளக்குவது மிகவும் ஆபத்தானதும் கூட ஏனென்றால் அதில் பல்துலக்குவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள நார்கள் பிரிந்து பல் துலக்கும் போது வயிற்றுகுள் சென்றுவிட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு கூட ஆபத்தை விளைவிக்கலாம்.

வேப்பங்குச்சியின் பயனறிந்த விவசாயிகள் கிராமத்து வாசிகள் இன்றளவும் வேப்பங்குச்சியை பயன்படுத்தி தான் பற்களைத் துலக்கி வருகிறார்கள். வேப்பங்குச்சியில் பல் துலக்குவதால் அதில் உள்ள கசப்பு தன்மை பற்களில் சென்று பற்களுக்கு இடையே உள்ள கிருமிகளை விரட்டியடிக்கும். இது ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. 

ஆதலால் தான் பெரியம்மை தட்டம்மை வந்தவர்கள் அம்மை நோய் தீர வேப்பந்தழை மற்றும் மஞ்சத்தூள் சேர்த்த தண்ணீரில் தான் நாள்தோறும் குளிப்பார்கள். இந்த நடைமுறை கிராமப்புறங்களில் அதிகமாக பின்பற்றப்பட்டு வருகிறது. வேப்பந்தழையும் மஞ்சள் பொடியும் மிகச்சிறந்த கிரிமினியாசினியாக செயல்படுகிறது. 

காய்ந்த வேப்ப மரத்தின் இறகுகள் நன்றாக எரியக் கூடியது. ஆதலால் மக்கள் அதை அடுப்பு எரிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். இன்று விறகுகளை பயன்படுத்தி எரியூட்டும் அடுப்புகளை பார்ப்பதே அரிது; ஏனென்றால் மக்கள் அனைவரும் சிலிண்டர் முறையில் எரிவாயு அடுப்புக்கு மாறிவிட்டார்கள். 

0 Comments