மல்லிப்பூ செடி மற்றும் அதை பற்றிய தகவல்கள் | Jasmine plant and information about it

மல்லி பூ செடி என்பது அதிக அளவில் வளர்க்கப்படக்கூடிய பூச்செடி ஆகும் இந்த மல்லி பூச்செடியானது அதிக அளவில் அதனுடைய மார்களுக்காக வளர்க்கப்படுகிறது. இது ஒரு வகை புதர் மற்றும் கொடி இனமாகும். இது உலக அளவில் 200க்கும் மேற்பட்ட இனங்களை கொண்டுள்ளது. மல்லிப்பூவானது கலாச்சாரத்தில்  இருக்கக்கூடிய ஒரு பூவாகும். மல்லிகை பூவை நாம் அதிக அளவில் பயன்படுத்துகிறோம். 

மல்லிப்பூ என்றாலே தமிழக மக்களுக்கு மதுரை தான் முதலில் நினைவுக்கு வருகின்றன. மதுரையில் மல்லிகைப்பூ மிகவும் பிரபலமானது. இந்த மல்லிப்பூவினை நாம் தெய்வங்களுக்கு மற்றும் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்கள் போன்ற பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் இதை பயன்படுத்துகிறோம். மல்லி பூவானது மிகவும் அதிகளவில் நறுமணம் தரக்கூடிய ஒரு பூவாகும்.

இது தமிழகத்தில் பரவலாக பயிரிடப்பட்டு வருகின்றனர். மல்லி பூவானது வாசனை திரவியங்கள்,அழகு சாதன பொருட்கள் மற்றும் மருத்துவத்திலும் அதிகளவு பயன்படுத்தப்பட்ட வருகின்றன. இது பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய தாவரமாக உள்ளது.

மல்லிப்பூ பயன்கள்:

  • அதிகளவில் வாசனைக்காக பயன்படுத்துகிறோம். 
  • வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுகிறது. 
  • அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. 
  • மருத்துவ பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
  • மார்பு வீக்கம் குறைக்க மன நிம்மதியை அளிக்கவும் மல்லிப்பூ  பயன்படுகிறது.
  • மல்லிப்பூ சடங்குகள் மற்றும் பண்டிகைகளில் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வரக்கூடிய ஒரு பூவாக உள்ளது.
  • அலங்காரத்திற்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அறிமுகம்: 

  • மல்லிகைப்பூ வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் அதிகளவில் காணப்படுகிறது. 
  • குறிப்பாக ஆசிய மற்றும் ஆப்பிரிக்க பகுதிகளில் அதிகளவில் காணப்படுகிறது.

பூக்கும் பருவ காலங்கள்: 

  • மாசி முதல் பங்குனி மற்றும் சித்திரை முதல் ஆவணி வரை.
  • கார்த்திகை மார்கழி மாதங்களில் பூக்கள் குறைந்த அளவு உள்ளன.

மல்லி பூ செடியை எப்படி வளர்ப்பது? 

மண் வகை:

  • செம்மண் இதற்கு சிறந்தது 
  • மண்ணில் நாம் தொழு உரம் மண்புழு உரம் தேங்காய் நார்கள் உயிர் உரங்கள் சேர்த்தும் நாம் மண்ணை செடி நடுவதற்கு தயார் செய்யலாம்.

நாற்றுகளை தேர்ந்தெடுத்தல்: 

  • நாம் இதனை பெரிய பூச்செடிக்கு அருகில் இருக்கும் கன்றுகளை பச்சையாக வேர்கள் நிறைந்ததாக அதை பிடிங்கி நாம் சரியாக தயாரிக்க வேண்டும். 
  • நீங்கள் நர்சரி கார்டன் சென்று சரியான கன்றுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். 

நடுதல் முறை: 

  • ஒவ்வொரு செடிக்கும் குறைந்தபட்சம் 5 அடி ஆவது இடைவெளி விட்டு குழிகளை தோண்டி கொள்ள வேண்டும். 
  • பிறகு நீங்கள் வைத்திருக்கும் செடிகளை குழிகளில் வைத்து மண்ணை தள்ள வேண்டும். 
  • அதன் பிறகு வேர்கள் தெரியாத அளவிற்கு நீங்கள் மண்ணை நன்கு தள்ள வேண்டும். 
  • நட்டு முடித்தவுடன் செடிகள் அனைத்தும் சீரண இடைவெளியில் இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும். 

நீர்ப்பாசன முறை: 

  • செடிகளை நட்டு முடித்தவுடன் மண்ணை ஈரப்பதம் ஆகவே வைத்துக் கொள்ள வேண்டும். 
  • செடி வளர்ச்சிக்கு அதிக அளவில் நீர் விடக்கூடாது. 
  • நீங்கள் ஈரப்பதத்திற்கு ஏற்ப வாரத்திற்கு ஒருமுறை மட்டும் நீர் விட்டால் போதுமானது. 
  • நீங்கள் இந்த செடியினை சூரிய ஒளி அதிகம் இருக்கும் இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும். 
  • இல்லையென்றால் நிழல் பகுதிகளில் இந்த பூச்செடிகள் குறைவாகவே வளர்கின்றன.

களைகளை எடுத்தல்: 

  • நீங்கள் செடிக்கு இடையில் உள்ள தேவையற்ற களைகளை நீக்க வேண்டும். செடிகளை நன்கு பராமரிப்பு செய்துவர வேண்டும். 
  • அடிக்கடி இயற்கை உரங்களை பயன்படுத்தி வர வேண்டும்.
  • இதன் மூலம் செடிகள் மிகவும் செழிப்பாக வளர்கின்றன. 
  • நீங்கள் புளித்த தயிர் மற்றும் தேங்காயை அரைத்து வாரத்திற்கு ஒரு முறை செடிமேல் தெளித்து வந்தால் செடியில் பூக்கள் நன்கு பூக்கும்.

கிளைகளை அகற்றுதல்: 

  • செடிகள் வளர்ந்தவுடன் அதிகளவில் பரவலாக இருந்தால் நீங்கள் தேவையற்ற கிளைகளை அகற்ற வேண்டும். 
  • இல்லையென்றால் செடிகள் புதிய வளர்ச்சிக்கு இது தடையாக இருக்கும். 
  • நீங்கள் தேவையற்ற கிளைகளை அடிக்கடி நீக்குவதன் மூலம் புதிய கிளைகள் தோன்றி மறுபடியும் பூக்கள் பூக்க தொடங்குகின்றன.

பூச்சிகள் மற்றும் நோய் தாக்கத்திலிருந்து செடிகளை பாதுகாத்தல்: 

  • இலையில் பச்சை பேன்,பச்சைப்புழு,மொட்டு புழு போன்றவைகளுக்கு நீங்கள் வேப்ப எண்ணெய் மற்றும் வேப்பம் புண்ணாக்கு கரைசலை பயன்படுத்தி நீங்கள் இந்த பூச்சியின் தாக்கத்திலிருந்து செடியினை பாதுகாக்கலாம். 

வேர் அழுகுதல்: 

  • நீங்கள் செடிக்கு அடியில் அதிக அளவு நீரினை தேங்க விடக்கூடாது. 
  • இதனால் வேர்கள் அழுகி செடிகள் அழிந்து விடுகின்றன.
  • இலை சுருட்டு நோய் நீங்கள் இதற்கு புளிச்ச தயிர் தெளிப்பதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம். 

                            "அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு"

0 Comments