இந்த வெத்தலை வேலி கிழங்கு என்பது பொதுவாகவே மரங்களில் இயற்கையாகவே படர்ந்து வரக்கூடிய ஒரு கொடி வகையாகும். இதை நான் விவசாய நிலங்களில் நாம் பயிரிட்டு கூட அறுவடை செய்யலாம். இந்த எத்தனை வேலிக் கிழங்கு ஆனது நமது உடலுக்கு அதிக அளவு சத்துக்களை தரக்கூடிய ஒரு கிழங்கு வகையாகும். எனவே நீங்கள் இந்த கிழங்கு சாப்பிட்டால் மிகவும் உடல் நலம் ஆரோக்கியமானதாக இருக்கும். இது பெரும்பாலும் கிராமப்புற பகுதிகளில் உள்ள காடுகளில் இயற்கையாகவே காணப்பட்டு வருகிறது. நீங்கள் இந்த கிழங்கினை அதன் வேரில் தோண்டி எடுக்கும் பொழுது கிழங்கு ஆனது உங்களுக்கு தெரியும்.
இந்த கிழங்கின் கொடி இலைகள் வெற்றிலை போல் இருப்பதால் இதில் வெத்தலை வேலிக்கிழங்கு என்று அழைக்கிறார்கள். இருந்தாலும் பல பகுதிகளில் வெத்தலை வள்ளி கிழங்கு என்றுதான் அழைக்கிறார்கள். நீங்கள் இந்த கிழங்கு பார்த்திருக்கிறீர்களா? உங்கள் பகுதிகளில் இந்த கிழங்கை எப்படி அழைக்கிறார்கள் என்று கூறுங்கள். மேலும் இந்த குடியானது அடர்ந்த பச்சை நிறத்தில் காணப்படுகின்றன.
இந்த கிழங்கின் தண்டனது மிகவும் மெலிதானதாகவும் இருக்கின்றன. நீங்கள் இந்த கிழங்கின் வேர் பகுதியை கண்டறிந்து அதனை நீங்கள் சுற்றி தோண்டும் பொழுது இந்த கிழங்கானது உங்களுக்கு தென்படுகிறது. நீங்கள் அதனை மிகவும் பாதுகாப்பானதாக சுற்றி தோண்டி அந்த கிழங்கினை நீங்கள் மிகவும் பொறுமையாக மேல எடுத்து அந்த கிழங்கினை சமைத்து சாப்பிடலாம். நீங்கள் அதனை இப்படியே பச்சையாக சாப்பிட்டால் கூட ஒரு சிலருக்கு பிடிக்கும். அதனை நீங்கள் வேகவைத்து உப்புகள் சேர்த்து கூட சாப்பிடலாம்.
இந்த கிழங்கு வளர்ச்சி காலம் மூன்று மாதத்தில் இருந்து ஆறு மாதங்கள் வரை கூட இருக்கலாம். ஒருமுறை நட்டு விட்டால் 6 மாதங்களுக்கு பிறகு தான் கிழங்கை தோண்ட முடியும். கிழங்கு கொடி அனைத்தும் காய்ந்து சுருண்டு கீழே விழுந்த பிறகு தான் கிழங்கு முற்றியதாக நாம் அறியலாம். அதன் பிறகு தோண்டினால் கிழங்கை வெளிய எடுக்க முடியும்.
இந்த வகை கிழங்குகள் மண்ணின் அடியில் நேர்ந்த தூரம் வரை கூட செல்லலாம். ஆதலால் மிகவும் ஆழமான முறையில் மண்ணை தோண்டி எடுத்தால் மட்டுமே இந்த கிழங்கை முழுவதுமாக வெளியே எடுக்க முடியும்.
கிழங்கு நடும் முறை :
இந்தக் கிழங்கை இரண்டு வகைகளில் நடலாம்.
1) கிழங்கு மூலம் நடுதல்
2) காய் மூலம் நடுதல்
இந்த இரண்டு வகைகளில் எந்த முறையில் நட்டாலும் வெத்தலை வேலி கிழங்கு முளைக்கும். இந்த இரண்டு முறைகளைப் பற்றி விரிவாக காண்போம்.
கிழங்கை நடுவதற்கு முன் தயார் செய்து வைத்திருக்க வேண்டியவை :
இலங்கை நடுவதற்கு முன் ஓரிடத்தில் நிலத்தை பண்படுத்திருக்க வேண்டும். அதாவது ஏற்கனவே நடுமிடத்தில் பள்ளம் வெட்டி
1) கிழங்கு மூலம் நடுதல் :
இந்த முறையில் நாம் இந்தக் கொடியை நடுவதற்கு கிழங்கு மட்டும் போதுமானது. நாம் தோண்டி எடுத்த இலங்கை சிறு சிறு பகுதிகளாக வெட்டி அதை மாட்டு சாணத்தில் தோய்த்து பிறகு எடுத்து மண்ணில் மேல் பகுதியில் வைத்து லேசாக மூடிவிட்டால் போதுமானது.
2) கிழங்கு கொடியை வளர்த்தல் :
இந்த வெத்தலை வேலி கிழங்கை தோட்டத்தில் வளர்ப்பதற்கு ஒரு பந்தல் தேவைப்படும். ஏனென்றால் இது கொடியாக கிளைத்து பரந்து விரிந்து வளரக்கூடியது. ஆதலால் கொம்புகளை பயன்படுத்தி பந்தல் தயாரித்து விட்ட பிறகு கிழங்கு நட வேண்டும் அப்போதுதான் கிழங்கு கொடி பரந்து வளர்வதற்கு ஏற்றதாக இருக்கும். இல்லையென்றால் ஒரு மரத்தின் அடியில் கொடியை நட்டுவிட்டால் இன்னும் சிறப்பு.
வெத்தலை வேலி கிழங்கை தோண்டி எடுக்கும் முறை :
இந்த கிழங்கை தோன்றுவதற்கு முன் கடப்பாரை மண்வெட்டி எடுத்துக்கொண்டு மெதுவாக மேலே ஆராய வேண்டும். அதற்கு ஒரு குச்சி மட்டும் போதுமானது லேசாக கிழங்கு எதுவரை ஆழமாக சென்றுள்ளது என்பதை பார்த்துக் கொண்டு அதற்கு ஏற்ப ஆழமாக தோண்டினால் தான் கிழங்கை முழுமையாக வெளியே எடுக்க முடியும்.
கிழங்கு தோண்டுவதற்கு மண் பொல பொலவென்று அழகாக தோன்றுவதற்கு ஏற்ற மண்ணாக இருக்க வேண்டும். களிமண் அல்லது மிகவும் இறுகமான மண்ணில் இந்த கிழங்கை நட்டுவிட்டால் கிழங்கை தோண்டுவது மிகவும் கடினம். ஆதனால் வண்டல் மண், சரளை மண் செம்மண், மணல் உள்ளிட்டவற்றில் இந்த கிழங்கை நடுவது மிகவும் சிறந்தது.
கிழங்கை வேகவைக்கும் முறை :
தோண்டிய வெத்தலை வேலி கிழங்கு நன்கு கருப்பு நிறத்தில் கடினமாக இருக்கும். அதை கழுவி மண்ணை நீக்கி விட்டு இரண்டு மூன்று துண்டுகளாக உருளை வடிவத்தின் வெட்டி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இந்த கிழங்கை போட்டு கொஞ்சம் உப்பை போட்டு வேக வைத்தால் சில நிமிடங்களில் கிழங்கு வெந்து சாப்பிடுவதற்கு தயாராகிவிடும்.
அதன் பிறகு கருப்பு நிறத்தில் இருக்கும் வெத்தலை வேலி கிழங்கின் தோலை உரிக்கும் போது கிழங்கின் உள்ளே ரோஜா பூ நிறத்தில் ரோஸ் கலரில் இருக்கும் அதனுள் கிழங்கு வெள்ளை வெளியேறு என்று மாவு போல இருக்கும். சுவைத்து சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும். நீங்களும் முடிந்தால் இந்த கிழங்கை வளர்த்து சாப்பிடுங்கள் அல்லது எங்கேயாவது கிடைத்தால் வாங்கி சாப்பிடுங்கள். அருமையாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது.
கிராமப்புறங்களில் இந்த கிழங்கு அதிகமாக பயிரிடப்படுகிறது. ஆனால் நகர்ப்புறங்களில் இந்த கிழங்கை பயிரிடுவது மட்டுமல்லாது சந்தையில் கூட பார்க்க முடியாது. இது ஒரு அரிய வகை கிழங்கு. ஆதலால் நகரத்தில் வசிப்பவர்கள் சிலர் தேடிச் சென்று இந்த கிழங்கை வாங்கி சாப்பிடுகிறார்கள். இந்தக் கிழங்கினை விரும்பி சாப்பிடும் நபர்கள் உடல்நலம் ஆரோக்கியமிக்கவராக காணப்படுகிறார்கள்.
உங்களுக்கு இந்த கிழங்கை சாப்பிடுவதற்கு போல் இருந்தால் நீங்கள் கிராமப்புற பகுதிகளில் இந்த கிழங்கு ஆனது அதிகளவில் காணப்பட்டு வருகிறது. நீங்கள் சென்று அதை வாங்கி சாப்பிடலாம். இந்த கிழங்கில் அதிகப்படியான மாவு சத்துக்களும் இரும்பு சத்துகளும் நிறைந்தும் காணப்படுகின்றன. நீங்கள் காட்டுப்பகுதிகளில் செல்லும் பொழுது இந்த கிழங்கு ஆனது நிறைய இடங்களில் இயற்கையாகவே வளர்ந்து காணப்படுகிறது.
இதை சாப்பிட விரும்புவர்கள் காட்டுப்பகுதியில் கிடைக்கின்ற கிழங்கை கூட எடுத்துக் கொண்டு வந்து சாப்பிடலாம். இந்த கிழங்கு எனக்கு சாப்பிடுவதற்கு மிகவும் சுவையானதாகவும் இருக்கின்றன. கிராமப்புற பகுதிகளில் உள்ள மக்கள் இந்த கிழங்கினை மிகவும் ருசித்து சாப்பிடுகின்றனர். இந்தக் கிழங்கினை நாம் நமது விவசாய நிலங்களில் சிறந்த முறையில் பயிரிட்டு நாம் இதை சுவைத்து சாப்பிடலாம்.
0 Comments