தேனீக்கள் என்பது பூச்சி வகையை சேர்ந்த ஒரு உயிரினமாகும். இது கூடு கட்டி உயர்வாய்ந்து வரக்கூடிய ஒரு உயிரினமாகும். தேனீக்கள் பொதுவாக மரத்தின் கிளைகளில் தனது கூட்டினை கட்டி உயர்வு வாழ்கின்றன. தேனீக்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு வருகின்றன. தேனீக்கள் ஆனது பூக்களில் உள்ள மகரந்தங்களை சேகரிப்பதன் மூலம் தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கு அதிக அளவில் பயன்படுகிறது.
தேனீக்களின் வகைகள்:
ஆண் தேனீ 🐝:
பெரும்பாலும் ஆண் தேனியானது வேலை அதிகமாக செய்வதில்லை. ஆண் தேனியானது இனப்பெருக்கத்திற்கு மட்டுமே அதிகளவில் இருக்கின்றது. ஆண் தேனீக்கள் தனது கூட்டிலேயே இருந்து வருகிறது.
ராணி தேனி 🐝:
ஒரு தேன் கூட்டத்தில் ஒரே ஒரு ராணி தேனீ மட்டுமே இருக்கும். இதுவும் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே இருக்கிறது.
வேலைக்கார தேனீ 🐝:
வேலைக்கார தேனீக்கள் பெரும்பாலும் இனப்பெருக்கம் செய்வதில்லை இது மகரந்தம் சேகரித்தல் உணவுகளை வழங்குதல் தேன் கூடுகளை பராமரித்தல் போன்ற வேலைகளை செய்து வருகின்றன. இவ்வகையான தேனீக்கள் பெரும்பாலும் அதிக அளவு சுறுசுறுப்பாக இருக்கின்றன. அதனாலே இது வேலைக்காக தேனீக்கள் என்று கூறுவர். இவைகள் தேன் மற்றும் மெழுகு போன்ற பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றது.
தேனீக்களின் வாழ்க்கை முறை :
தேனீக்கள் ஒரு கூட்டாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றன. ராணி தேனீயானது முட்டையிடும் வேலையை செய்து வருகின்றன . ஆண் தேனீயானது இனப்பெருக்கம் செய்து கூட்டினை பாதுகாத்து வருகிறது. வேலைக்கார தேனி ஆனது கூடு கட்டுதல் குட்டிகளை பராமரித்தல் மற்றும் தேன்கரை சேகரித்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. தேனிக்கள் அனைத்தும் ஒற்றுமையாகவும் மற்றும் சுறுசுறுப்பாகவும் இருந்து வருகின்றன.
பூக்களின் மகரந்தங்கள்:
தேனீக்கள் பூக்களில் இருந்து மகரந்தங்களை சேகரிப்பதன் மூலம் அதன் கால்களில் மகரந்தங்கள் இருக்கின்றன இது மற்ற இடத்தில் விழும் பொழுது அங்கு புதிய தாவரம் தோன்றுகின்றன எனவே தாவர இனப்பெருக்கத்திற்கு அதிக அளவில் பயன்பட்டு வருகிறது.
உலகில் உள்ள உணவுப் பொருள்களின் பயிர்களின் அதிக அளவு தேனீக்கள் மூலமே பரவுகின்றன.
தேன்கூட்டின் அமைப்பு:
தேனீக்கள் அறுங்கோண வடிவில் கூடுகட்டி வருகின்றன. அளவெடுத்து கட்டினால் கூட அப்படி இருக்காது அந்த அளவுக்கு மிகவும் சிறப்பாக கூடு கட்டி வாய்ந்து வருகின்றன.
ஒரு தேன்கூடு ஒரு வருடத்திற்கு 30 முதல் 100 பவுண்ட் தேனை உற்பத்தி செய்கின்றன.
தேனீக்களின் உடலமைப்பு:
தேனீக்களுக்கு ஐந்து கண்கள் இருக்கின்றன. தேனீக்களுக்கு காதுகள் கிடையாது. இருந்தாலும் அசைவுகளை உணர்ந்து தேனீக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
தேனின் மருத்துவ குணங்கள்:
தேன் என்பது தேனீக்களால் பூக்களில் இருந்து மகரதங்களை சேகரித்து செரிமானம் செய்து சேகரிக்க கூடிய ஒரு இனிப்பான பொருளாகும்.
தேன் ஒரு இயற்கையான அற்புதமிக்க மருந்து பொருளாகும். இது இருமல் மற்றும் தொண்டை வலிக்கு மிகவும் சிறப்பாக தீர்வு அளித்து வருகிறது.
ஒரு தேனியானது அதன் வாழ்நாளில் ஒரு தேக்கரண்டி தேனை மட்டுமே சேகரித்து வருகிறது.
தேன் நமது உடலை வலிமைப்படுத்துகிறது.
தேன் நமது ரத்தத்தை தூய்மை படுத்தவும் உதவுகிறது. இதயத்தை பலப்படுத்தக் கூடிய ஒரு அற்புதமான மருந்தாக உள்ளது.
நமது உடலுக்கு அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
தேன் வளர்ப்பு முறை:
தேன் வளர்ப்பது ஒரு சிலருக்கு இயற்கை தொழிலாக உள்ளது. இதனை சிலர் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர் அதிகளவில் வருமானம் தரக்கூடிய ஒரு தொழிலாக இருக்கின்றது.
தேனீக்களை தேர்ந்தெடுத்தல்:
இந்திய தேனீ ஐரோப்பிய தேனீ பாறை தேனீ போன்ற தேனி வகைகள் பெரும்பாலும் வளர்க்கப்பட்டு வருகின்றன.
பெட்டிகள்: 8 முதல் 15 சட்டங்கள் கொண்ட பெட்டிகள் தேனி வளர்ப்புக்கு ஏற்றதாக இருந்து வருகிறது.
இடம் தேர்ந்தெடுத்தல்:
அதிக நிழல் தரும் இடம் தேவைப்படுகிறது.
பூச்சிகள் இல்லாத நீர் அதிகம் உள்ள இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அருகில் மகரந்தங்கள் தரும் செடிகள் மரங்கள் அதிக அளவு இருக்க வேண்டும்.
பராமரிப்புகள்:
தேனீக்களுக்கு அதிக அளவு நீர் தேவைப்படுகிறது எனவே அருகில் கிணறு அல்லது பெரிய தொட்டியில் ஏதாவது ஒன்று தண்ணீர் சுத்தமாக இருக்க வேண்டும்.
தேன் கிடைக்காத காலகட்டங்களில் தேனீக்களுக்கு சர்க்கரை பாகு கொடுக்கலாம்.
எறும்புகள் கரடிகள் பூச்சிகள் வராமல் தடுப்பதற்கு நாம் வேப்ப எண்ணெய் பயன்படுத்தலாம்.
ஆய்வுகள் :
ராணி தேனி செயல்படுகிறதா புழுக்கள் வளர்கின்றதா தேன் சேமிப்பு முறை நடக்கிறதா என்பதை நாம் கவனித்து வரவேண்டும்.
பூச்சி தாக்குதல் நோய் அறிகுறிகள் யாரவது இருந்தால் நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கொள்ள வேண்டும்.
அறுவடை முறை:
பெட்டிகளில் தேன் முதிர்ந்ததும் நாம் தேன் எடுக்கும் இயந்திரத்தை வைத்து தேனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மெழுகு பசை மற்றும் மகரந்தம் போன்றவை அதிக விலை போகக் கடியதாக உள்ளது.
0 Comments