ஈச்சமரம் பயன்கள் மற்றும் சிறப்பம்சங்கள் | Uses and benefits of Echamaram

ஈச்ச மரமும் அதனுடைய தகவல்களும் மருத்துவ குணங்களும்:

ஈச்சமரம் ஆனது அதிக அளவு காட்டுப்பகுதியிலும் கிராமப்புற பகுதிகளிலும் வளரக்கூடிய ஒரு மரமாகும். இது அதிக பயன்களை கொண்ட ஒரு மரமாகும். ஈச்சமரம் ஆனது இந்தியா,இலங்கை,நேபாளம்,பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் தானாகவே இயற்கையாக வளர்ந்து காணப்படுகிறது. இந்த ஈச்சமரம் ஆனது அதிக அளவில் வறட்சி பகுதிகளிலே வளருகின்றன. மேலும் இந்த ஈச்ச மரத்தில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இதனை நாம் இப்படியே மரத்தில் பழமாக மாறிவிட்டதும் நாம் பறித்து சாப்பிடலாம். இது மிகவும் இனிப்பு சுவையை உடையதாக இருக்கும். இதன் காயானது பச்சை நிறத்திலும் பழமானது மிகவும் அடர் சிகப்பு நிறத்திலும் காணப்படுகின்றன.

தமிழகத்தில் ஆறுகள்,ஓடைகள் மற்றும் ஊர் நிலைகளில் இந்த மரமானது அதிக அளவில் காணப்படுகிறது.ஈச்சம் பழம் என்பது ஒரு பூக்கும் இடத்தை சேர்ந்த ஒரு கலை குடும்ப தாவரமாகும். இந்த மரத்திலிருந்து வெல்லமும் தயாரிக்கப்படுகின்றன. இதன் ஓலைகள் பை போன்றவை தயாரிக்க பயன்படுகின்றன. தமிழகத்தின் இயல்பாக இந்த மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

இது பேரிச்சை மரத்தை போன்று இருக்கின்றன.இம்மரத்தில் ஆண் மரம் மற்றும் பெண் மரம் என இரு வகை உண்டு.இதில் பெண் மரங்களில் மட்டுமே பயன்கள் உருவாக்குகின்றனர் இந்த மரத்தை இலங்கையில் உள்ள சிங்கள மக்கள் வால் இந்தி என அழைக்கின்றனர். இம்மரமானது திருமண நிகழ்வுகளில் அலங்காரமாக கொத்து கொத்தாக தொங்கவிட்டு பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றமாக காணப்படுகின்றன.வீடுகளிலும் கிராமப்புறங்களிலும் உள்ள மக்கள் பெரிதும் ஈச்சம் பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர். இதனுடைய மரத்தின் மேல் உள்ள பழங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளது.

இதனுடைய காய்கள் அடர் பச்சை நிறத்தில் காணப்படுகின்றன.சிறிது நாட்கள் கழித்து இதனுடைய காய்கள் மஞ்சள் நிறமாக மாறுகின்றன.அதன் பிறகு இதன் காய்கள் நன்கு சிவப்பு நிறமாக மாறும் வரை நான் காத்திருக்க வேண்டும் பின்பு மரத்தின் மேல் இருந்து தானாகவே கீழே பழங்கள் வீழ்ந்துவிடும். அதை நாம் எடுத்து சாப்பிடும் போது அதிக அளவு இனிப்பு சுவை உடையதாக இருக்கின்றன. 

ஈச்ச மரங்களில் இருந்து குச்சிகளை கொண்டு நாம் கூடைகளை பின்னலாம். ஈச்சமரம் ஒரு பாலைவன பயிராகும். இதற்கு சிறிதளவு தண்ணீரை போதுமானது. மனப்பாங்கு நேரத்தில் இது அதிக அளவில் வளரக்கூடியது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் சிறிது இது பயிரிடவும் பயன்படுகின்றன. தமிழ்நாட்டில் தர்மபுரி பகுதியில் ஒரு விவசாயி இதை பயிராகவே பயன்படுத்தினர்.

ஈச்ச மரத்தின் சிறப்பு அம்சங்கள்: 

ஈச்ச மரத்தின் உயரம்: ஈச்ச மரங்கள் பெரும்பாலும் 4 முதல் 20 மீட்டர் வரை வளருகின்றன.

இலைகள்: ஈச்ச மரத்தின் இலைகள் மிகவும் நீளமாகவும் வளைந்த ஓலைகளாகவும் காணப்படுகின்றன இந்த இலைகள் நுனிகள் மிகவும் முட்கள் போன்று கூர்மையாக காணப்படுகின்றன.

பூக்கள்: ஈச்ச மரத்தின் பூக்கள் ஆண் மற்றும் பெண் மரங்களில் தனித்தனியாக பூக்கள் பூக்கின்றன. 

பழங்கள்: ஈச்ச மரத்தின் பழங்கள் முதலில் அடர் பச்சை நிறமாக உள்ளன பின்பு மஞ்சள் நிறமாக மாறுகின்றன பிறகு சிறியதாக சிவப்பாக தோன்றுகின்றன இறுதியில் அட சிவப்பு நிறமாக மாறும் இதுவே நாம் சாப்பிட தகுதியானது. 

ஈச்ச மரத்தின் பயன்பாடுகள்: 

பழங்கள்: 

  • ஈச்ச மரத்தின் பழங்கள் ஈச்சம்பழம் என்று அழைக்கப்படுகின்றன. 
  • இவற்றில் அதிக அளவு நார்ச்சத்து இரும்பு சத்து மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. 

ஓலைகள்: 

  • ஈச்ச மரத்திலிருந்து கிடைக்கும் ஓலைகள் கூடை துடப்பம் மற்றும் பாய் போன்றவர்கள் தயாரிக்க அதிக அளவில் பயன்படுகின்றன. 

விறகு: 

  • ஈச்ச மரத்தின் அடி மரம் வீடுகள் மற்றும் செங்கல் சூளைகளில் அதிக அளவில் எரிபொருளாக பயன்படுகின்றன.

ஈச்சம் பழத்தின் மருத்துவ குணங்கள்: 

  • ஈச்சம் பழம் ரத்தத்தை சுத்தம் செய்கிறது. 
  • நமது உடலுக்கு இரும்பு சத்து அதிக அளவில் தருகிறது. 
  • கபத்தை குறைக்கின்றன 
  • இருமல் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிற்கும் நன்கு பயனுள்ளதாக உள்ளது. 
  • செரிமானத்திற்கு உதவுகிறது. 
  • உடல் வெப்பத்தினை குறைக்கின்றன. 
  • நமது உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதற்கும் பயன்படுகிறது. 

இயற்கை மற்றும் மக்களின் பயன்கள்: 

  • ஈச்சமரம் ஆனது இதனுடைய வேர்கள் இலைகளும் மண்ணை கட்டி வைத்து மண்ணின் அரிப்பை தடுக்கின்றன. 
  • இது ஒரு பசுமை மரமாகவும் சுற்றுசூழலை பாதுகாக்கும் மரமாகவும் காணப்படுகின்றன. 
  • கிராமப்புற மக்களின் வாழ்வியலில் நிறைவான ஒரு வாழ்வாதார மரமாக உள்ளது. 
  • ஈச்சமரம் நிலத்தடி நீரை பாதுகாக்கின்றன.
  • ஈச்சமரம் ஆனது உண்மையில் இயற்கையின் ஒரு அதிசய பரிசாக உள்ளது.

" தாழ்வு மனப்பான்மையும் பயமும் முன்னேற்றத்தை தடை செய்கின்றன"

0 Comments