சிட்டுக்குருவி பற்றிய தகவல்கள்:
சிட்டுக்குருவி (House Sparrow) என்பது உலகம் முழுவதும் காணப்படும் ஒரு சிறிய பறவை இனமாகும். இது மனித குடியிருப்புகளோடு நெருக்கமாக வாழும் அதனால் நகரங்களிலும் கிராமங்களிலும் சிட்டுக்குருவிகளை நாம் எளிதாக காண முடியும். சிட்டுக்குருவிகள் பொதுவாக சிறிய கூட்டமாக வாழ்கின்றன. சிட்டுக்குருவிகள் என்பது இயற்கையின் நமது கொடுத்த அற்புத நன்மை தரக்கூடிய ஒரு பரிசாகும்.
மேலும் இவை உலகெங்கிலும் காணப்படுகின்றன.இவை மனிதர்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டது. சிட்டுக்குருவிகள் ஆண் பறவையில் இருந்து பெண் பறவை வேறுபட்டு இருக்கும். சிட்டுக்குருவி உடலானது மிகவும் சிறிதாக இருக்கும். சிட்டுக்குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகள் ஆகும். இவற்றை செல்லப் பறவைகளாக நாம் வளர்க்க முடியும். சிட்டுக்குருவிகளின் இனமானது தற்போது அழிந்து கொண்டே வருகிறது. எனவே நாம் சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சிட்டுக்குருவிகள் இனம் காணாமல் போய்விடும். இவையெல்லாம் இயற்கை நமக்கு கொடுத்த ஒரு அற்புத பரிசாகும்.
சிட்டுக்குருவிகள் பெரும்பாலும் மரத்திலும் வீடுகளின் மறைவான பகுதியிலும் வைக்கோல்,சிறிய குச்சிகள் போன்ற மெல்லிய பொருட்களைக் கொண்டு தனது கூடுகளை கட்டி வசிக்கின்றன.இவற்றின் கூடுகள் சிறிய வடிவில் இருக்கும்.சிட்டுக்குருவிகள் குளிர்காலத்தில் மிகவும் கூட்டமாக ஒரு புதரில் சேர்ந்து தனது இரவை முடித்து வருகிறது. சிட்டுக்குருவானது முட்டை இட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன.
ஒரு சிட்டு குருவி அதிகபட்சம் 3 முதல் 5 முட்டைகள் வரை இடுகின்றன. இதனுடைய முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும்.குஞ்சுகள் பெரிதாகும் வரை கூட்டிலேயே சிட்டுக்குருவிகள் வளர்கின்றன. சிட்டுக்குருவிகள் பரக்கத் தொடங்கியவுடன் தனியாகவே பிரிந்து பறக்க தொடங்குகின்றன. இந்த காலத்தில் மனிதர்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாற்றங்களால் உலகம் முழுவதும் மரங்களும் பறவைகளும் அழிந்தும் மிகவும் குறைந்தும் வருகின்றன.
தற்போது பல நகரங்களில் இவை மொத்தமாக அழிந்துவிட்டன.நமது மக்கள் பேசும் அலைபேசியில் இருந்து வரும் (நுண்ணலைகள்)மற்றும் மின்காந்த அலைகளின் தாக்கம் சிட்டுக்குருவி இனத்தின் இனப்பெருக்க மண்டலத்தை தாக்கி அவற்றை மலடாக மாற்றி விடுவதால் சிட்டுக்குருவிகளின் இனமே முழுவதும் அழிவை நோக்கி செல்கிறது.
சிட்டுக்குருவியின் உடல் அமைப்பு மற்றும் இனப்பெருக்கம்:
சிட்டுக்குருவியின் சராசரி நீளம் சுமார் 16 சென்டிமீட்டர் மற்றும் எடை 24 முதல் 39 கிராம் வரை இருக்கும். ஆண் மற்றும் பெண் குருவிகள் வண்ணத்தில் வேறுபடுகின்றன. ஆண் சிட்டுக்குருவிகள் சாம்பல் மற்றும் கருப்பு நிறங்களில் பிரகாசமாக காணப்படுவார்கள்.பெண் சிட்டுக்குருவிகள் மங்கலான பழுப்பு மற்றும் சாம்பல் நிறங்களில் இருப்பார்கள். சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கமானது மிகவும் குறைவானதாக இருக்கும். இவைகள் பெரும்பாலும் வருடத்திற்கு இதன் இனப்பெருக்கமானது இரண்டு அல்லது மூன்று முறை மட்டும் இருக்கும். எனவே கூறி என் இனப்பெருக்கமானது மிகவும் ஒரு சில நேரங்கள் மட்டுமே இருக்கும்.
சிட்டுக்குருவிகள் சாப்பிடும் உணவு பழக்கம்:
சிட்டுக்குருவிகள் பெரும்பாலும் தானியங்கள் விதைகள் பூச்சிகள் மற்றும் சிறிய உயிரினங்களை தனக்கு உணவாக எடுத்துக் கொள்கின்றனர் அவை மனிதர்களின் உணவுக் கழிவுகளையும் உண்ணக்கூடியவை எனவே நகரங்களில் வாழ்பவர்களுக்கு ஏற்றபடியே தங்களை சிட்டுக்குருவிகள் மாற்றிக் கொள்கின்றன.
வாழ்விடம் மற்றும் சமூக நடத்தை:
சிட்டுக்குருவிகள் பொதுவாக குழுக்களாக வாயும் சமூகப் பறவைகள் ஆகும் மரங்கள் வீடுகளின் குறைகள் மற்றும் சுவர்களின் ஓரம் போன்ற இடங்களில் கூடுகட்டி வாழ்கின்றன. சிட்டுக்குருவிகள் சிப் சிப் எனும் தனித்துவமான ஒளியால் அடையாளம் காணப்படுகிறது.
சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு நிலை மற்றும் எதிர்கொள்ளும் சவால் நிலைகள்:
சிட்டுக்குருவிகள் உலகில் பல இடங்களில் எண்ணிக்கையில் பெருமளவு குறைந்த வருகின்றன.காரணம் நகரமயமாக்கல் செல்போன் டவர்களின் கதிர்வீச்சு பூச்சிக்கொல்லிகள் போன்றவை இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றன.இதை உணர்த்தும் வகையில் மார்ச் 20 உலக சிட்டுக்குருவி தினமாக கொண்டாடப்படுகிறது.
கலாச்சாரத்தின் சிட்டுக்குருவி: தமிழ் இலக்கியங்களில் சிட்டுக்குருவி குறித்து பல குறிப்புகள் இருக்கின்றன பாரதியார் தனது கவிதையில் இதன் சுறுசுறுப்பையும் அழகையும் அருமையாக பதிவு செய்துள்ளார். சிட்டுக்குருவிகள் சிறிய பறவையானாலும் சிட்டுக்குருவி மனித வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது நம்மைச் சுற்றியுள்ள இயற்கையை பாதுகாக்கும் முயற்சியில் இது போன்ற பறவைகளையும் நாம் பாதுகாப்பது மிகவும் ஒரு பொறுப்பான செயலாகும்.
சிட்டுக்குருவிகள் நீங்கள் வசிக்கும் இடத்தில் இருக்க வேண்டும் என்றால்! இதைச் செய்யுங்கள்!
கூடு அமைக்கவும்: முதலில் மரப் பெட்டி அல்லது மூங்கில் குழல் போன்றவற்றில் சிறிய ஓரங்களை உருவாக்கி சுவரில் அல்லது மரத்தில் தொங்கவிடலாம் சிட்டுக்குருவிகள் உள்ளே நுழைய சிறிதளவு ஓரத்தை வைக்க வேண்டும் கூடு அமைக்கும் இடம் அமைதியானதாகவும் மழை மற்றும் வெயிலிலிருந்து பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும்.
உணவு மற்றும் தண்ணீர்: சிட்டுக்குருவிகளுக்கு நாம் கம்பு திணை அரிசி போன்ற தானியங்களை ஒரு தட்டில் போட்டு வைக்கலாம் அருகில் ஒரு சிறிய பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரும் வைக்க வேண்டும் வெயில் காலங்களில் இது சிட்டுக்குருவிகளுக்கு மிகவும் அவசியமானதாக இருக்கும்.
பூச்சிக்கொல்லிகளை தவிர்க்கவும்: சிட்டுக்குருவிகள் பூச்சிகளை உணவாக உண்ணும் எனவே நாம் நம் வீட்டில் பூச்சி மருந்துகளை அதிகம் பயன்படுத்தக்கூடாது.
மரங்கள் மற்றும் செடிகள்: நமது வீட்டின் அருகில் சிறிய மரங்கள் அல்லது செடிகள் அதிகமாக இருந்தால் சிட்டுக்குருவிகளுக்கு மேலும் பாதுகாப்பும் அது ஏற்படுத்தி தருகிறது எனவே இது சிட்டுக்குருவிகளுக்கு கூடு கட்டும் இடமாக சரியாக அமைகிறது.
பொறுமை மற்றும் கவனிப்பு: சிட்டுக்குருவிகளுக்கு உங்கள் வீட்டை பாதுகாப்பாக உணர வேண்டும்.சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் எடுத்துக் கொள்ளலாம்.ஆனால் சிட்டுக்குருவிகள் ஒருமுறை உங்கள் வீட்டிற்கு வந்துவிட்டான் தொடர்ந்து கேட்டுக் கொள்கிறீர்கள் வரும். இவை அனைத்தும் இயற்கையை நேசிக்கும் ஒரு அழகான முயற்சி தான்.
உங்கள் வீட்டில் சிட்டுக்குருவிகள் கூடுகட்டி குஞ்சைகளை வளரும் காட்சியை நாம் காண்பது மிகவும் மனதிற்கு அழகான அனுபவமாக இருக்கின்றன.
எனவே நீங்கள் சிட்டுக்குருவிகள் வாழ ஒரு கூடு அமைத்து தாருங்கள்!



0 Comments