பாம்பு மற்றும் அதன் தகவல்கள்:
பாம்புகள் என்பது உலகம் முழுவதும் பரவலாக காணப்படும் ஒரு ஆச்சரியமூட்டும் தன்மைகள் கொண்ட ஊர்வன வகையை சேரந்த ஒரு உயிரினமாகும்.பாம்புகள் மிகப் பழமையான மற்றும் பயமூட்டும் ஆனால் மிகவும் பயனுள்ள உயிரினம் ஆகும். உலகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பாம்பு வகைகள் இருக்கின்றன.இவற்றில் 600 வகை இனங்கள் நச்சு பாம்புகள் ஆகும்.
இது ஒரு முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறிய தலையும் கொண்ட ஒரு உயிரினமாகும். இதற்கு கால்கள் இல்லை ஆனால் இவைகள் தனது உடலால் நலத்தை முந்தி வந்து மிகவும் வேகமாக நகருகின்றன. சில வகை பாம்புகள் நீரிலும் நீந்திச் செல்லக்கூடிய திறன் உள்ளது. பாம்புகள் ஆனது தனது உணவுக்காகவும் தன்னை காப்பாற்றிக் கொள்ளவும் நிறைய பிடிக்கவும் தனது நஞ்சை பயன்படுத்துகின்றன. இந்தியாவில் சுமார் 270 வகை பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் 60க்கும் மேற்பட்ட விஷமுள்ள பாம்பு வகைகள் உள்ளன.
பாம்பின் உடலில் உள்ள தோல் ஆனது செந்தில்களால் சூழப்பட்டிருக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மட்டும் இந்த தோல் உரித்து விட்டு செல்கின்றன.இதனால் தங்களை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் பண்பை பாம்புகள் பெற்றுள்ளன. பாம்புகளுக்கு சுமார் 200 முதல் 400 முதுகெலும்புகள் உள்ளன. அனைத்து வகை பாம்புகளும் உன் உயிர்கள் ஆகும் இவைகள் சிறு விலங்குகளை தனக்கு உணவாக எடுத்துக் கொள்கின்றன.
எடுத்துக்காட்டாக சிறிய வகை ஊர்வனைகள்,எலிகள்,பறவைகள் மற்றும் அவற்றின் முட்டைகள் மற்றும் பூச்சிகள் ஆகியவற்றை தனக்கு உணவாக எடுத்துக் கொள்கின்றன.ராஜ நகம் என்ற பாம்பினம் மற்றும்
பாம்பு வேலையே உணவாக உட்கொள்கிறது பாம்புகள் பெரும்பாலும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.ஆனால் சில பாம்புகள் குட்டியும் போடுகின்றன.
நச்சற்ற சில பாம்பு வகைகள்:
- சாரைப்பாம்பு
- தண்ணீர் பாம்பு
- கொம்பேறி மூக்கன்
- வட அமெரிக்க கார்ட்டர் பாம்பு
- ஆனைக்கொன்றான்
- ராஜ நகம்
- கண்ணாடி வரியன்
- கட்டுவிரியன்
- சுருட்டைவிரியன்
- நாகப்பாம்பு
- கருப்பு மாம்பா
- பச்சை விரியன்
இந்திய வனச் சட்டம்:
இந்திய அரசானது வனச்சட்டம் 1972 இன் படி பாம்புகளை துன்புறுத்துவதோ அல்லது அதை கொள்வதோ ஒரு தண்டனைக்குரிய செயல் என்று கூறியது. இருப்பினும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வின்மையால் பெரும்பாலானோர் பாம்புகளை கண்டவுடன் அடித்து கொன்று விடுகின்றனர்.
விவசாய பயன்கள்:
பாம்புகள் எலிகள்,பல்லிகள்,பூச்சிகள் போன்றவற்றை பாம்புகள் உண்ணுவதால் பயிர்களுக்கு மிகவும் பாதுகாப்பாக உள்ளது.
சில முக்கிய அறிவுரைகள்:
- நீங்கள் பாம்பை கண்டால் அதை அடிக்க கூடாது
- அதற்கான இடத்தை விட்டு நீங்கள் விலகி விட வேண்டும்
- பிறகு வனத்துறை அல்லது பாம்பு பிடிக்கும் ஏதோ ஒரு நபரை அழைத்து அதை பிடித்து வனத்தில் விடவும்
பாம்பு உங்களை கடித்தால்:
- பாம்பு உங்களை கடித்தால் உடனே நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்
- பாம்பு என்ன பாம்பு என்று அடையாளம் தெரிந்திருந்தால் உங்கள் மருத்துவரிடம் அதை சரியாக கூற வேண்டும்.
- மருந்து அல்லது நாட்டு மருந்து ஏதோ ஒன்றை நீங்கள் தவறாக முயற்சிக்க கூடாது இப்படி முயற்சித்தால் அது ஆபத்தில் முடியும்.
பாம்புகளின் வாழ்விடம் மற்றும் அதனுடைய செயல்கள்:
- பாம்புகள் பெரும்பாலும் கை கால்கள் இல்லாதவையாக இருந்தாலும் அவை தனது உடலின் மூலம் சுலபமாக நடந்து செல்கின்றன.
- பாம்புகளானது வெப்பநிலை சார்ந்த உயிரினங்கள் என்பதால் தங்கள் உடல் வெப்பத்தை சுற்றி அடிப்படையில் கட்டுப்படுத்துகின்றன.
உணவுகள்:
- பாம்புகள் பெரும்பாலும் பார்வை மிகவும் குறைவாகவே இருக்கும்
- ஆனால் அவை தங்கள் நாக்கின் மூலம் வாசனை தெரிந்து சுற்றுச்சூழலை புரிந்து கொண்டு செயல்படுகின்றன
- பெரும்பாலான பாம்புகள் எலிகள்,பூச்சிகள் மற்றும் சிறிய உயிரினங்களை முழுவதுமாக விழுங்கும் தன்மை கொண்டது.
மருத்துவ பயன்கள்:
- ஆன்ட்டிவெனம் தயாரிக்க பயன்படுகிறது இது பாம்பு கடிக்கு எதிரான மருந்தாக உள்ளது
- பாம்பினுடைய விஷத்தின் மூலநோய்கள் மற்றும் புற்று நோய்கள் போன்றவற்றிற்கு பயன்படுகின்றன.
பாம்பை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்:
- கருப்பு மாம்பா என்ற பாம்பினம் உலகிலேயே மிகவும் வேகமாக ஊர்ந்து செல்லக்கூடிய பாம்பு வகையாகும்.
- பாம்பு வகைகளில் ராஜநாகமானது 22 அடி வரை வளரக்கூடியது மற்றும் இந்த பாம்பு இனமானது மற்ற பாம்புகளை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்கின்றன.
- சில பாம்பு வகைகள் இரண்டு ஆண்டுகள் கூட உணவின்றி உயிர் வாழும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.
பாம்பை நீங்கள் நேரில் பார்த்தால் என்ன செய்ய வேண்டும்?
- பாம்புகளை நீங்கள் நேரில் சந்திக்கும்போது
- உங்களுக்கு அதிக கவனம் தேவை மற்றும் நிதானமும் தேவை.
- நீங்கள் முதலில் பாம்பை கண்டவுடன் அசைவின்றி நிற்க வேண்டும் ஏனென்றால் பாம்பானது அதிர்வுகளை உணர்வதால் திடீர் அசைவுகள் அவற்றை தூண்டி விடுகின்றனர்.
- நீங்கள் பாம்பினை கண்டவுடன் அதனுடைய பாதையில் இருந்து விலகி விடுங்கள் ஏனென்றால் பாம்பு தானாகவே வழி மாறும் அதை நீங்கள் சீண்ட வேண்டாம்.
- சத்தம் போடக்கூடாது ஏனென்றால் அலறுவது போடுவது பாம்பை தூண்டி விடுகின்றன.
- நீங்கள் உங்களுடைய வீட்டுப் பகுதியில் பாம்பை கண்டால் தீயணைப்பு துறை அல்லது பாம்பு பிடி அவரை அணுக வேண்டும்.
0 Comments