பண்டைய கால நெற்பயிர் சாகுபடி முறைகள்:
நாம் பண்டைய காலங்களில் இயற்கை விவசாயம் எனது மிகவும் சிறப்பானதாக விளங்கி வந்தது. ஆனால் தற்பொழுது இருக்கும் விவசாய முறையானது அதிக அளவு ரசாயன கலவை மற்றும் நவீன இயந்திரங்கள் ஆகியவை நடப்பு விவசாயத்தில் இருக்கின்றன. ஆனால் பண்டைய காலங்களில் கைகள் மற்றும் மாடுகளை வைத்து விவசாயம் செய்து மிகவும் சிறப்பான முறையில் இயற்கை விவசாயம் முறையை பின்பற்றிய விவசாயம் செய்தனர்.
மேலும் அந்த காலங்களில் எந்தவித இரசாயனக் கடவையும் சேர்க்காமல் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி பயிர்களை வளர்த்து அறுவடை செய்தார்கள். இயற்கை விவசாயம் முறையானது மிகவும் சிறப்பானதாக இருக்கும். மேலும் பயிர்கள் மிகவும் சிறப்பானதாகவும் பாதுகாப்பாக மற்றும் சத்தாக வளர்கிறது. ஆனால் தற்பொழுது அதிகளவு யூரியாக்கள்,ரசாயன கலவைகள் போன்றவைகளை அதிக அளவில் பயன்படுத்தி பயிர்களில் உள்ள சத்துக்களை எடுத்து விடுகிறார்கள்.மண்ணில் உள்ள சத்துக்களையும் அழித்து விடுகிறார்கள்.
எனவே பண்டைய காலங்களில் உள்ள விவசாய முறையை போலவே பெயரிட்டால் மண்ணிற்கும் எந்த பாதிப்பும் இருக்காது மனிதர்களுக்கும் எந்த பாதிப்பும் இருக்காது. எனவே நீங்கள் பண்டைய கால விவசாய முறையை பின்பற்றி பயிர் செய்து வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.நாம் அந்த விவசாய முறையைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் பார்ப்போம்.
நிலத்தை தயார் செய்தல்:
- முதலில் மழை வந்த பிறகு நிலத்தை உழுவதற்கு தயார் செய்வார்கள்
- பண்டைய காலங்களில் மாடுகளைக் கொண்டு நிலத்தை உழுது பயிரிடுவார்கள்.
- மாடுகளைக் கொண்டு பின்னர் இரண்டு அல்லது மூன்று முறை உழுது நிலத்தினை தனித்தனியாக தண்ணீர் விடும் அளவுக்கு தயார் செய்து வைத்துக் கொள்வார்கள்.
- நிலத்தை மாட்டினை கொண்டு உழவு செய்து நிலத்தினை சமப்படுத்தி அதில் பசுந்தாள்கள்,இயற்கை உரம்,வேப்பம் புண்ணாக்கு,மாட்டுச்சாணி ஆகியவற்றை உரங்களாக நிலத்திற்கு சேர்த்துக் கொள்வார்.
விதையை தயார் செய்யும் முறை:
- தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான நெல் விதைகளை ஒரு கோணிசாக்கு கொண்டு நீரில் மூழ்க வைத்து விடுவார்கள்
- பிறகு நெல்களில் முலை கட்டியவுடன் அந்த நெல்களை எடுத்து அதனை கைகளைக் கொண்டு நீரில் தூவி விடுவார்கள்.
- அந்த நெல்கள் 15 முதல் 20 நாட்களில் வளர்ந்து விட்டதும் நடுவதற்கு தயாராகின்றன.
நடவு செய்யும் முறை:
- வளர்ந்த நாற்றுகளை எடுத்து நாம் வேப்பிலை,கோழி சாணம், மாட்டுச்சாணம் இடப்பட்ட நிலத்தில் நமது கையை கொண்டு நாட்டு நாற்றுகளை நாம் நிலத்தில் நட வேண்டும்.
- 4 முதல் 5 நாற்றுகளை சரியாக எடுத்து நாம் சரியான இடைவெளியில் நட வேண்டும்.
நீர்ப்பாசன முறை:
- பண்டைய காலங்களில் மழை தான் முதன்மை நீர் ஆதாரமாக இருந்து வந்திருந்தன
- பிறகு ஊர்களில் உள்ள குளங்கள்,நீர் வரத்து வாய்க்கால்,ஏரிகள்,அணைகள் போன்றவற்றை பயன்படுத்தி நீரை எடுத்து வாய்க்கால் மூலம் பாய்ச்சுவார்கள்.
- நடவு நட்ட உடன் முழங்கால் அளவுக்கு நாம் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும்.
- பழைய கால மக்கள் மழை இல்லாத காலகட்டங்களில் எருமை மாடுகளை கொண்டு மரச்சக்கரம் ஓட்டி அதன் மூலம் நீரினை எடுத்து வயலில் விடப்பட்டு நீர்ப்பாசனம் செய்தார்கள்.
கலைகளை அகற்றுதல்:
- சில நாட்களில் களைகள் நிலத்தில் வந்துவிடும் அதனை கைகளால் அல்லது மரக்கருவிகளால் கொண்டு அகற்றப்படுகிறது.
- சில நபர்கள் எருமைக்கழுவை நிறத்தில் ஊற்றி இயற்கை உணவாகவும் புல் கட்டுப்பாட்டுக்காகவும் பயன்படுத்தினர்.
உரம் பயன்படுத்தும் முறை:
- மாடுகளிடம் உள்ள சாணம்
- மூங்கில் இலை,பிற தாவர செடிகளை உரமாக பயன்படுத்தினர்.
- சுண்ணாம்பு கலவை,பஞ்சகவியம் போன்றவற்றையும் பயன்படுத்தினர்.
- பூண்டுகள்,வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து அதனை நன்கு அரைத்து அதனையும் நீரில் கலந்து தெளிக்கும் முறையும் பின்பற்றி இருந்தனர்
அறுவடை காலம்:
- நெல் அறுவடை ஆனதும் அதனை கைகளைக் கொண்டு அறுத்து அதனைக்கட்டி வரிசையாக அடுக்கி வைப்பார்கள்.
- அடுக்கி வைத்த நெல் கட்டுகளை தடி அல்லது கைகளைக் கொண்டு அல்லது மாடுகளை விட்டு மிதிப்பதன் மூலம் நெல்லை பிரித்து எடுப்பார்கள்.
- பிரித்த நெல்களை அடிக்கல் முறை மூலம் அரிசியாக பிரித்து எடுப்பார்கள்.
- சில நபர்கள் உரல்கள் மூலம் அரசியலை பிரித்து எடுப்பார்கள் அல்லது மாடுகள் கொண்டு அடிக்கல் முறை மூலம் சுற்றி சுற்றி வந்து அதன் மூலமும் அரிசி தனியாக பிரித்து எடுக்கப்படுகிறது.
- பிரித்தெடுக்கப்பட்ட வைகோல்களை மாடுகளுக்கு உணவாக பயன்படுத்துகின்றனர்.


.jpg)
0 Comments