மூட்டுவலி குணமாக இயற்கை மருத்துவ வழிமுறைகள் | Natural remedies to cure Arthritis

இன்றளவும் நிறைய பெண்மணிகளுக்கு ஆண்களுக்கு இருக்கும் முக்கியமான பிரச்சனை இந்த மூட்டு வலி தான். மூட்டு வலி ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது. இது பெண்களுக்கு தான் வரும்; ஆண்களுக்கு தான் வரும் என்று கூற முடியாது! அனைவருக்குமே வரக்கூடிய தொந்தரவு தான் இந்த மூட்டு வலி.

இந்த மூட்டு வலியை எப்படி சரி செய்வது என்று நிறைய பேருக்கு தலைவலியாக இருக்கும். இதற்கு பல சிகிச்சைகள் எடுத்து சோர்ந்து போய் இருப்பீர்கள்! ஏனென்றால் இந்த மூட்டு வலி எளிதில் வந்து போய்விடாது காலம் காலமாக நம்முடனே தங்கி நம்மளை பாடாய் படுத்தும்.

இந்த பதிவில் மூட்டு வலியை எப்படி இயற்கையான முறைகளில் விரட்டி அடிப்பது என்பதை பற்றி விரிவாக காண்போம்.

முதலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மூட்டு வலி எதனால் வருகிறது என்பதை பற்றி பார்ப்போம்.

மூட்டு வலி வருவதற்கான காரணம் :

  • நீண்ட நேரம் நடப்பதால் ஓடுவதால் மூட்டு வலி வருகிறது. 
  • கை கால்களை பயன்படுத்தி அதிகப்படியான வேலைகள் செய்வதால் கை கால்களில் உள்ள மூட்டுகளில் மூட்டு வலி ஏற்படுகிறது.
  • அதிகப்படியான சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மூட்டு வலி எளிதாக தாக்கிவிடும்.
  • இதய நோய் உள்ளவர்கள் அதிக தூரம் நடக்க முடியாத காரணத்தினால் மூட்டு வலி ஏற்பட்டுவிடும். 
  • உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் இந்த மூட்டு வலியால் எளிதில் பாதிக்கப்படுவார்கள்; ஏனென்றால் அவர்களால் நீண்ட தூரம் நடக்க முடியாது.

மூட்டு வலி நிவாரணம் : 

1. மூட்டு வலி என்பது ஒரு வகையைச் சார்ந்ததல்ல. மூட்டுக்கு மூட்டு மாறி மாறி வலிக்கும். எனவே நீங்களே தேர்வு செய்து மருந்து உபயோகியுங்கள். முடக்கத்தான் சூப். வாதநாராயணன் கீரை சூப். அகத்திக் கீரை சூப் ஏதாவது ஒன்றைத்தேர்வு செய்து சாப்பிடவும்.

2. கால்சியம் சத்துக் குறைவு, நோய் எதிர்ப்புத் தன்மை இல்லாமை. இளவயதில் உடற்பயிற்சி செய்யாமை போன்றவை மூட்டுவலிக்குக் காரணம். எனவே அசைவ உணவை தவிர்த்து அதிக காய்கறி. பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். கால்சியம் சத்து நிறைந்த பால் பொருட்களைச் சாப்பிட்டு வரவும். உப்பைக் குறைத்துக் கொள்வது நல்லது.

3. ஆறிப் போன புழுங்கல் அரிசி சாதத்தை உண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கு, கீழ்வாதம் மூட்டுவலி உண்டாகும். பச்சரிசி சாதத்தினால் உடல் வலிமை உண்டாகும். சிறுநீர் எரிச்சலும், பித்தமும் போகும். இதனுடன் சிறிது நெய் சேர்த்து உண்பது நல்லது. இல்லையென்றால் உஷ்ணத்தையும். வாயுவையும் உண்டாக்கும்.

4. காசுகட்டியை தேங்காய் எண்ணெயில் குழைத்து சேற்றுப்புண்ணுக்கு இடவும் அல்லது பழைய வெள்ளைத் துணியை (பருத்தி ஆடை) சுட்டு அச்சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழைத்து பாதங்களில் வெடிப்புகளில் தடவ குணமாகும்.

5. மஞ்சள், வசம்பு வகைக்கு 5கிராம். இதனை கைப்பிடி அளவு மருதோன்றி இலையுடன் சேர்த்து தண்ணீர் சேர்த்து மைபோல அரைத்து கால் ஆணி உள்ள இடத்தில் அடைபோல கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து துணியினால் இருக் கட்டிவிடவும். இதனை படுக்கப்போகும் முன் செய்யவும். மறுநாள் காலையில் அவிழ்த்து விடவும். இந்த மாதிரி நாம் தொடர்ந்து செய்து வரும் பொழுது நமக்கு இந்த வலியானது குணமாகிறது.

6. மாவிலங்கப்பட்டையை நீர்விட்டுக் காய்ச்சி. அதனை நன்கு சுத்தமாக காய்ச்ச வேண்டும் பிறகு நீங்கள் அதில் சிறிதளவு கரிய கோலத்தை சேர்த்து நீங்கள் உங்களுக்கு வலியுள்ள இடங்களில் தொடர்ந்து பயன்படுத்தினால் உங்களுக்கு அந்த வலியானது குணமடைந்து வருகிறது.

7. 50 கிராம் குங்குலியத்தை தூள் செய்து 500 கிராம் நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி பூசி வரவும்.

8. உளுந்தம் பருப்புடன் முடக்கத்தான் கீரையை கூட்டி துவையல் செய்து உண்ண வாத நோய்கள் & மூட்டுகள் வலிமை பெறும்.

9. பருவமடைந்த பெண்கள் & வலியுடன் பிரசவமான பெண்களுக்கு உளுந்துடன் சிறிது பனைவெல்லம் (கருப்பட்டி) சேர்த்து கஞ்சி அல்லது களி செய்து சூடாக தயார் செய்து தினமும் இரண்டு வேளை நீங்கள் தொடர்ந்து இதனை சாப்பிட்டு வர வேண்டும். இதனை ஆறவைத்தோ, இரவிலோ சாப்பிடக் கூடாது. இதன் மூலம் அவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கிறது. இதேபோல் நாம் இயற்கை முறையில் பயன்படுத்தி நான் உடலில் உள்ள பல்வேறு வகையான பிரச்சனைகளை சரி செய்யலாம்.

இனிமே நீங்கள் இயற்கை முறையில் உங்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை சரி செய்யலாம். எனவே அனைவரும் இயற்கை முறையையே பின்பற்றுங்கள். இயற்கை உணவை சாப்பிட்டால் உங்களுக்கு எந்த விதமான உடல் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. எனவே நீங்கள் உங்களுடைய உடல் நலத்தை நன்கு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய உடல் நன்றாக இருந்தால் தான் நீங்கள் வேலை செய்ய முடியும்.

                        "சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்"

0 Comments