வளர்ந்து வரும் நவீன விவசாய முறை | பருவதமலை விவசாயி

முன்பெல்லாம் விவசாயம் செய்வதற்கு ஏர் கலப்பை பூட்டி காளை மாடுகளை பயன்படுத்தி உழுதார்கள். தற்போது டிராக்டர் இயந்திரத்தை  உழவுக்கு பயன்படுத்துகிறார்கள்.

முன்பெல்லாம் உரங்களுக்கு ஆடு மாடுகளின் சாணத்தை போட்டு பயிர் வளர்த்தார்கள். உணவு ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் தற்போது ஆடு மாடு வளர்ப்பு குறைந்து செயற்கை ரசாயன உரங்களை பயிர்களுக்கு போட்டு வளர்க்கிறார்கள். ஆடு மாடு வைத்திருப்பவர்களே அந்த உரங்களை பயன்படுத்தாமல் இப்படி செயற்கை ரசாயன உரங்கள் பயிர்களுக்கு போடுவது வேதனையாக உள்ளது.

ரசாயன உரங்கள் போட்டால் காய்கறிகள் அல்லது பயிர்களின் மரபணு மாறி நிறைய நோய்கள் அதை சாப்பிடுபவர்களுக்கு உருவாகும். இதெல்லாம் தடுக்க இரசாயன உரங்கள் பயன்படுத்தக்கூடாது. 

ரசாயன உரங்கள் போடுவது மட்டுமல்லாமல் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயிர்களுக்கு தெளிகிறார்கள். அது பூச்சி மட்டும் கொல்லாது; அனைத்து உயிரினங்களையும் கொல்லும் ஆதலால் அது உயிர் கொல்லி என்று தன் அழைக்க வேண்டும்.

இப்படி நவீன விவசாய முறைகளில் நிறைய ஆபத்துகள் இருக்கிறது; இருந்தாலும் நிறைய நன்மைகளும் இருக்கிறது. 

உதாரணமாக செடிகளுக்கு இடையே வளர்ந்துள்ள களைகளை பிடுங்கும் இயந்திரங்கள் வந்துள்ளது. இதன் உதவியால் விவசாயிகள் களைகளை அகற்றி பயிர்களின் வளர்ச்சியை உற்பத்தியை அதிகரிக்கிறார்கள்.

முன்பெல்லாம் நெற்கதிர்களை அறுவடை செய்வது என்றால் கையில் அரிவாள். எடுத்து கதிர்களை அறுத்து  அறுவடை செய்வார்கள். ஆனால் தற்போது அறுவடை இயந்திரங்கள் இருக்கிறது. அந்த அறுவடை இயந்திரங்கள் நிலத்தில் இறங்கி தானே நெல்கதிர்களை அறுவடை செய்கின்றன. 

முன்பு கையில் அறுவடை செய்து மாடு விட்டு நிற்கதிர்களை பிரித்து எடுத்த போது அவ்வளவு நெல்மணிகள் வீணாகவில்லை. ஆனால் தற்போது அறுவடை இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யும் போது ஏகப்பட்ட நெல்மணிகள் நிலத்தின் சிதறி வீணாகிறது. என்ன செய்வது? மனிதர்களின் சோம்பேறித்தனத்தால் தொழில்நுட்ப வளர்ச்சியால் அந்த நெல்மணிகளை விவசாயிகள் கண்டு கொள்வதில்லை. 

இது போதாது என நெல் நடவு இயந்திரங்கள் தற்போது வந்துள்ளது. அதை பயன்படுத்தி ஆட்கள் நடவு செய்ததற்கு பதிலாக இயந்திரங்கள் சேற்றில் இறங்கி நடவு செய்கிறது. அந்த நடவுகள் ஒழுங்காக நடவில்லை. வெறுமனே நாற்றுகளே சொருகிக் கொண்டு செல்கிறது. 

நெற்கதிர்களை அறுவடை செய்த பின்னர் அந்த வைக்கோலை உருளையாக சுற்றி கட்டுகளாக மாற்றுவதற்கு இயந்திரங்கள் வந்துள்ளது. இந்த இயந்திரங்கள் மூலமாக தானாக வைக்கோல் சூழற்றப்பட்டு நூல்கள் சுற்றி கட்டு கட்டப்படுகிறது. 

இந்த வைக்கோல் கட்டில் உள்ள நூல் மாடு வாயில் சென்று அதை சாப்பிட்டால் உடம்புக்கு ஏகப்பட்ட கெடுதல் வேறு உள்ளது. இது எல்லாம் மனித சமூகம் புரிந்து கொள்ளாது. அவை வளர்ச்சியை வளர்ச்சி என்று அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

பிளாஸ்டிக் குழாய்களின் தண்ணீர் பயிர்களுக்கு தெளித்து வந்த நிலையில் தற்போது மனிதர்கள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சத் தேவையில்லை. அதற்கு பதிலாக தண்ணீர் பாய்ச்சும் இயந்திரங்கள் வந்துள்ளது. இல்ல இயந்திரங்கள் உதவியால் ஒரு ஏக்கர் மூலமாக இருந்தாலும் அதற்கு அரை மணி நேரத்தில் தண்ணீர் பாய்க்கப்படுகிறது.

இவ்வளவு தண்ணீர் உண்மையிலேயே பயிர்களுக்கு தான் பாய்ச்சப்படுகிறதா? என்று ஆராய்ச்சி செய்து பார்த்தால் அதில் பாதி நீர் வீணாக செல்கிறது. ஏகப்பட்ட தண்ணீர் செலவு செய்யப்படுகிறது. அதற்கு தண்ணீரே பாய்ச்சி விட்டு செல்லலாம் என்கிற நிலை அறிவார்ந்த விவசாயிகளுக்கு தோன்ற வைக்கும்.

மெல்ல யோசித்துப் பாருங்கள் விவசாய பெருமக்களே வளர்ந்து வரும் நவீன விவசாயம் என்கிற பெயரில் உங்களை சோம்பேறி தனம் ஆக்கி உங்கள் உழைப்பை வீணாக்கி அவர்களது கண்டுபிடிப்புகளை உங்களுக்கு வியாபாரம் செய்வது தான் அவர்களின் முக்கியமான நோக்கம். இது நோக்கி தான் நடந்து கொண்டிருக்கிறது இன்றைய விவசாய நிலை. 

மாட்டை ஒழித்தான் டிராக்டர் விற்பதற்காக; செயற்கை மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு வந்தான் ஏனென்றால் அந்த விதைகள் ஒருமுறை மட்டும்தான் பயிர் செய்ய முடியும் அதற்குப் பிறகு அந்த விதைகளை மீண்டும் பயன்படுத்த முடியாது அப்படி என்றால் கண்டிப்பாக விதைகளுக்கு அவனிடம் தான் மீண்டும் கையேந்த வேண்டி இருக்கும். இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும் உங்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள் இந்த நவீன பூச்சாண்டிகள்!

ஆதலால் விவசாய பெருமக்களே நவீன் விவசாயத்தை குறைத்து விட்டு முடிந்தவரை இயற்கையான விவசாயம் செய்து இயற்கையான உணவுப் பயிர்களை தயாரித்து நீங்களும் சாப்பிடுங்கள் மற்றவர்களுக்கும் உருவாக்கி கொடுங்கள்!

நண்பர்களே! உங்களுக்கு இயற்கை விவசாயத்தைப் பற்றி புரிந்து இருந்தால் இந்த நவீன விவசாயத்தைப் பற்றி உங்களுடைய கருத்து கருத்து தெரிவிக்கவும். 

மேலும் பல இயற்கை சார்ந்த வேளாண்மை சார்ந்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வலைதளத்தை பின் தொடரவும்..

நன்றி வணக்கம்!

0 Comments