காட்டு நெல்லிக்காய் மரம்:
காட்டு நெல்லிக்காய் மரம் என்பது இயற்கையில் தனித்தே வளர்ந்து வரும் அதிக மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு இலையுதிர் மரம் ஆகும்.இது பொதுவாக மலைப்பகுதிகளிலும் காடுகளிலும் மற்றும் செம்மண் நிறங்களிலும் அதிக அளவில் காணப்படுகின்றன.காட்டு நெல்லிக்காய் மரம் என்பது பசுமை மரங்களில் ஒன்றாகும்.
நம் தமிழ் நாட்டு மக்கள் பெரும்பாலும் காட்டு நெல்லிக்காய் விரும்பி சாப்பிடுகின்றனர்.காட்டு நெல்லிக்காய் பல நூற்றாண்டுகளாக மருத்துவ குணங்கள் மிக்க பணமாகவும் மரமாகவும் புழக்கத்திலிருந்து வருகின்றன. காற்று நெல்லிக்காய் மரம் வெப்ப மண்டல இந்தியா முழுவதும் காடுகளில் அதிக அளவில் காணப்படுகின்றன இதன் படங்கள் சதைப்பற்றுடன் உருண்டையாகவும் வெளிர் பச்சை அல்லது மஞ்சள் நிறமாகவும் காணப்படுகின்றன.நெல்லிக்காய் அளவு ஆறு பிளவுகள் கொண்ட காயாக உள்ளது.
மரத்தின் தகவல்கள்:
மரத்தின் உயரம்:
- பெரும்பாலும் நீ மரங்கள் 4 முதல் 12 மீட்டர் வரை வளர்கின்றன.
மரத்தின் இலைகள்:
- மரத்தினுடைய இலைகள் மிகவும் சிறியதாக இருக்கும்.
- இதனுடைய இலைகள் சீராக ஒரே ஒழுங்கில் இருக்கும்.
- மிகவும் நீளமான இலைகளை கொண்டிருக்கும்.
- இருபுறமும் மிகுந்த அடர்த்தியாக காணப்படுகின்றன.
மரத்தின் பூக்கள்:
- இந்த மரத்தின் பூக்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன.
காய்கள்:
- மரத்தின் காய்கள் உருண்டை வடிவத்தில் காணப்படுகின்றன.
- மேலும் பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நிறத்தில் காய்கள் இருக்கும்.
- இதனுடைய காய்களில் ஆறு கோடுகள் கொண்ட உருண்டையாக காணப்படுகின்றன.
- இதன் காய்கள் முதலில் பச்சை நிறத்தில் தொடங்கி பிறகு பயித்ததும் மஞ்சள் அல்லது பச்சை மஞ்சள் நிறமாக மாறுகின்றன.
- இது சதைப்பற்று மற்றும் சாறு நிறைந்தவை.
மருத்துவ குணங்கள்:
- நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்து காணப்படுகின்றன.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- ஆயுர்வேத மருந்துகளில் இது ஒரு முக்கியமான மூலிகையாக பயன்படுகின்றன.
- நெல்லிக்காய் புளிப்பு இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவைகள் கொண்டது ஊறுகாய் சாறு பொடி மற்றும் சில லேகியம் தயாரிக்க அதிக அளவில் பயன்படுகின்றன.
- இது கல்லீரல் நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது
- சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்துகிறது
- இது சிறுநீரக பாதிப்புகளை சரி செய்து சிறுநீரை சுத்தமாக வெளியேற்ற உதவுகிறது
- இதனுடைய இலைகளை அரைத்து தோளில் தடவினால் சிரங்கு மற்றும் சொறி போன்றவை குணமாகின்றன.
- சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கின்றனர்.
- தலைமுடி வளர்ச்சிக்கு இது அதிக அளவில் உதவுவதாக கருதப்படுகிறது.
- காட்டு நெல்லிக்காய் ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றன.
- கண் பர்வை குறைபாடு உள்ளவர்கள் சாப்பிடுவதற்கு நல்லது.
- மலச்சிக்கல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு நல்லது.
நெல்லிக்காய் மரம் எப்படி வளர்ப்பது?
நடவு காலம்: நெல்லிக்காய் ஐப்பசி கார்த்திகை மாதங்களில் நடவு செய்தால் விளைச்சல் மிகவும் சிறப்பாக இருக்கும்.
மரத்திற்கு இடைவெளி: நாம் ஒவ்வொரு மரத்திற்கும் சுமார் 15 அடி இடைவெளியில் விடுவது நல்லது.
பயன்படுத்தக்கூடிய உரங்கள்: இயற்கை உரமான மாட்டுச் சாணம் மற்றும் பஞ்சகவ்யம் பயன்படுத்தலாம்.
நீர்: ஆரம்ப காலங்களில் தினமும் நீர் தேவைப்படுகிறது பிறகு வளர்ந்த பிறகு மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை விட்டால் போதும்மானது.
மகசூல்: இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் காய்கள் காய்க்க தொடங்குகின்றன.
இப்படி எல்லாம் காட்டு நெல்லிக்காயை சமைத்து சாப்பிடலாம்!
நெல்லிக்காய் சாதம்:
- நெல்லிக்காய் நாம் நன்றாக கழுவி அதை துருவ வேண்டும்.
- இஞ்சி பச்சை மிளகாய் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து பின்பு நன்கு வதக்கி அதில் நாம் துருவி வைத்த நெல்லிக்காய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- பின்பு சாதத்தில் நாம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- கடுகு உளுந்து கடலைப்பருப்பு வேர்க்கடலை கருவேப்பிலை போன்றவற்றால் சேர்த்தும் தாளித்தும் சாப்பிடலாம்.
நெல்லிக்காய் ஊறுகாய்:
- நாம் நெல்லிக்காய் முதலில் வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெயில் கடுகு வெந்தயம் மிளகாய் தூள் பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து ஊறுகாய் நன்கு தாளித்துக் கொள்ள வேண்டும்.
- இந்த ஊறுகாய் நீண்ட நாள் பாதுகாப்பாக இருக்கும்.
நெல்லிக்காய் ஜூஸ்:
- முதலில் நெல்லிக்காய் நன்றி கழுவ வேண்டும் இஞ்சி சிறிது சர்க்கரை அல்லது தேன் சேர்த்து நன்கு அரைத்துக் கள்ள வேண்டும்.
- பிறகு அதன் சாற்றை ஒரு பாத்திரத்தில் நன்கு வடிகட்டிக் கொள்ளவும்.
- பிறகு இதை நாம் அப்படியே பருகலாம் இது உடல் சூட்டை தணிக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அதிக அளவில் பயன்படுகிறது.
நெல்லிக்காய் தொக்கு:
- நெல்லிக்காயை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
- அரைத்து நெல்லிக்காயில் மிளகாய் தூள் உப்பு நல்லெண்ணெய் பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
- பிறகு இதை நாம் தோக்காக பயன்படுத்தி சாப்பிடலாம்.
நெல்லிக்காய் ரசம்:
- நெல்லிக்காயை துவரம் பருப்பு மிளகு சீரகம் பூண்டு மற்றும் ரசப்பொடி ஆகியவற்றுடன் சேர்த்து ரசமாக நாம் செய்து சாப்பிடலாம்.
- இது நமது உடலுக்கு அதிக அளவில் ஜீரணத்திற்கு பயன்படுகிறது.
- இதுபோல் நான் நெல்லிக்காயில் பல சுவையான சாப்பிடும் உணவாக தயாரித்தும் சாப்பிடலாம்....




0 Comments