மக்காச்சோளம் மற்றும் அதன் தகவல்கள்:
மக்காச்சோளம் என்பது அதிக அளவு உணவாகவும்,தீவனமாகவும் மற்றும் எரிபொருளாகவும் பயன்படும் உலகின் முக்கிய தானியங்களில் ஒன்றாகும். இது உலக அளவில் அதிகமாக விளைவிக்கப்படக்கூடிய ஒரு பயிராகும்.இது அதிக அளவு ஊட்டச்சத்துக்களை கொண்டது.கால்நடைகளுக்கு மருந்தாகவும் தொழில் உற்பத்திக்காகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
தமிழ்நாட்டில் இது ஒரு முக்கிய பயிராக உள்ளது பொதுவாக இது சோளம் என்று அழைக்கப்படுகிறது.இது ஒரு உயரமான புல் வகை தானிய பயிராகும். இது உலகம் முழுவதும் பரவலாக பயிரிடப்படுகிறது.மனித உணவு மற்றும் கால்நடைகளுக்கு தீவனமாக இருப்பதற்கு ஒரு முக்கிய ஆதாரமக உள்ளது.
ஆரோக்கிய நன்மைகள்:
- உடலின் ரத்த சுழற்சி மற்றும் ஹீமோகுளோபின் அளவை கட்டுப்படுத்தி உடலுக்கு இரும்புச்சத்தை அளிக்கிறது.
- நரம்பு வலி மற்றும் மூளை வளர்ச்சிக்கு இது அதிக அளவில் தேவைப்படுகிறது
- இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைக்காக பயன்படுகிறது
- இதில் கொழுப்பு குறைவாகவும் நன்னிரை கொழுப்புகள் உள்ளதால் இதயத்திற்கு நல்லதாக உள்ளது
- மக்காச்சோளத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படுத்துகிறது.
- மக்காச்சோளத்தில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் புற்றுநோய் அபாயத்தை கட்டுப்படுத்துகிறது.
- மக்காச்சோளத்தில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் வயிறு நிரம்பியதாக உணர வைத்து நம்ம உடல் எடையை கற்றுக்கொள் வைக்க பயன்படுகிறது.
இனிப்பு மக்காச்சோளம்: இனிப்பு மக்காச்சோளம் எனது உணவுக்காக பயன்படுகிறது
மாவு மக்காச்சோளம்: இது சோள மாவு தயாரிக்க பயன்படுகிறது
சோளப்பொறி வகை: பொரித்து சாப்பிடுவதற்கு பயன்படுகிறது
எத்தனால் வகை: இது எரிபொருள் தயாரிக்க பயன்படுகிறது.
குழி மக்காச்சோளம்: இது வணிக உற்பத்திக்கு அதிக அளவில் தேவை.
மரபும் நக்காச்சோளமும்:
- தமிழ்நாட்டில் கடந்த 100 ஆண்டுகளில் மக்காச்சோளம் பெரும்பாலும் திணை கோதுமை சோளம் போன்ற பாரம்பரிய தானியங்களுடன் சேர்ந்து பயிரிடப்பட்டு வருகிறது.
- ஏழைகளின் வழக்கமான உணவு வகையாக பயன்படுகிறது
- இது ஒரு இயற்கை வகை அரிய உணவு ஆகும்.
செடி அமைப்பு:
- இது ஒரு புல் வகை தாவரமாகும்
- மிகவும் நீளமாக வளர்ந்தது மென்மையான இலைகள் மற்றும் வேர்களில் வலிமை அதிகமாக உள்ளது
- ஒரு செடியில் இரண்டு வகை பூக்கள் ஆண் வகை மற்றும் பெண் வகை உள்ளது
- தண்டு மூங்கிலை போன்று காணப்படுகிறது.
மக்காச்சோளத்தை எப்படி வளர்ப்பது?
பருவ காலங்கள்:
- ஆடி மற்றும் புரட்டாசி
- தை மற்றும் சித்திரை
விதைகள்:
ஒரு ஏக்கருக்கு சுமார் 6 கிலோ விதைகள் தேவைப்படுகிறது
நிலம் மற்றும் தயாரிப்பு:
- நல்ல வடிகால் வசதி உள்ள செம்மண் பயன்படுத்தலாம்
- இரண்டு முதல் மூன்று முறை உழவு செய்ய வேண்டும்
- கடைசியில் உரம் அதிகமாக சேர்க்கவும்
- நிலத்தில் பார்கள் அமைத்து விதைக்க தயாராக வைத்துக் கொள்ளவும்.
விதைக்கும் முறை:
- பார் இடைவெளி 60 சென்டிமீட்டர்
- செடி இடைவெளி 20 சென்டிமீட்டர்
- இதை ஆழம் 4 சென்டிமீட்டர் வரை இருக்க வேண்டும்
- ஒவ்வொரு குழியிலும் ஒரு விதை போட்டு நட வேண்டும்
நீர் நிர்வாகம்:
- விதைத்த உடனே நீர் பாய்ச்ச வேண்டும்
- மூன்றாம் நாள் அதிகளவு தண்ணீர் விட வேண்டும்
- வாரத்திற்கு ஒரு முறை பாசனம் தேவைப்படுகிறது (நிலத்தின் ஈரப்பதத்திற்கு ஏற்றபடி)
களைகள்:
- விதைத்த மூன்று நாட்களில் சிறு சிறு களைகலை எடுக்க வேண்டும்
- இயற்கை பூச்சிக்கொல்லிகள்,வேப்ப எண்ணெய் மற்றும் பஞ்சகவ்யம் பயன்படுத்தலாம்.
அறுவடை காலம்:
- விதை விதைத்து 90 முதல் 100 நாட்களில் கதிர்கள் அறுவடைக்கு தயாராகின்றன.
- கதிர்கள் முழுமையாக மஞ்சள் நிறமாக மாறியதும் நாம் அதை உகந்த நேரத்தில் அறுவடைக்கு தயார் செய்யலாம்.
எப்படியெல்லாம் சமைக்கலாம்?
முக்கிய உணவுகள்:
மக்காச்சோள சாலட் : வேகவைத்த மக்காச்சோளத்தை தக்காளி,வெங்காயம் மற்றும் எலுமிச்சை சாறு,மிளகுத்தூள்,கொத்தமல்லி சேர்த்து மக்காச்சோளம் சாலட் தயாரிக்கலாம்.
ஸ்வீட் கார்ன்: வெண்ணையில் வதக்கிய கார்ன் ,மேகி மசாலா மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சுட சுட ஸ்வீட் கார்ன் தயாரிக்கலாம்.
மக்காசோள சூப்: கார்ன்,வெங்காயம்,மிளகு சேர்த்து நாம் சூப் தயாரிக்கலாம்.
ஸ்வீட்கார்ன்பிரிஞ்சி: எண்ணெய்,அரிசி,கார்ன்,பட்டை,கிராம்பு,இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து சுவையான பிரியாணி தயாரிக்கலாம்.
கார் லெமன் ரைஸ்: எலுமிச்சை சாதத்தில் கார்ன் சேர்த்து இதை புதிதாக தயார் செய்யலாம்.
டிபன் வகைகள்:
மக்காச்சோள தோசை: அரிசி உளுந்து மற்றும் சோள தயாரித்து தோசையாக சுட்டு சாப்பிடலாம்.
பணியாரம்: கார்ன்,வெஜிடபிள்ஸ்,பாசி பருப்பு சேர்த்து உளுந்து மற்றும் சோளம் அரைத்து பணியாரம் செய்யலாம்.
சிற்றுண்டி (ஸ்னாக்ஸ்) வகை:
- கான் ஃப்ரை செய்யலாம்
- பாப்கான் சிக்கன் செய்யலாம்
- பேபி கார்ன் பஜ்ஜி செய்யலாம்
இனிப்பு வகை:
மக்காச்சோலை அல்வா:
சோளமாவு ,நெய்,சர்க்கரை சேர்த்து தயாரிக்கலாம்.
சுவையான தகவல்கள்:
- மக்காச்சோளத்தின் தண்டுகள் மூங்கில் போலவே காணப்படுகிறது.
- ஒரு தண்டில் சுமார் 20 கணுக்கள் காணப்படுகின்றன.
- சிலவகை மக்காச்சோளத்தில் 60 சென்டிமீட்டர் நீளமுள்ள கதிர்களும் காணப்படுகின்றன.
0 Comments