முந்திரி பற்றிய தகவல்கள்:
முந்திரி என்பது மிகவும் சத்தானதாகவும் பல்வேறு மருத்துவ நன்மைகளுக்காகவும் கொண்ட ஒரு விதை தாவரமாகும்.இது வெப்ப மண்டல பகுதிகளில் வளரும் மரத்திலிருந்து பெறப்படுகிறது.முந்திரி அதிக சத்துக்கள் நிறைந்த விலைமதிப்புள்ள மற்றும் பலவிதமான பயன்களை தரக்கூடிய ஒரு பருப்பு வகை உணவுப் பொருளாகும்.
இது அதிக அளவில் எண்ணெயாக மருந்தாக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய வர்த்தக பயிராக இருந்து வருகிறது. இது ஒரு சத்தான சிற்றுண்டி ஆகவும் சமையல் மற்றும் இனிப்புகளில் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.முந்திரி கொட்டைகள் மற்றும் முந்திரி ஆப்பிள் ஆகியவை இதன் முக்கிய விலைபொருளாக விளங்கி வருகிறது.
முக்கியமான நன்மைகள்:
- முந்திரியில் நல்ல கொழுப்புகள் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் உள்ளதால் இது இதயத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
- மெக்னீசியம் மற்றும் தாமிரம் உள்ளதால் நரம்புகளின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன
- நார்சத்து மற்றும் புரதம் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது இதனால் நம் உடலின் எடையை கற்றுக் கொள் வைத்துக் கொள்ளலாம்
- இதில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளதால் உடலின் பாதுகாப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
- இதில் நரம்புகளுக்கு தேவையான வைட்டமின் பி1 உள்ளது.
- முந்திரியானது நம் உடலின் சுரப்பிகளை இயக்கி ரத்தம் சுத்தமாக பரவுவதற்கு பயன்படுகிறது.
- இதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளுக்கு வலிமையை அளிக்கின்றன.
- இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் சிஙக் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
- நாம் அன்றாட உணவில் முந்திரிப் பருப்புகள் சிற்றுண்டியாகவும் சமையல் மற்றும் இனிப்புகளில் அதிக அளவில் பயன்படுத்துகின்றன .
முந்திரிப் பழம்:
முந்திரியில் அதைச் சுற்றியுள்ள பெரிய பணம்தான் முந்திரி பழம் என்று சொல்வார்கள் இந்த முந்திரி பழம் சாறுடன் கூடிய பசுமையான பழமாகும் இதை சாப்பிட்டால் சற்று புளிப்புடன் கூடிய இனிப்பான சுவையை நமக்கு தருகிறது முந்திரிப் பழச்சாறு குடிக்கவும் பாகு சக்கரை மற்றும் நெறியோடு சேர்த்து நாட்டு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது முந்திரி பழம் ஆனது முந்திரிக்கொட்டையுடன் சேர்த்து உண்ணப்படுகிறது.
எச்சரிக்கைகள்:
- நாம் முந்திரியை அதிகமாக சாப்பிட்டால் உடலில் கலோரியின் மதிப்பு அதிகரிக்கின்றன.
- இன்னும் சிலருக்கு அதிகமாக சாப்பிடும் போது அலர்ஜி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
- உப்புடன் நாம் முந்திரியினை அடிக்கடி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தத்தை இது பாதிக்கிறது.
- முந்திரியில் அதிக அளவு எண்ணெய் மற்றும் கொழுப்பு சத்து உள்ளதால் நாம் அதை சிறிதளவு சாப்பிட வேண்டும்.
முக்கிய குறிப்புகள்:
- முந்திரி மரங்கள் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் பயிரிடப்பட்டு வருகின்றன.
- முந்திரி பழத்தில் அதிக அளவு ஆரஞ்சு பழத்தை விட 5 மடங்கு அதிகமான சத்துகள் உள்ளது.
- முந்திரி கொட்டைகளை நாம் ஊறவத்து சாப்பிடுவதன் மூலம் நமது உடல் மிகவும் ஆரோக்கியமாக உள்ளது.
- முந்திரி மரங்கள் மண்ணரிப்பை தடுக்கிறது.
- மண்ணின் வளத்தை அதிகரிக்கவும் இது உதவுகிறது.
முந்திரி பருப்பு:
- முந்திரி மரத்திலிருந்து கிடைக்கும் முந்திரி பழத்தின் இறுதியில் உள்ள பகுதியை உணவுக்கு பயன்படும் முந்திரி பருப்பு ஆகும்.
- முதலில் கருப்பு மேல் ஓட்டுடன் இருக்கும்.
- முந்திரி கொட்டினை சுட்டு உலர்த்தி அதை தூளாக்கி அதன் ஓட்டை நீக்கி உள்ளே உள்ள முந்திரி பருப்பு எடுத்தால் நம் உண்ணக்கூடிய முந்திரிப்பருப்பு கிடைக்கிறது.
முந்திரி மரம் எப்படி வளர்ப்பது?
நிலம் மற்றும் காலநிலை:
- வெப்பமண்டல கால நிலையானது முந்திரிக்கு ஏற்ற கால நிலை
- அதிக வெப்பம் மற்றும் குறைந்த மழை உள்ள இடங்கள் இதற்கு சிறந்தவையாக இருக்கும்.
- வெறும் மணல் கலந்த மண் அல்லது சிறிய சுண்ணாம்பு கலந்த மண் இதற்கு சிறந்தது
- நீர் நன்கு வடிகின்ற மண் இதற்கு அவசியம்.
விதைகள்:
- முந்திரியை விதைகள் மூலம் வளர்க்கலாம் அல்லது அதிகமாக மகசூல் பெற நாற்றுகளை பயன்படுத்தி வளர்க்கலாம்.
- நாற்றுகளை தேர்வு செய்யும் போது அது நோயற்ற நாட்களாக இருக்க வேண்டும்.
இடைவெளி:
- முந்திரி மரங்களை ஆறு அல்லது 12 மீட்டர் இடைவெளி விட்டு நடுவது சிறந்தது.
- நாம் முந்திரியினை மழை காலம் தொடங்கும் முன் நடுவது சிறந்தது.
பராமரிப்பு முறை:
- ஆரம்ப காலங்களில் வாரத்திற்கு ஒரு முறை மட்டும் நீர் தேவைப்படுகிறது அதன் பிறகு கிடைக்கும் மழை நீர் போதுமானது
- மரத்தின் கிளைகளை நாம் அடிக்கடி களை நீக்க வேண்டும்.
- நைட்ரஜன்,பாஸ்பரஸ்,பொட்டாசியம் கலந்த உரங்களை ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை விடலாம்.
பூக்கும் காலம்:
- மரம் ஆனது 3 அல்லது 5 ஆண்டுகளில் பழம் கொடுக்க தொடங்குகிறது
- பழங்கள் முதலில் பச்சையாக இருக்கும் பின்னர் பழுப்பு நிறமாக மாறுகிறது.
அறுவடை காலம்:
- பழங்கள் தரையில் விழ தொடங்கும் பொழுது நாம் அதை எடுத்துக் கொள்ளவும்
- அதை எடுத்து பழத்தைப் பிரித்து அதன் கீழ் இருக்கும் விதையை எடுத்து நம் உணர்த்த வேண்டும்.
இப்படி எல்லாம் முந்திரியை சமைத்து சாப்பிடலாம்!
முந்திரி மிட்டாய்:
- சர்க்கரை அல்லது கருப்பட்டி கருப்பட்டி பாகில் முந்திரியை சேர்த்து நாம் அதை உருண்டையாக வடிவமைத்து அதை முந்திரி விட்டாயாக சாப்பிடலாம்.
- இதை குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் பொருளாக உள்ளது.
முந்திரி கிரேவி:
- முந்திரியை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்
- பிறகு அதில் வெங்காயம் தக்காளி மசாலா சேர்த்து நாம் அதை கிரேவியாக சமைத்து சாப்பிடலாம்
- சப்பாத்தியுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்
முந்திரி பிஸ்கட்:
- முந்திரியை முதலில் தூளாக்கிக் கொள்ள வேண்டும்
- பிறகு தன்னை சர்க்கரை சேர்த்து ஓவனில் பேக் செய்ய வேண்டும்
- பிறகு நமக்கு மென்மையான பிஸ்கட் கிடைக்கிறது.
முந்திரி பாயாசம்:
- பாலை எடுத்துக் கொள்ளவும்
- அதில் முந்திரி சர்க்கரை ஏலக்காய் சேர்த்து சமைக்கப்படும் ஒரு இனிப்பு பாயாசம் தயார் செய்யலாம்.
மேலும் நாம் முந்திரியை வைத்து நிறைய உணவுப் பொருட்கள் தயாரித்து சாப்பிடலாம்....



0 Comments