சோற்றுக்கற்றாழை பற்றிய தகவல்கள்:
சோற்றுக்கற்றாழை அல்லது அலோவேரா என்பது ஒரு மருத்துவ குணங்கள் மிக்க ஒரு மூலிகை தாவரமாகும். சோற்றுக்கற்றாழை சித்த மருத்துவத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இது அதிக மருத்துவ குணங்கள் கொண்ட சதை பற்றுள்ள தாவர வகையாகும்.இது பல நூற்றாண்டுகளாக மனிதனின் தோள் பிரச்சனைகள் மற்றும் செரிமான பிரச்சனைகள் பிற உடல் நல கோளாறுகளுக்கு தீர்வுகளை தந்து வருகின்றன.
மேலும் சோற்றுக்கற்றாழையானது கற்றாழை,கத்தாழை,குமரி,கன்னி என சில பெயர்களை அழைக்கப்படுகின்றன.சோற்றுக்கற்றாழை பெரும்பாலும் ஆற்றங்கரைகளிலும் சதுப்பு நிலங்களிலும் வீட்டு தோட்டங்களிலும் இயல்பாக வளர்கின்றன.
தோற்றம்:
சோற்றுக்கற்றாழையானது தடிமனான சதைப்பற்றுள்ள இலைகளைக் கொண்ட ஒரு சிறிய தாவரமாகும் இதனுடைய இலைகளின் உள்ளே உள்ள செல் போன்ற பசை இருக்கும் இது வறண்ட பகுதிகளில் அதிகம் வளரும் தன்மை கொண்டது.
சோற்றுக்கற்றாழையின் பயன்கள்:
தோல்:
- சோற்றுக்கற்றாழை ஜெல் முகத்தில் உள்ள புண்கள் எரிச்சல் பருக்கள் ஆகியவற்றிற்கு தீர்வு அளித்த வருகின்றன.
- இது சூரிய கதிர்களில் இருந்து நமது தோளினை பாதுகாக்கின்றன.
- மேலும் தோல் பிரச்சினைகள் தீக்காயங்கள் வெட்டு காயங்கள் அரிப்பு தோல் பயிற்சி போன்றவற்றிற்கு தீர்வளித்து வருகின்றன.
முடி பராமரிப்பு:
- சோற்றுக்கற்றாழையானது தலைமுடி வளர்ச்சிக்கும் மற்றும் தலைமுடி உதிர்வின் பிரச்சனைக்கும் மேலும் நம் தலைக்கு குளிச்செலிக்கின்றன.
- சோற்றுக்கற்றாழை ஜெல் தலைமுடியில் தடவி 25 நிமிடம் கழித்து குளித்தால் முடி வளரும் தன்மை அதிகரிக்கும் மற்றும் கூச்சம் குறைகின்றன.
உடல் நலம்:
- சோற்றுக்கற்றாழை ஆனது வயிற்றுப்போக்கு அமிலக்கசிவு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கின்றன
- இதனுடைய ஜெல் அல்லது சாறு அல்லது ஜூஸ் அருந்தினால் நம் உடலின் உள் வெப்பம் குறைவதற்கும் பயன்படுகிறது
- மேலும் நமது உடலில் குரல்களை சுத்தம் செய்கிறது
- நமக்கு அதிக அளவில் பசியை தூண்டுகிறது
- நோய் எதிர்ப்பு சக்தியை நமது உடலுக்கு அளிக்கிறது
- மேலும் இது நமது உடலின் ரத்தத்தில் உள்ள சக்கரை அளவினை கட்டுப்படுத்த உதவுகிறது
- நமது உடலின் ஒட்டு மொத்த சுறுசுறுப்பை இது மேம்படுத்துகிறது.
அழகு சாதனம்:
- சோற்றுக்கற்றாழை சோப் தயாரிக்க பயன்படுகிறது
- முக கிருமிகளை தயாரிக்க பயன்படுகிறது
- ஷாம்பு தயாரிக்க பயன்படுகிறது.
அலங்கார செடியில்:
- சோற்றுக்கற்றாழை அதிகமாக தோட்டங்களிலும் அலங்கார செடிகளாகவும் வளர்க்கப்படுகின்றன
- இது மிகவும் அழகு நிறைந்ததாகவும் அலங்கார செடியாகும் இருக்கும்.
சோற்றுக்கற்றாழையை எப்படி வளர்ப்பது?
சோற்றுக்கற்றாழை ஒரு பெரிய தாய் செடியின் பக்கத்திலிருந்து வரும் கன்றுகளை நாம் பிடுங்கி அதை தனியாக நம் நாட்டு வைக்கலாம்.
மண் மற்றும் உரம்:
- நல்ல வடிகால் வசதி உள்ள மணல் அதிகமாக உள்ள இடம் இதற்கு சிறந்தது
- செம்மண் மணல் புழு உரம் மற்றும் காய்ந்த இலைகள் கலந்த மண் இது வளர்வதற்கு சிறந்த இடமாக உள்ளது
- இது வளர்வதற்கு அதிக உரம் தேவைப்படுவதில்லை இதற்கு மாதம் ஒருமுறை பசும்பொன் அல்லது சானவரம் போதுமானது.
நீர் ஊற்றும் முறை:
- சோற்றுக்கற்றாழைக்கு அதிகளவில் நீர் தேவைப்படுவதில்லை.
- எனவே வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மற்றும் நீர் ஊட்டினால் அதற்கு போதும்.
- இதற்கு அதிகளவில் நேரு ஊற்றினால் வேர்கள் அழுகிவிடும்.
பராமரிப்பு:
- செடியை நல்ல நேரடி வெயிலில் வைக்க வேண்டும்.
- இதனுடைய வேர்கள் நன்கு பரவ இடைவெளி விட்டு நற்றி வைக்கவும்.
- பூச்சிகளின் தாக்கம் இருந்தால் நாம் இதற்கு இயற்கை பூச்சி பிள்ளைகளை பயன்படுத்தலாம்.
சாப்பிடும் முறைகள்:
ஜெல்:
- முதலில் ஒரு கற்றாழையை படித்தபின் அதனுடைய இலைகளை எடுத்து அதன் அக்கா காம்புகளை வெட்டி விடவும்.
- பிறகு மேல் தோலை சீவ வேண்டும் அதன் பின் உள்ளே இருக்கும் வெண்மையான ஜில் பகுதியை மட்டும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இந்த ஜெல்லை சிறு சிறு துண்டுகளாக நாம் எடுத்து சுத்தமான நீரில் நன்கு கழுவ வேண்டும்.
- அதன் பிறகு இதை நேரடியாக நாம் சாறு போல் அனைத்தும் குடிக்கலாம்.
நாட்டு சர்க்கரை:
- சோற்றுக்கற்றாழையின் உள்ளே உள்ள ஜல்லை நாம் எடுத்து நன்றாக நறுக்கி நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து இதை நாம் சாப்பிடலாம்.
- இது நமது உடல் சூட்டை தணிக்கவும் மலச்சிக்கலை தடுக்கவும் பயன்படுகிறது.
சாராக:
- சோற்றுக்கற்றாழையின் உள்ளே உள்ள ஜெல்லை நன்கு கழுவி எடுத்து நாம் அதை நன்றாக மிக்ஸியில் அரைத்து அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து அல்லது தேன் சேர்த்து குடிக்கலாம்.
- வெறும் வயிற்றில் குடிக்கும் போது நமக்கு வயிறு சுத்தம் செய்யும் தன்மை அதிகரிக்கும்.
எச்சரிக்கை!
- சோற்றுக்கற்றாழையை நாம் அதிக அளவு உட்கொள் மூலம் நமக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம்.
- சோற்றுக்கற்றாழை சில நபர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
- கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடுவதை தவிர்க்கவும் வேண்டுமென்றால் நீங்கள் மருத்துவரின் ஆலோசனை உடன் இதை பயன்படுத்தலாம்.
- இதனுடைய பசைகளை நேரடியாக முகத்தில் பயன்படுத்தும் போது ஒரு முறை இதனை சரி பார்க்க வேண்டும் இல்லை என்றால் இது சிலர் நபர்களுக்கு அலர்ஜி ஏற்படுத்தவும் காரணமாக உள்ளது.
.jpg)


0 Comments