செம்பருத்தி பூச்செடியின் சிறப்புகளும் மருத்துவ குணங்களும்:
செம்பருத்தி இது ஒரு அழகான மலர்களை தரக்கூடிய ஒரு தாவரமாகும். இந்த தாவரமானது அதிக மருத்துவத்துக்காகவும் மற்றும் அழகுக்காகவும் இது அறியப்படுகிறது.
இந்த தாவரமானது மால்வேசியே குடும்பத்தை சார்ந்தது.
மேலும் இந்த தாவரமானது உலகம் முழுதும் வெப்பம் மற்றும் மிக வெப்ப மண்டலங்களில் அதிகமாக வளரக்கூடிய தாவரமாகும். இந்த பூச்செடியானது அதிக அளவில் மூலிகைக்காகவும் மலர் அலங்காரத்திற்கும் மற்றும் தாவரவியல் ஆர்வலர்களுக்கு மிகவும் முக்கியமான தாவரமாக உள்ளது.
தமிழ் பெயர்: செம்பருத்தி
ஆங்கில பெயர்: 'Hibiscus' அல்லது 'China Rose'.
மலர் தேனீ மற்றும் பறவைகள் கவர்ச்சி:
செம்பருத்தி மலரானது அதிகம் கவர்ச்சியாக இருப்பதால் தேனீக்களுக்கு மற்றும் ஹிம்மிங்க் பறவைகளுக்கு அதிகம் கவரக்கூடிய வகையில் உள்ளது. என்ன மலரானது மிகவும் அழகாகவும் ஐந்து இதழ்களைக் கொண்ட நகராகவும் உள்ளது பார்ப்பதற்கு மிகவும் ரசிக்கக் கூடிய வகையில் இந்த பூக்கள் செடியில் காணப்படுகின்றன.
மருத்துவ பயன்கள்:
- தலை முடி பராமரிப்பு: செம்பருத்தி பூ மற்றும் இலை கசாயம் ஆனது தலைமுடி உதிர்பவர்களுக்கு மற்றும் வழுக்கை தலை உடையவர்களுக்கு இந்த கசாயம் பயன்படுத்தலாம்.
- மாதவிடாய் சிக்கல்கள்: பூவின் கசாயம் ஆனது மாதவிடாய் பிரச்சனைக்கு முக்கிய தீர்வாக உள்ளது.
- காயங்களை குணப்படுத்த: இந்த இலையை கசக்கி அதன் சாற்றை காயமடைந்த இடத்தில் மருந்தாக பயன்படுத்தினால் காயம் குணமடையும்.
- ரத்த அழுத்தம்: பூவின் சாறு மற்றும் பானத்தை பருகினால் ரத்த அழுத்தமானது உடல் இயக்கத்தில் சீராக இருக்கும்.
- மாதவிடாய் கோளாறுகள் கருப்பை பிரச்சினைகள் வயிற்றுப்புண் வாய்ப்புண்கள் ஆகியவற்றுக்கு சிறந்த இயற்கை மருத்துவம் உள்ளது.
- செம்பருத்தி இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் ஆனது நமது உடலின் சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தம் குறைக்கவும் உதவுகிறது .
செம்பருத்தி பூ செடியின் முக்கிய தகவல்கள்:
செடியின் தோற்றம்:
- பெரிய வண்ணமயமான மலர்கள் பொதுவாக சிவப்பு,மஞ்சள்,சாம்பல், வெள்ளை மற்றும் சில கலவைகளில் காணப்படும்.
- செம்பருத்தி பூச்செடியானது நமக்கு பல வண்ணங்களில் பூக்களை தருகிறது.
- ஆனால் சிவப்பு நிற பூக்கள் தான் அதிகம் கிடைக்கிறது.
- சிவப்பு நிற பூவானது மிகவும் அழகாக காட்சியளிப்பதுடன் அனைவரும் விரும்புகிறார்கள்.
- இதனுடைய இலைகள் மிகவும் அழகாக காட்சியளிக்கிறது. இந்த தாவரத்தின் இலை மிகவும் அடர் பச்சை நிறத்தில் காணப்படுகிறது.
- செம்பருத்தி பூக்களானது பல நிறங்களில் பல அடுக்குகளில் அழகாக காணப்படுகின்றன.
- இதனுடைய இதழ்கள் ஐந்து இதழ்கள் கொண்ட சிவப்பு செம்பருத்தி மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளதாக கருதப்படுகிறது.
உயரம்:
- இந்த தாவரமானது சுமார் 4 முதல் 4 முதல் 10 அடி வரை வளர்ந்து காணப்படுகிறது.
இலைகள்:
- அடர் பச்சை நிறத்தில் காணப்படுவதோடு கூர்மையான நுனிகளைக் கொண்டது.
மலர்ச்சி:
- இந்த தாவரத்தில் வருடம் முழுவதும் மலரும் திறன் கொண்டது குறிப்பாக வெப்ப மண்டல காலங்களில் அதிகம் மலர்கின்றன.
வளர்ப்பு முறைகள்:
மண்ணைத் தேர்ந்தெடுத்தல்:
- சிறந்த வடிவால் வசதியுடன் கூடிய களிமண் அல்லது சிதைந்த களிமண் இது தாவரம் வளர்வதற்கு ஏற்றது.
பருவநிலை:
- இந்த தாவரமானது அதிகம் வெப்பம் விரும்புவதால் இதற்கு கோடை காலம் சிறந்தது.
- அதிக வெயில் நிலையில் 6 முதல் 8 மணி நேரம் வெயில் இந்த தாவரத்திற்கு தேவைப்படுகிறது.
நீர் பாசனம்:
- அடிக்கடி நீர் பாசனம் தேவை ஆனால் அதிகமாக அல்ல தேவைப்படும் அளவிற்கு ஊற்ற வேண்டும்.
- மண் சூழ்நிலை ஈரப்பதமாக இருக்க வேண்டும்.
உரமிடல் முறை:
- மாதம் ஒரு முறை ஹைபோடென்ஸ் பாஸ்பரஸ் உரம் கொடுக்கலாம்.
- இயற்கை உரம் (மாட்டுச்சாணி,கம்போஸ்ட்) இந்த தாவரம் வளர்வதற்கு சிறப்பாக இருக்கும்.
பராமரிப்பு முறை:
- செடியின் வளம் மற்றும் வளர்ச்சி அதிகரிக்க அதன் கிளைகளை சரியாக வெட்டி நன்றாக பராமரிக்க வேண்டும்.
- பூமியை அடிக்கடி உளுந்தி தூண்டி விட வேண்டும்.
இலக்கிய மற்றும் கலாச்சார முக்கியத்துவம்:
- தமிழகத்தில் பூஜைக்காகவும் அலங்காரத்திற்கும் பயன்படுகிறது. பெண்கள் தலைமுடியில் அலங்காரம் செய்யவும் பயன்படுகிறது.
- செம்பருத்தி பூவானது தெய்வங்களுக்காக மிகவும் விசேஷமாக இந்த மலர் பார்க்கப்படுகிறது. குறிப்பாக துர்க்கை மற்றும் காளிதேவிக்கு.
விளைச்சல் குறிப்பு:
- செம்பருத்தி போனது ஒரு அழகிய தோட்டம் அல்லது வீட்டின் முன்புறம் அல்லது பூந்தோட்டங்களில் வசதியாக வளரக்கூடிய ஒரு பூச்செடி வகையாகும்.
- இந்த செடியை பராமரிக்க மிகவும் எளிமையாகவும் மற்றும் பல நன்மைகளை தரக்கூடியதாகவும் இருக்கிறது.
சுவாரசியமான தகவல்கள்:
செம்பருத்தி ஆனது பசிபிக் தீவுகளில் உணவாக பயன்படுத்தப்படுகிறது.
ஜமாய்க்காவில் கருவை கலைக்க மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
மேலும் அழகு சாதன பொருட்களில் சரும பாதுகாப்பு,சூரிய கதிர்வீச்சு எதிர்ப்பு, முகத்தின் சுருக்கம் நீக்கம் போன்ற பயன்பாடுகள் அதிக அளவில் உள்ளன.



0 Comments