நிலக்கடலையின் முக்கியத்துவமும் மருத்துவ குணங்களும் | Importance and medicinal properties of peanuts

நிலக்கடலை பற்றிய தகவல்கள்: 

நிலக்கடலை என்பது ஒரு பருப்பு வகை தாவரமாகும். இது உணவாகவும் மற்றும் எண்ணெய் உற்பத்திக்காகவும் அதிகளவில் பயரிடப்படுகிறது. இது இந்தியாவின் ஒரு முக்கியமான எண்ணெய் வித்து பெயராக காணப்படுகிறது. நிலக்கடலை என்பது தமிழர்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடிய ஒரு முக்கிய இடம் பெற்றிருக்கும் சத்தான மற்றும் பன்முகம் கொண்ட உணவு பொருளாக கருதப்படுகிறது. 

இது மருந்தாகவும் பயன்படுகிறது. நிலக்கடலையில் கொழுப்பு புரதம் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. நிலக்கடலையை நாம் பேச்சு வழக்கில் வேர்க்கடலை,மலாட்டை,கலக்கா என்ற பெயரில் பெரும்பாலும் நான் பேச்சு வழக்கில் கூறுகிறோம்.

நிலக்கடலையை நாம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும். நிலக்கடலையை சுருக்கமாக கடலை என்று அழைப்பார். நாம் அனைவரும் நிலக்கடலையை பெரும்பாலும் அவித்து அல்லது வறுத்து சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறோம்.

நிலக்கடலையின் பூர்விகம்:

நிலக்கடலை முதன் முதலில் தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டிருந்தது. படிப்படியாக வளர்ந்து இன்று இந்தியா சீனா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் முக்கிய உற்பத்தியில் நிலக்கடலை பெரும் பங்கு வகிக்கிறது. நமது தமிழ்நாட்டில் கடலூர் விருதுநகர் சேலம் திருச்சி திண்டுக்கல் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நிலக்கடலையின் பயிர் பரவலாக பயிரிடப்படுகின்றன. 

நிலக்கடலையில் உள்ள பயன்கள்: 

உணவில் பயன்:

  • நிலக்கடலை வறுத்து அவித்து மிட்டாய் மற்றும் நிலக்கடலையை பலவிதமாக பயன்படுத்தி சாப்பிடலாம். 
  • வறுத்த நிலக்கடலையானது ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டி

மூட்டு வலி:

  • நிலக்கடலையின் எண்ணையை தடவுவதன் மூலம் மூட்டு வலி நமக்கு குறைகிறது.

உடல் எடையில்: 

  • நிலக்கடலையில் அதிகளவு நார் சத்து உள்ளதால் வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கின்றன. இதனால் உடல் எடை குறைவானவர்கள் நிலக்கடலை பயன்படுத்தலாம். 

நரம்பு மண்டலம்:

  • நிலக்கடலையில் வைட்டமின் பி மற்றும் மெக்னீசியன் உள்ளதால் நரம்பு தளர்ச்சி குறைய நிலக்கடலை பயன்படுகிறது. 

இதயம்:

  • நன்னிறை கொழுப்புகள் மற்றும் ஆன்ட்டிஆக்சிடன்ட்கள் இதய நோய்களை தடுக்க பயன்படுகிறது.
  • நிலக்கடலையில் உள்ள எண்ணெய் சரும வளர்ச்சிக்கு பயன்படுகிறது. 
  • உடலின் ரத்த சுழற்சியை மேம்படுத்துகிறது. 
  • நிலக்கடலையை குழந்தைகளுக்கு உணவாக கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு நல்ல வளர்ச்சி ஊட்டம் பெறுவதற்கும் பயன்படுகிறது.

சாகுபடி முறை: 

பருவ காலங்கள் - ஜூன் முதல் ஜூலை மற்றும் டிசம்பர் முதல் ஜனவரி மாதங்கள் நிலக்கடலை சாகுபடி செய்வதற்கு சிறப்பாக உள்ளது. 

மண் வகை - நிலக்கடலை பெரும்பாலும் மலர்ப்பாங்கான இடம் வண்டல் மண் மற்றும் செம்மண் நிலக்கடலை வளர்வதற்கு ஏற்ற நிலங்களாக உள்ளது. 

விதை பாதுகாப்பு - பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க ட்ரைக்கோடெர்மா அல்லது சூடோமோனாஸ் பயன்படுத்தினால் பூச்சிகளிடமிருந்து மற்றும் நோய்களிடமிருந்து பாதுகாப்பானதாக இருக்கும்.

விதைக்கும் முறை - நிலக்கடலை விதைகளை செடிக்கு ரத்து சென்டிமீட்டர் வரிசைக்கு வரிசையில் 30 சென்டிமீட்டர் இடைவெளி விட்டு நாம் விதைகளை நட்டு வைத்தால் பயிர் சிறப்பாக இருக்கும். 

பராமரிப்பு - நிலக்கடலை நமக்கு மண்ணில் உள்ள நைட்ரஜனை நிலை நிறுத்துகிறது மேலும் இது நல்ல பயிர் சுழற்சி பயிராக உள்ளது பூச்சி தாக்குதலை குறைக்கவும் பயன்படுகிறது. நிலக்கடலையின் விதைகள் தான் நாம் உண்ணும் நிலக்கடலை.

நிலக்கடலையை இப்படி எல்லாம் சமைக்கலாம்..

நிலக்கடலையானது ஒரு அற்புதமான பல்துறை உணவுப் பொருளாகும். நிலக்கடலையில் செய்யக்கூடிய சில உணவுகளை பற்றி பார்ப்போம்! 

இனிப்பு உணவுகள்: 

நிலக்கடலை உருண்டை- வெள்ளம் மற்றும் வறுத்த நிலக்கடலையை நன்றாக அரைத்து உருட்டி செய்யப்படும் ஒரு பாரம்பரிய உணவாகும்.

நிலக்கடலை கட்லி - பால் பவுடர் சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து கலக்கினால் நிலக்கடலை கட்லியானது தயாராகிறது .இது ஒரு மென்மையான இனிப்பு வகை உணவாகும்.

நிலக்கடலை அல்வா - நிலக்கடலை மாவு நெய் பால் மற்றும் சர்க்கரை இவைகள் எல்லாம் வைத்து நாம் நிலக்கடலை தயார் செய்யலாம். 

நிலக்கடலையில் கொழுக்கட்டை-நிலக்கடலையை நன்றாக வறுத்து அதில் வெள்ளம் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்து அதை நாம் மைதா மாவில் வைத்து அவித்து கொழுக்கட்டையாக சாப்பிடலாம்.

கார உணவுகள்: 

நிலக்கடலை சட்னி- தேங்காய் நிலக்கடலை புளி மற்றும் மிளகாய் இவைகளை சேர்த்து அரைத்து தாளித்தால் இட்லி மற்றும் தோசைக்கு பரிமாறி சாப்பிடலாம். 

நிலக்கடலை சுண்டல்- வேக வைத்த நிலக்கடலை மிளகாய் கடுகு மற்றும் கருவேப்பிலை இவைகளை சேர்த்து வதக்கி நாம் சுண்டலாக சாப்பிடலாம்.

நிலக்கடலை சாதம் - வெங்காயம் மிளகாய் மசாலா சேர்த்து வதக்கி நாம் சாதத்திற்கு தொட்டுக் கொள்வதற்கு பயன்படுத்தலாம்.

                               "கடலை போட்டால் குரங்கு கிடைக்கும்!"

    குறைந்த ஊதியம் கொடுத்தால் திறமையற்ற நபர்களே கிடைப்பார்கள்..

0 Comments