கேழ்வரகு கூழ் பற்றிய தகவல்கள்:
கேழ்வரகு கூழ் என்பது தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது கேழ்வரகு என்ற சிறுதானியத்தை வெளிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது உடலுக்கு அதிக சக்தியை அளிக்கிறது. கேழ்வரகு கூழ் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் பண்டிகை காலங்களில் மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் அனைவரும் காலை மற்றும் மதிய உணவாகவும் அதிகமாக பருகி சாப்பிடுகின்றன. இதில் அதிக அளவு சக்திகள் நிறைந்துள்ளதால் இதை ஊட்டச்சத்து நிபுணர்கள் பாராட்டுகின்றனர்.
கேழ்வரகு கூழானது நமக்கு அதிக அளவில் உடல் சத்துக்காக பயன்படுகிறது.வெயில் காலங்களில் நான் இதை பருகும் போது வெயிலின் தாக்கத்திலிருந்து நமது உடலுக்கு நல்ல சக்தியை அளிக்கிறது. கேழ்வரகு கூழ் என்பது கேழ்வரகை அரைத்து பொடியாக்கி அதை நீரில் கரைத்து அல்லது வெந்தயம் இட்டு புளிக்க வைத்து பின்பு வெந்நீரில் விழுந்து தயாரிக்கப்படும் பழைய முறையில் இது பசியை தடுக்கிறது.உடலுக்கு ஆற்றல் மற்றும் உடல் வெப்பத்தை குறைகிறது.
யார் யாருக்கு கேழ்வரகு கூழ் ஏற்றது?
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை பருகினால் உடலுக்கு நல்லது.
- கர்ப்பிணி பெண்கள் மற்றும் ரத்த தானம் செய்பவர்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய சிறந்த உணவு.
- சர்க்கரை நோயாளிகள் இதனை அதிகம் பயன்படுத்தக்கூடாது அளவோடு பயன்படுத்த வேண்டும் என்று சிலர் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
தயாரிப்பு முறை:
- கேழ்வரகு மாவை நன்றாக தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு அதனை நன்றாக கொதிக்க வைத்து கூழ் போல் தயாரிக்க வேண்டும்.
- பிறகு அதனை கீழே இறக்கி இதனுடன் தயிர் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து சாப்பிடலாம்.
- இதில் நாம் வெள்ளம் அல்லது சர்க்கரை சேர்த்து இனிப்பு கூழாகவும் சாப்பிடலாம்.
ஆரோக்கிய நன்மைகள்:
- கூல் சாப்பிட்ட பிறகு உடல் நீண்ட நேரம் நிறைந்து இரப்பதாக இருக்கும் இதனால் தேவையில்லாத உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கலாம் எனவே உடல் எடையை குறைப்பதற்கும் பயன்படுகிறது.
- இரும்பு சத்து இதில் அதிகம் உள்ளதால் உடலுக்கு அதிக சக்தி அளிக்கிறது.
- நார்சத்து அதிகம் உள்ளதால் உடல் ஜீரணத்திற்கு பயன்படுகிறது.
- இதில் கால்சியம் அதிகம் உள்ளதால் எலும்புகளுக்கு அதிக சக்தி அளிக்கிறது.
- வெயில் காலங்களில் நமது உடலை குளிர வைக்கிறது.
சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் சில முக்கிய நன்மைகள்:
- காலை நேரத்தில் நீங்கள் பருகுவது நம் உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக உள்ளது.
- இது அதிக அளவு பசியை கட்டுபடுத்தும் தன்மை உள்ளதால் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
- வெயில் காலங்களில் உடல் சூட்டை சமநிலைப்படுத்துவதால் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவாக உள்ளது.
- பால் சுரப்பியை அதிகரிக்க உதவுவதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு இது அதிக அளவில் பயனுள்ள உணவாக உள்ளது.
பாரம்பரியம் மற்றும் சமய சம்பிரதாயங்கள்:
- ஆடி : அம்மன் கோயிலில் ஆடி மாதம் கூழ் ஊற்றும் திருவிழா மிகவும் சிறப்பாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் திருவிழாவாக உள்ளது. இது பக்தியும் ஆரோக்கியமும் இணைந்த ஒரு அம்மன் வழிபாடு முறையாகும்.
- கஞ்சி தொட்டி வரலாறு: பண்டைய காலங்களில் கூழானது ஏழை மக்களுக்காக வழங்கப்பட்ட ஒரு சமூக சேவை உணவாக இது இருந்தது. மக்கள் அனைவரும் இதனை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவாக இருந்தது. அதிக அளவில் இது உடலுக்கு வலிமையையும் ஊட்டத்தையும் அளிக்கிறது. இதனாலையே பண்டைய காலங்களில் மக்கள் மிகவும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர்.
சுவாரஸ்ய தகவல்கள்:
- பாலூட்டும் தாய்மார்களுக்கு இது ஒரு சிறந்த உணவாக கருதப்படுகிறது.
- மிகவும் குறைந்த செலவில் உள்ளது மேலும் அதிக அளவு நமது உடலுக்கு ஊட்டச்சத்து வழங்கும் ஒரு உணவாக உள்ளது.
- நாம் இந்த கூழினை தொடர்ந்து பருகினால் நம் உடலுக்கு மன அழுத்தம் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் குறைகின்றன.
- நம் முன்னோர்கள் அதிக அளவில் இதனை பயன்படுத்தினர் நம் உடல் நலத்திற்கான பரிசு இந்த கேழ்வரகு கூழ் சிறந்த பரிசாக அவர்கள் விட்டுச் சென்றனர்.
பாரம்பரிய மதிப்புகள்:
- கிராமப்புறங்களில் விவசாயிகள் அதிகாலையில் வயலுக்கு செல்லும்போது அதற்கு முன்பே ஒரு சொம்பு கேழ்வரகு கூழ் குடிப்பதனை வழக்கமாக வைத்திருந்தனர்.
- இதனை குடிப்பதன் மூலம் ஒரு நாள் முழுவதும் உடலை சக்தியுடன் வேலை செய்ய உதவுகிறது.
- அம்மன் கோயில்களில் 'கூழ் வார்த்தல்'என்ற திருவிழா ஒரு அடிப்படை பண்டிகையாக வழிபாட்டின் முக்கிய பகுதியாக இது கிராமப்புறங்களில் கொண்டாடப்படுகிறது.



0 Comments