வண்ணத்துப்பூச்சி பற்றிய தகவல்கள்:
வண்ணத்துப்பூச்சி என்பது மிகவும் அழகான பூச்சி வகைகளில் ஒன்றாகும். இந்தப் பூச்சியை பார்ப்பதற்கே ஆயிரம் கண்கள் தேவை அவ்வளவு அழகாக காற்றில் பறந்து செல்கின்றன. இந்த வண்ணத்துப்பூச்சியானது வண்ணத்துப்பூச்சி என பெயர் வந்ததற்கு காரணம் இது பல வண்ணங்களில் காட்சியளிக்கிறது.அதனாலேயே இதனை வண்ணத்துப்பூச்சி மற்றும் கிராமங்களில் பட்டாம்பூச்சி என்று கூறுவர்.
வண்ணத்துப்பூச்சியானது ஒரு தாவரத்தில் உட்காரும்போது அதனுடைய இரண்டு படர்ந்த இறக்கைகளும் சுருங்கி விரியும்போது அதன் அழகை கண்களில் பார்க்கும் பொழுது அவ்வளவு அருமையாக காட்சியளிக்கும். வண்ணத்துப்பூச்சியானது இயற்கைக்கு கிடைத்த ஒரு அற்புதமான பூச்சி ஆகும்.
வண்ணத்துப்பூச்சிகள் பெரும்பாலும் செம்பருத்தி செடிகளில் காணப்படும் ஏனென்றால் செம்பருத்தி செடியில் உள்ள பூவில் உள்ள மகரந்தம் அதிக சுவையுடையதாக உள்ளதால் வண்ணத்துப்பூச்சிகள் பெரும்பாலும் செம்பருத்தி செடியில் காணப்படுகின்றன.
வண்ணத்துப்பூச்சி பற்றிய அடிப்படை தகவல்கள்:
வகை: வண்ணத்துப்பூச்சி என்பது அழகான சிறகுகளைக் கொண்ட பூச்சி வகையை சார்ந்த உயிரினமாகும்.
வகுப்பு: (Insecta) வகுப்பில் உள்ளது. (Lepidoptera) எனும் வரிசையில் அடங்குகிறது.
வண்ணத்துப்பூச்சி வாழிடம்: இந்த வண்ணத்துப்பூச்சி எனது உலகம் முழுவதும் காணப்படுகிறது. குறிப்பாக பூந்தோட்டங்கள் காடுகள் மற்றும் பசுமை நிறைந்த நிலங்களில் இது அதிகமாக காணப்படுகிறது.
வண்ணத்துப்பூச்சியின் பணிகள்:
வண்ணத்துப்பூச்சிகள் இயற்கைக்காக பல பணிகளை செய்து வருகிறது. இந்த வண்ணத்துப்பூச்சிகள் இயற்கைக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் பயனுள்ள வகையில் உள்ளது. இது வெறும் அழகுக்காக மட்டுமல்ல சுற்றுச்சூழல் பசுமைக்காகவும் இது இருக்கிறது.
மகரந்தத்தை பரப்புதல்:
பட்டாம்பூச்சியானது ஒரு தாவரத்தின் மலரிலிருந்து அதன் மகரந்த துகள்களை மற்றொரு தாவரத்தின் பரப்புகிறது. இது தவறு இனப்பெருக்கத்திற்கு பெரும் பங்காற்றுகிறது.
சுற்றுச்சூழல் சீரமைப்பு:
வண்ணத்துப்பூச்சியின ஒரு பகுதிக்கான உயிரியல் சிரான நிலையில் காட்டும் குறிகாட்டிகளாக விளங்கி வருகிறது. பட்டாம்பூச்சியின் எண்ணிக்கையால் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழல் மாற்றங்களை காட்டும்.
உணவுச் சங்கிலியில் வண்ணத்துப்பூச்சியின் பங்கு:
புழு மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் பல பறவைகள் மற்றும் பாம்புகள் மற்றும் சிறிய உயிரினங்களுக்கு இது உணவாக பயன்படுகிறது. மேலும் வண்ணத்துப்பூச்சிகள் உணவு சங்கிலியை நிலை நிறுத்த உதவுகிறது.
அழகு மற்றும் கலையில் வண்ணத்துப்பூச்சியின் பங்கு:
சில கவிஞர்கள் மற்றும் ஓவியர்கள், இயற்கை ஆர்வலர்களுக்கு வண்ணத்துப்பூச்சியின் வண்ணங்களும் வண்ணத்துப்பூச்சியின் அசைவுகளும் அவர்களுக்கு முக்கியமானதாக இருந்து வருகிறது. வண்ணத்துப்பூச்சி இயற்கையின் மென்மையான தூதர்கள் என அறியப்படுகிறது.
மலரணைகள்: இந்த வண்ணத்துப்பூச்சியானது தேனீக்கள் மற்றும் பல பூச்சிகளை போலவே மலர்களிலிருந்து மகரந்தங்களை எடுத்துச் செல்கிறது.
பசுமை நிறைந்த சுற்றுச்சூழல்: வண்ணத்துப்பூச்சிகள் மிகவும் அழகாக பசுமை நிறைந்த சுழலில் காணப்படுகிறது எனவே இது பசுமை நிறைந்த சுற்றுச்சூழலை அமைத்து தர காரணமாக அமைகிறது.
அழகு மற்றும் கண்கவர் இயற்கை உயிரினம்:
சுற்றுலா மற்றும் கல்வி நிறுவனங்களில் மற்றும் சில இடங்களில் இது கண்களை கவரக்கூடிய வகையில் தாவரத்தில் அமர்ந்து இருக்கிறது.
வண்ணத்துப்பூச்சியின் சில சுவாரஸ்யமான தகவல்கள்:
- வண்ணத்துப்பூச்சிகள் ஏறத்தாழ இவ்வுலகில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வகை வண்ணத்துப்பூச்சிகள் இருக்கிறது என அறியப்படுகிறது.
- வண்ணத்துப்பூச்சிகள் மலர்களில் இருந்து தேனை உறிஞ்சுகின்றன.
- வண்ணத்துப்பூச்சிகள் இயற்கையின் நுண்ணிய செதில்களால் ஆனது இதன் காரணமாகதான் வண்ணத்துப்பூச்சி பல வண்ணங்களில் காட்சியளிக்கிறது.
- மொனார்க் என்ற இனத்தின் வண்ணத்துப்பூசிகள் சுமார் 4000 கிலோமீட்டர் வரை பறக்க கூடியது.
- வண்ணத்துப்பூச்சிகள் பெரும்பாலும் சில நாட்கள் மற்றும் சில வாரங்கள் மட்டுமே உயிர் வாழ்கின்றன.
- இவை சுற்றுச்சூழலுக்கு மிகவும் முக்கியமானவையாக விளங்கி வருகிறது.
வண்ணத்துப்பூச்சியின் சிறப்பு அம்சங்கள்:
அழகான சிறகுகள்: இந்த வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் அழகிய வண்ணங்களுடன் அழகான வடிவத்துடன் காட்சியளிக்கிறது.
சிறகின் மேல் உள்ள பவுடரான கோடுகள்: இது வண்ணத்துப்பூச்சியின் மின்னுவதற்கு காரணமாக இருக்கிறது.
இரு சுற்றுப் பார்வை: ஒற்றைக் கண்கள் மற்றும் உணர்வு திறன் அதிகமாக உள்ளது.
சாப்பிடும் உணவு: வண்ணத்துப்பூச்சிகள் தேன் மற்றும் மரச்சார்களை குடித்து வளருகின்றன.
வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:
- முட்டை பருவம்- பெண் வண்ணத்துப்பூச்சி இனப்பெருக்கத்திற்கு பிறகு அதன் முட்டைகளை தாவரத்தின் இலைகளில் அதன் முட்டைகளை இடுகின்றன.
- புழு பருவம் - சில நாட்கள் கழித்து முட்டையில் இருந்து வரும் புழுக்கள் தாவரத்தின் இலைகளை சாப்பிட்டு மெதுவாக வளருகின்றன.
- கூட்டுப்புழு பருவம்- புழுவானது சில நாட்கள் கழித்து தன்னைத்தானே சுற்றி கூட்டை உருவாக்கிக் கொள்கின்றன இதுவே கூட்டு புழு பருவம் ஆகும்.
- வண்ணத்துப்பூச்சி பருவம்- கூட்டுக் புழுவில் இருந்து சில நாட்கள் கழித்து அழகான அற்புதமான சிறிய வண்ணத்துப்பூச்சிகளாக அழகிய வண்ணத்துடன் கூட்டில் இருந்து வண்ணத்துப்பூச்சிகள் வெளிவருகிறது. பார்ப்பதற்கு மிகவும் அழகானதாக காட்சி இருக்கிறது.
இந்தியாவில் காணப்படும் சில வண்ணத்துப்பூச்சிகள்:
- Common Mormon
- Blue Tiger
- Plain Tiger
- Common Jezebel
- Lime butterfly
ஆபத்துகள்:
- வனநாசம்
- காலநிலை மாற்றம்
- பூச்சிக்கொல்லிகள்


0 Comments