வள்ளிக்கிழங்கு மற்றும் அதன் மருத்துவ குணங்கள் | Sweet potato and its medicinal properties

வள்ளிக்கிழங்கின் முக்கியத்துவமும் மருத்துவ குணங்களும்:

வள்ளிக்கிழங்கு என்பது ஒரு பாரம்பரியமான கொடி வகை தீங்கு தாவரமாக கருதப்படுகிறது. இது பெருமளவில் மலைப்பகுதியில் தானாகவே வளர்ந்து வருகிறது.மற்றும் இது உணவாக மருந்தாக மனிதர்களுக்கு பெருமளவில் பயன்படுகிறது. இது மலைகளில் தானே படரும் கொடி வகையைச் சார்ந்த தாவரமாகும். இது செவ்வள்ளி அல்லது இராசாவல்லி என்றும் அழைக்கப்படுகிறது.

வள்ளிக்கிழங்கு,சர்க்கரைவள்ளிக்கிழங்கு மற்றும் சிறுவள்ளிக்கிழங்கு என மூன்று வகைகளாக இந்த கிழங்கு உள்ளன. சங்க காலங்களில் கூறப்படும் கிழங்கு சுடியின் வேரில் விழும் ஒரு கிழங்காகும். இந்த வள்ளிக்கிழமை அதிக அளவு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

சாகுபடி செய்யும் காலம்: 

நடவு காலம்: ஆடிப்பட்டம் ஜூலை முதல் ஆகஸ்ட் 

மண் கலவை: செம்மண் மற்றும் நன்கு முக்கிய தொழு உரம் மற்றும் மணல் நன்றாக சேர்த்து தயாரிக்கப்படுகிறது. 

அறுவடை காலம்: சுமார் 160 நாட்களில் இந்த கிழங்கானது அறுவடைக்கு தயாராகிறது.

மருத்துவ பயன்கள்: 

  • மாவுச்சத்து நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை நிறைந்துள்ளன. 
  • சருமப் பிரச்சனைகள் செரிமான கோளாறுகள் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு அதிக நன்மைகளை தருகின்றன. 
  • உடல் மிகவும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு இது ஒரு வலிமை தரும் உணவாக உள்ளது. 
  • வள்ளி கிழங்கின் ஆன்ட்டிஆக்சிடன்ட்கள் வைட்டமின்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.
  • இந்தக் கிழங்கில் அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்வதால் முகப்பொலிவிற்கு மிகவும் அற்புதமாக உள்ளது. 
  • வள்ளி கிழங்கில் அதிகளவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பயன்படுகிறது. 
  • சர்க்கரைவள்ளி கழங்கில் உள்ள மெக்னீசியம் மற்றும் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்க இது உதவுகிறது. 
  • செரிமானத்திற்கு அதிக அளவில் பயன்படுகிறது. 
  • மனித உடலில் உள்ள சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இது அதிக பயனுள்ளதாக உள்ளது. 
  • நமது இதை ஆரோக்கியத்திற்கு பெரும் அளவில் உதவுகிறது. 
  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. 

பயிரிடும் முறை: 

நடவு காலம் - நீர் பாசன வசதி உள்ள இடங்களில் ஜூன் முதல் ஜூலை மற்றும் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதங்களில் நடவு செய்யலாம். 

மண் வகை மற்றும் நிலம்:

மண் வகை நல்ல வடிகால் வசதி உள்ள மணல் கலந்த மற்றும் செம்மண் அல்லது கரிசல் மண இதற்கு வளர்வதற்கு சிறந்ததாக உள்ளது.

மண்ணின் PH - அளவு: 5.6 முதல் 6.7 வரை இருக்க வேண்டும் 

நிலத்தை தயார் செய்யும் முறை: நிலத்தை இரண்டு முதல் மூன்று முறை நன்றாக தொழு உரம் சேர்த்து 60 சென்டிமீட்டர் இடைவெளியில் அமைக்க வேண்டும்.

விதை மற்றும் நடவு செய்யும் முறை:

விதை நுனிக்கொடி அல்லது கொடியின் துண்டுகள் விதை நடுவதற்கு பயன்படுகின்றன. 

நடுதல் முறை:மண்ணின் பக்கவாட்டில் 15 முதல் 30 சென்டிமீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். மத்திய பகுதி மட்டும் நாம் மண்ணில் புதைத்து வைக்க வேண்டும். 

நீர் மற்றும் உரம் போடுதல்:

நீர் நிர்வாகம் நடவு செய்த மூன்றாவது நாளில் நாம் தண்ணீர் விட வேண்டும் அதன் பிறகு மண்ணின் இறப்பதத்தை கொடுத்து நாம் மிகவும் கவனமாக நீர் பாச வேண்டும். 

உரம் போடுவது: தழைச்சத்து மணிச்சத்து சாம்பல் அல்லது மாட்டுச்சாணி அல்லது அடி உரமாகவும் வளர்ச்சி கட்டங்களில் நாம் மீண்டும் மீண்டும் போடலாம். இதற்கு நுண்ணுயிர் உரமும் நாம் பயன்படுத்தலாம். 

வளர்ச்சி பராமரிப்பு:

பந்தல் போல் அமைத்தல் கொடியின் வளர்ச்சிக்காக நாம் கொடி படர்வதற்கு பந்தல் போல் கொம்புகளைக் கொண்டு அமைக்க வேண்டும். 

களை பறித்தல்: மாதத்திற்கு ஒருமுறை நாம் களைகளை எடுப்பது மிகவும் நல்லது. 

நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாடு:

நாம் பூச்சிகளிடமிருந்து கொடியினை நன்றாக பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் பூச்சிகள் கொடிகளை தின்றுவிடும். இதனால் நாம் இருபது நாட்களுக்கு ஒரு முறை பூச்சிக்கொல்லிகளை தெளிக்க வேண்டும். 

கிழங்கு மண்ணில் அழுவாதபடி நாம் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். 

அறுவடை காலம்:

சுமார் கிழங்கு நட்டு வைத்த 160 நாட்களில் நாம் இந்த கிழங்கை அறுவடை செய்யலாம். கொடிகள் வாடத் தொடங்கும் போது நாம் நன்றாக கவனித்து கிழங்குகளை அறுவடை செய்ய வேண்டும்.

வள்ளிக்கிழங்கில் நாம் நிறைய உணவுகள் செய்யலாம் அதில் சிலவற்றை பார்ப்போம்! 

வள்ளிக்கிழங்கு அல்வா:

தேவையான பொருட்கள்:

  • வெள்ளிக்கிழமை
  • வெள்ளம்நெய்
  • ஏலக்காய் தூள்
  •  முந்திரி

செய்முறை:

  • நாம் வள்ளிக்கிழங்கினை நன்றாக முதலில் வேக வைக்க வேண்டும்.
  • பிறகு அதை நன்றாக நசுக்கி கொள்ள வேண்டும்.
  • பின்பு அதனை வெள்ளத்துடன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
  • கடைசியில் ஏலக்காய் தூள் மற்றும் முந்திரியை மேலே தூவினால் நாம் எதிர்பார்த்த அல்வா ரெடி!

வள்ளிக்கிழங்கு பொரியல்:

தேவையான பொருட்கள்:

  • வேக வைத்த வள்ளிக்கிழங்கு
  • கடுகு
  •  சீரகம்
  • மிளகாய் 
  • எண்ணெய் 

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் எண்ணெய்யை சேர்த்து பிறகு அதில் சிறிதளவு கடுகு சேர்க்க வேண்டும்
  • ஜீரகம் சிறிதளவு சேர்த்து நன்றாக தாளிக்க வேண்டும்
  • பிறகு நீங்கள் வேக வைத்த கிழங்கினை சேர்த்து மசாலா தூள்களை சேர்த்து வதக்கினால் நீங்கள் எதிர்பார்த்த பொரியல் ரெடி!

வள்ளி கிழங்கு சூப்:

தேவையான பொருட்கள்:

  • வள்ளி கிழங்கு 
  • பச்சை பட்டாணி 
  • இஞ்சி
  • சிறிதளவு பூண்டு
  •  வெண்ணை 
  •  நீர்

செய்முறை:

  • அனைத்தையும் வேக வைத்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்
  • அதை பின்பு நன்றாக வெப்பத்தில் கொதிக்க வைக்க வேண்டும் 
  • பின்பு நீங்கள் மிதமான சுற்றில் இறக்கி வைக்கலாம் நீங்கள் எதிர் பர்த்த சூப் ரெடி!

வெள்ளி கிழங்கு இனிப்பு உருண்டை:

தேவையான பொருட்கள்:

  • வேக வைத்த கிழங்கு
  •  சர்க்கரை
  •  தேங்காய் துருவல் 
  •  ஏலக்காய் தூள் 

செய்முறை:

  • இவைகள் அனைத்தையும் நன்றாக சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்
  • பின்பு ஒரு உருண்டையாக உருட்டினால் இதுதான் இனிப்பு உருண்டை.

                                 நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

0 Comments