அவரைக்காய் கொடி மற்றும் அவரைக்காய் பற்றிய தகவல்கள்:
அவரைக்காய் என்பது ஒரு கொடி வகையாகும். இது மிகவும் நீண்டதாக வளரும் தன்மை கொண்டது.எனவே இது கொடியாக கருதப்படுகிறது. அவரைக்காய் என்பது அவரைச் செடியில் காய்க்கும் காயாகும். அவரைக் கொடியை நாம் வீட்டில் கொம்புகளை நட்டு ஒரு பந்தல் போல் அமைத்து நாம் அவரைக் கொயினை வளர்க்கலாம். அவரைக்காய் கொடி ஒரு நீண்டு வளரும் ஒரு சுற்று கொடியாகும். இது மிகவும் சுவையானதும் மற்றும் அதிக சத்தும் நிறைந்துள்ள காயாகும்.
அவரைக்காயில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்தும் மிகவும் அதிகமாக உள்ளது. அவரைக்காயின் பூக்கள் வெளிர் நீல அல்லது வெண்ணிற பூக்களை கொண்டது. நாம் அனைவரும் அவரைக்காய் மிகக்குறைவாக நினைக்கின்றோம் ஆனால் அது மிகவும் நமக்கு மலிவாகவே கிடைக்கிறது அதனால் நாம் அதை பெரிதாக கண்டு கொள்வதில்லை. அதில் இருக்கும் நன்மைகள் தெரியாமல் நாம் அதை தவிர்க்கிறோம். அவரைக்காய் நமக்கு அதிக நன்மைகளை தரக்கூடியது ஏனெனில் நாம் இதை மறக்கக்கூடாது.
அவரைக்காய் ஆனது வெப்ப மண்டல மற்றும் மெத வெப்பமண்டல பிரதேசங்களில் விளைகிற ஒரு கொடி வகை காய்கறி ஆகும். அவரைக்காய் பெரும்பாலும் கார்த்திகை,மார்கழி,தை மாதங்களில் தொடங்கி முன் பணி மற்றும் பின் பணி காலங்களில் அதிகமாக விளைவிக்க கூடியது. அவரைக்காய் ஹைபிரிட் காய் வகைகள் அனைத்து காலத்திலும் கிடைக்கின்றன.
நாம் ஹைபிரிட் காய்களை தவிர்த்து நமக்கு பருவ காலத்தில் கிடைக்கும் நாட்டு அவரைக்காய் மிகவும் ஏராளமான சத்துக்களை நமது உடலுக்கு தருகிறது.எனவே நாம் அவரைக்காய் தவிர்க்காமல் அதை சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. அவரைக்காயில் நம் வயிற்றில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை அவரைக்காயில் உள்ளது. எனவே கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தினமும் அவரைக்காய் சாப்பிட்டால் அவர்களுக்கு மிகவும் நல்லது.
அவரை கொடியின் விவரம்:
அறிவியல் பெயர் : Vigna unguiculata
புது பெயர்கள்: அவரை கௌ பீன்,பிளாக் ஐட் பீன்
வகை : பருப்பு வகையைச் சார்ந்தது.
பயன்கள்:
- உடல் ஆரோக்கியம்-நார்ச்சத்து விரதம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது.
- சமையல்-அவரைக்காய் அவரை பருப்பு அவரை குழம்பு என பல வகைகளில் நாம் இதை பயன்படுத்தி சாப்பிடலாம்.
- மருத்துவ நன்மைகள்-ஜுரணத்தை மேம்படுத்தும் மற்றும் ரத்த சுத்திகரிப்பு உடலுக்கு அதிக பலம் தரும்.
அவரைக் கொடியை எப்படி வளர்ப்பது?
விதை நடவு :
- நல்ல தரமான விதைகளை முதலில் தேர்ந்தெடுக்கவும்.
- அவரை விதைகளை பஞ்சகாவியம் அல்லது சோற்றுக்கஞ்சியில் 6 மணி நேரம் நன்றாக ஊற வைத்து பின்னர் விதைகளை நிழலில் உலர்த்தி நட்டால் விதை நன்கு வளரும்.
- ஒரு விதை நட்டால் அது மிகவும் படர்ந்து அதிகமாக கொடி போல் பரவி வளர்கிறது.
தொட்டியை பயன்படுத்துவது:
2 பங்கு மண் + 1 பங்கு உரம் + தேங்காய் நார் அல்லது மணல் சிறிதளவு + கடலை புண்ணாக்கு ஆகியவற்றை ஒரு பிளாஸ்டிக் கவரோ அல்லது ஏதோ ஒரு விதை வளரும் தன்மை கொண்ட தொட்டியிலோ நாம் விதைகளை நட்டு வைக்கலாம்.
சூரிய ஒளி மற்றும் நீர்:
- சூரிய ஒளி: சூரிய ஒளியில் தினமும் குறைந்தது 6 மணி நேரடி சூரிய ஒளி ஆனது தேவைப்படுகிறது.
- நீர்ப்பாசனம்: நாம் வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறையாவது மண் ஈரமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அவரைக் கொடியின் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு:
- அவரைச் கொடியின் விதை நட்ட 45 நாட்களில் கொடியில் பூக்கள் தோன்றுகின்றன.
- அவரைச் கொடியின் பூக்கள் உதிராமல் இருக்க பெருங்காயத்தூள் + மோர் கலந்த கலவை கொடியின் மேல் தெளிக்கலாம்.
- அவரைச் கொடியின் மேல் பூச்சிகள் தாக்கினால் அதற்கு வேப்ப எண்ணெய் தெளித்தால் பூச்சிகளிடமிருந்து செடி மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.
நாம் அவரை கொடிக்கு அளிக்க வேண்டிய உரம் மட்டும் ஊட்டச்சத்து:
அவரை கொடியில் பூக்கள் பூக்கும் நேரத்தில் வேப்பம் புண்ணாக்கு எண்ணெய் மற்றும் கடலை புண்ணாக்கை ஊறவைத்து அதனை நன்றாக வடிகட்டி நாம் அவரை கொடியின் வேரில் ஊற்றலாம்.
அவரை கொடியின் மேல் உட்காரும் மாவு பூச்சியின் தாக்குதலுக்கு நாம் இயற்கை ப பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தினால் மிகவும் சிறந்தது.
அறுவடை காலம்:
நாம் அவரை விதை விதைத்த 60 முதல் 70 நாட்களில் காய்கள் தயாராகின்றன காய்கள் இளமையாக இருக்கும் போது நாம் அதை அறுவடை செய்து பயன்படுத்தினால் மிகவும் அற்புதமாக இருக்கும்.
அவரைக்காய் குழம்பு எப்படி வைப்பது?
- அவரைக்காய் - 1 கப் நறுக்கியது
- வெங்காயம் - 1கப் நறுக்கியது
- தக்காளி - 1 நறுக்கியது
- புளி மற்றும் சிறிய எலுமிச்சை 🍋 - நன்கு ஊற வைத்து சாறு எடுக்க வேண்டும்.
- மஞ்சள் தூள் - 1/4 டிஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டிஸ்பூன்
- சாம்பார் தூள் - 1 1/2 டிஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
- கடுகு மற்றும் சீரகம் - தாளிப்பதற்கு பயன்படுகிறது.
- கறிவேப்பிலை - சிறிதளவு
- துருக்கிய தேங்காய் - விருப்பமிரந்தால் போடலாம்.
செய்முறை:
- முதலில் அவரைக்காயை நன்கு கழுவி சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும்.
- பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சிறிதளவு கடுகு சீரகம் கருவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.
- வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதங்கும்படி வதக்கவும்.
- அதன் பிறகு அவரைக்காய் சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக வதக்கவும்.
- வதங்கிய பிறகு புளிச்சாறு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சாம்பார் தூள் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
- அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 முதல் 15 நிமிடம் மிதமான தீயில் குழம்பினை கொதிக்க விடவும்.
- உங்களுக்கு வேண்டுமென்றால் தேங்காய் துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் சமைத்து பின் இறக்கி சாப்பிடலாம்.



0 Comments