ஆலமரம் மற்றும் அதன் சிறப்புகள் | Banyan tree and its properties

 ஆலமரம் பற்றிய  தகவல்கள்:

ஆலமரம் என்பது இந்தியாவில் தேசிய மரமாகும். இது பல பரம்பரைகளிலும் ஆன்மிகத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த மரமாக உள்ளது. ஆலமரம் என்பது இந்தியாவின் மரங்களின் மிகவும் பெரியதாகவும் புனிதமான பசுமை நிறைந்த வாழ்க்கை மரமாகவும் இருக்கின்றன. இது தமிழர் பண்பாட்டிலும் இயற்கை மருத்துவத்திலும் சமூகவியல் வாய்மையிலும் ஆழமான பிணைப்புகளை கொண்டது. 

இது மிகவும் பெரிய மற்றும் அகலமான மரமாக இது நீண்ட காலம் வாழக்கூடிய மரமாகும். இந்திய கலாச்சாரத்தில் இது ஒரு புனிதமான மரமாக  கருதப்படுகிறது.கோவில்கள் மற்றும் கிராமங்களில் அதிக அளவு காணப்படுகிறது. பல சமயங்கள் மற்றும் புராணங்களில் ஆலமரங்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.கடந்த காலங்களில் ஆலமரத்தின் அருகில் தான் கிராமக் கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தனர். 

ஆலமரத்தில் உள்ள விழுதுகளை பிடித்து  நாம் ஊஞ்சலாடி விளையாடலாம். இதனுடைய விழுதுகள் மிகவும் வலிமையாக இருக்கும். முதிர்ந்த ஆலமரங்கள் தடிமன விழுதுகளை கொண்டிருக்கின்றன.இந்த விழுதுகள் வளர்ந்து தண்டுகளை பிறகு மண்ணில் புதைந்து மரத்திற்கு அதிக அளவு வலிமையை தருகின்றன.ஒரு ஆலம்பரமானது ஆயிரக்கணக்கான விருதுகளை கொண்டிருக்கும். 


சிறப்புகள்: 

இந்த மரத்தின் பழங்களை உண்ணும் பறவைகள் சாப்பிட்டுவிட்டு அதன் மூலம் விதைகள் அதிக அளவில் பரப்பப்படுகிறது. 

பயன்கள்: 

  • ஆலமரத்தின் பால் ஆனது மூட்டு வலி மற்றும் தோல் நோய்களுக்கு பயன்படுகிறது 
  • ஆலமரத்தில் உள்ள பட்டை நிரிழிவு நோய்களுக்கு பயன்படுகிறது 
  • ஆலமரத்தில் உள்ள விழுதுகள் ஈறு வலிக்கு பயன்படுகிறது 
  • ஆலமரத்தின் இலைகள் ஆட்டுக்கு தீவனமாக பயன்படுகிறது 
  • ஆலமரத்தில் உள்ள பழங்கள் பறவைகள் மற்றும் குரங்குகளுக்கு உணவாக பயன்படுகிறது. 
  • ஆலமரத்தின் மேல் இலைகள் அதிக அளவில் உள்ளதால் இந்த மரத்தின் மூலம் நமக்கு காற்றோட்டமும் குளிர்ச்சியும் அதிக அளவில் கிடைக்கிறது. 

மர அமைப்பு: 

  • மிகப்பெரிய மரமாக காணப்படும் இதனுடைய துணைவர்கள் பெரிய அளவில் இருக்கும். 
  • ஒரு மரமே நிறைய மரங்கள் இருப்பது போல தோற்றம் அளிக்கின்றன இதில் கிளைகள் அதிகமாக இருக்கும். 
  • பரந்து விரிந்து மிகவும் அதிக நிழல் தரும் மரமாக உள்ளது. 
  • தனி மரமே ஒரு தோப்பு போல் காணப்படும். 

வளரும் சூழ்நிலை: 

  • வெப்பமண்டல நிலைகளில் வளரும் 
  • சூரிய ஒளி அதிகமாக உள்ள இடங்கள் தேவைப்படுகிறது 
  • நன்கு வடிவில் அமைந்த மண் தேவைப்படுகிறது 
  • நீர் தேவை குறைவாக இருந்தாலும் இந்த மரம் வளரும். 
  • பறவைகள் மூலம் அதிக அளவில் பரவி வளர்ந்து வளர்கின்றன. 

ஆன்மீக முக்கியத்துவம்: 

  • இந்தியா மற்றும் உலகின் பிறர் பகுதிகளிலும் ஆலமரமானது ஒரு புனிதமாக  கருதப்படுகிறது.
  •  இது சிறப்பு மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ்வதை  தொடர்புபடுத்துகிறது.
  • மேலும் பல கலாச்சாரம் மற்றும் ஆன்மிக நிலை நடைமுறையில் இது ஒரு மரியாதைக்குரிய மரமாக கருதப்படுகிறது 
  • ஆலமரத்தின் இலைகளில் கிருஷ்ணர் ஓய்வெடுப்பதாக நம்பப்படுகிறது 
  • புத்தர் ஞானம் பெற்ற இடம் என ஆலமரத்தின் கீழ் குறிப்பிடுகிறது. 
  • சென்னை அடையாறில் உள்ள ஒரு ஆலமரமானது 450 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என கருதப்படுகிறது.

சுற்றுச்சூழல் ஆலமரத்தின் பங்கு: 

  • ஆலமரமானது பல பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவளிக்கும் மரமாக உள்ளது மற்றும் அது தங்கும் வாழ்விடமாகவும் உள்ளது. 
  • கிராமங்களில் பொதுக்கூட்டங்கள் கூட்டுவதற்கு அதிக அளவில் அடர்த்தியான கிளைகள் உள்ளதால் விழுதுகள் மூலம் பரந்த நிழலை தருகிறது. 
  • இது விசுவாசத்திற்கு இன்றியமையாததாக உள்ளது.

ஆலமரத்தை நாம் தோட்டத்தில் எப்படி வளர்க்கலாம்! 

நல்ல நன்மைகளை தரக்கூடிய இந்த ஆலமரத்தை நாம் தோட்டத்தில் வளர்ப்பதும் சாத்தியம்தான் நாம் அதை சரியாக திட்டமிட்டு மற்றும் பராமரித்து வளர்க்க வேண்டும்.அப்படி வளர்த்தால் கண்டிப்பாக நாம்  ஆலமரத்தினை தோட்டத்தில் வளர்க்கலாம். 

இடத்தை சரிபார்த்தல்: 
  • ஆலமரம் ஆனது பறந்து விரிந்து வளரக்கூடிய ஒரு மரமாகும்.
  • இதன் கிளைகள் மற்றும் விழுதுகள் அதிக அளவில் பறந்து காணப்படுகின்றன.
  •  இதனால் நாம் 10 முதல் 20 அடி வரை இடம் விட வேண்டும்.
  • மிகவும் அதிக அளவில் பறந்து திரிந்து வளரக்கூடிய மரமாக ஆலமரம் இருப்பதால் இதன் வேர்கள் அதிக அளவில் பூமியில் படர்கிறது.
  •  எனவே நீங்கள் எங்கள் வீட்டின் அருகில் நடக்கூடாது நீங்கள் மிகவும் தூரமாக மரம் நடுவது நல்லது.
  • இல்லையென்றால் மரத்தின் வேர்கள் உங்கள் வீட்டை பாதிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
நடுதல் முறை: 
  • நிறைய நேரங்களில் ஆலமரத்தின் பழங்களை பறவைகள் சாப்பிட்டுவிட்டு அதனுடைய விதைகளை ஆங்காங்கே போட்டு விடுகின்றன. இதன் மூலமாகவும் ஆலமரம் வருகின்றன.
  • நான் ஆலமரத்தின் பக்கத்தில் அல்லது பறவைகள் போட்ட விதையிலிருந்து வரும் சிறிய கன்றுகளை நாம் அந்த மண்ணுடனே பிடுங்கி எடுத்து அதை நாம்  மற்றொரு இடத்தில் மிகவும் ஈரப்பதன் உள்ள இடத்தில் நடுவதன் மூலமும் மரம் வளர்க்கலாம். 
  • ஆலமரம் பெரும்பாலும் அனைத்து மண் வகைகளிலும் வளரக்கூடியவை. இருந்தாலும் வண்டல் மண் வகை எதற்கு சிறந்தது. 
எப்படி மரத்தை பராமரிப்பது? 
நாம் ஆலமரம் சிறிதளவு வளர்ந்த உடன் அதற்கு நீர் தினமும் ஊற்ற வேண்டும். 

பிறகு ஆலமரம் ஓரளவுக்கு வளர்ந்தவுடன் நான் நீர் ஊற்றவில்லை என்றாலும் பருவ காலஙகளில் கிடைக்கும் பருவ காலங்களில் கிடைக்கும் மழை நீரை வைத்து மிகவும் சிறப்பாக நிழல் தரக்கூடிய மரமாக இருக்கும். 

ஆலமரம் வளர்ந்தவுடன் அதனுடைய விழுதுகள் மிகவும் அதிக அளவில் இருக்கும் எனவே நீங்கள் அதனை வெட்டி நன்கு பராமரித்து வர வேண்டும். 

இதன் மூலம் நீங்கள் மரத்தின் பரவலை கட்டுப்படுத்தலாம். இதற்கு நாம்  இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

நாம் கவனிக்க வேண்டியவை: 
  • நாம் ஆலமரத்தினை வீட்டின் அருகிலோ அல்லது உங்களுடைய ஏதாவது ஒரு கட்டடத்தின் அருகிலோ மரத்தின் வைக்க கூடாது இதனுடைய வேர்கள் அதனை பாதிக்கும். 
  • நீங்கள் ஆலமரத்தின் நிழல் அதிக அளவில் இருப்பதால் இதற்கிடையில் வேற எந்த செடி நட்டாலும் நிழல் அதிகமாக உள்ளதால் செடி வளர்ச்சிக்கு தடையாக இருக்கலாம்.

                                            "ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி"

0 Comments