கேழ்வரகு தானியத்தின் நன்மைகள் மற்றும் வளர்ப்பு முறைகள் | Benefits and cultivation methods of sorghum

கேழ்வரகு என்பது கிராமப்புறங்களில் அதிகமாக பயிரிடப்படும் ஒரு சிறுதானிய வகையாகும். 

இந்த பயிர் விளைவிக்க தண்ணீர் அதிகமாக தேவைப்படாது. அதனால் விவசாயிகள் அதிகமானோர் இந்த சிறுதானியத்தை பயிர் செய்ய விரும்புவார்கள். 

கேழ்வரகு பயிர் புற்கள் போலவே  இருக்கும்.அதனால் பயிர் கூடவே வளரும் புற்கள் அதிவேகமாக வளர்ந்து பயிரை மறைக்கும் அளவிற்கு வந்துவிடும். இதை தடுக்க தனியாக நாற்று விட்டு வளர்த்து அதன் பிறகு கேழ்வரகு நாற்றுகளை பிடுங்கி தனியாக நிலத்தை உழுது பக்குவப்படுத்தி சேற்று உருவாக்கி அந்த சேற்றில் இந்த நாற்றுகளை நடுவார்கள். இந்த முறையில் தனியாக நாற்று நடுவதால் அதன் கூடவே வளரும் புற்கள் வளர்வதற்கு நேரம் ஆகும். அதற்குள் பயிர் வளர்ந்து விடும். 

கேழ்வரகு சாகுபடி காலம் : 

கேழ்வரகு பயிரை  இரண்டு முறைகளில் விவசாயிகள் விளைவிப்பார்கள். ஒன்று தண்ணீர் பாய்ச்சி வளர்க்கும் பாசன பயிர் வளர்ப்பு மற்றொன்று தண்ணீர் பாய்ச்சாமல் வளர்க்கும் மானாவாரி பயிர் அதாவது மானாவரி காலம் என்பது மழைக்காலத்தில் நடப்படும் பயிர்முறையை குறிக்கும்.மழைக்காலத்தில் தண்ணீர் பாய்ச்ச வேண்டியது இல்லை. அதனால்தான் விவசாயிகள் அனைவரும் மானாவாரி காலத்தில் பயிர் இடுவதையே விரும்புவார்கள்.

நாம் இப்பொழுது இரண்டு பயிர் வளர்ப்பு முறைகளையும் பார்ப்போம்.

1) பாசன பயிர் வளர்ப்பு முறை :

பாசன பயிர் வளர்ப்பு முறையில் விவசாயிகள் தங்கள் கிணற்றில் அல்லது ஆழ்துளை கிணறுகளில் இருந்து மின் இரைப்பான் மூலம் தண்ணீர் பூமியின் அடியில் இருந்து எடுத்து பயிர்களுக்கு பாய்ச்சுவார்கள். விவசாயிகள் டிசம்பர் முதல் ஜனவரி வரை மற்றும் ஏப்ரல் முதல் மே வரை ஆகிய இரண்டு பருவங்களில் இந்த பயிர் வளர்ப்பு முறையில் கேழ்வரகு பயிரை சாகுபடி செய்வார்கள்.

2) மானாவாரி பயிர் வளர்க்கும் முறை : 

மழைக்காலத்தில் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய தேவை இருக்காது. மழையே தண்ணீர் பாய்ச்சி பயிரை வளர்த்து விடும். 

வெயில் காலம் முடிந்து மழை காலம் தொடங்கும் காலமான ஜூன் முதல் ஜூலை வரையிலான மாதத்தில் இந்த பயிர் விளைவிக்கப்படுகிறது. 

அதேபோல குளிர்காலத்தில் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை கடுமையான மழைப்பொழிவு இருக்கும் காரணத்தினால் கேழ்வரகு பயிரை விவசாயிகள் அதிகமாக விளைவிப்பார்கள்.

மானாவாரி காலங்களில் வறட்சியை தடுக்க பூக்கும் காலங்களில் துரிதமாக செயல்பட்டு விதைத்து விட வேண்டும்.

கேழ்வரகு நடும் முறை : 

கேழ்வரகு பயிரை இரண்டு முறையில் நடுவார்கள்.

கேழ்வரகு பயிரை நடும் முன் தண்ணீர் விட்டு ஏர் உழுது வயலை நன்கு பக்குவப்படுத்தி விதைகளை அப்படியே தூவி விடுவார்கள். அந்த விதைகள் காலப்போக்கில் முளைத்து செழிப்பான கேழ்வரகு பயிராக வளர்ந்து கேழ்வரகு தானியத்தை கொடுக்கும். இது முதல் முறை. 

இரண்டாவது முறையில் நெல் நடுவது போல கேழ்வரகு நாற்றுகளையும் நாற்றங்கால் உருவாக்கி அதில் ஒவ்வொன்றாக நடுவார்கள் இதன் மூலமாக கேழ்வரகு பயிர்களை குலைநோய் தாக்காமல் இருக்கும். 

நீர் மேலாண்மை : 

கேழ்வரகு பயிரை நடவு செய்து நாளில் அதற்கு முழுமையாக தண்ணீர் விட வேண்டும். அதற்குப் பின் நான்கு நாட்கள் கழித்து மீண்டும் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதற்கும் பின் பத்து நாள் கழித்து கேழ்வரகு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

இப்படியே 10 நாட்களுக்கு ஒரு முறை அதன்பின் தண்ணீர் காட்டினால் கேழ்வரகு பயிறு நன்றாக ஒரு மாதத்தில் வளர்ந்து விடும். 

முக்கியமாக தண்ணீர் பாய்ச்சும் போது தண்ணீர் அதிகமாக தேங்கும் அளவுக்கு பாய்ச்சக் கூடாது. ஏனென்றால் இது நெல் மணிகள் போன்ற அல்ல நெல் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவது போல் பாய்ச்சக் கூடாது. நெல் என்பது தேக்கு நீர் பாசனத்தில் வளரும் பயிர் வகை. ஆனால் கேழ்வரகு அப்படி அல்ல எளிதாக அதன் வேர் அழுகிவிடும். ஆதலால் தண்ணீர் அதிகமாக தேங்கும் அளவுக்கு நீர் பாசனம் செய்யக்கூடாது. அழகாக தண்ணீர் மண்ணில் வேர்களில் ஊறும் அளவுக்கு மட்டும் பயிர்களுக்குபாய்ச்ச வேண்டும்.

அறுவடை முறை : 

கேழ்வரகு பயிர் நன்கு வளர்ந்து பூத்து தானியங்களை அதன் பூவில் வைக்கும். இந்த தானியங்கள் நன்றாக முற்றிய பிறகு செங்கருப்பு நிறத்தில் இருக்கும். அப்படி இருந்தால் கேழ்வரகு நன்றாக முற்றியுள்ளது என்று அர்த்தம். 

முற்றிய கேழ்வரகு பயிரை முழுதாக அறுக்காமல் நுனி மற்றும் அறுப்பார்கள். மீதியுள்ள கேழ்வரகு பயிரின் அடிதட்டை மாட்டிற்கு தீவனமாக போட்டு விடுவார்கள்.

அறுத்துக் கொண்டு போன கேழ்வரகு கதிரை நன்றாக அடித்து தானியங்களை பிரித்தெடுப்பார்கள். பாரம்பரிய முறையில்  தானியத்தை அறுத்த கேழ்வரகு கதிர்களை தரையில் ஒரு பை விரித்து கொட்டி மாட்டை விட்டு சுற்றி சுற்றி வர வைப்பார்கள். 

ஏன் மாட்டை விட்டு சுற்றுகிறார்கள் என்றால் அப்பொழுதுதான் மாடு கால் பாதங்கள் கதிரை மிதித்து மிதித்து தானியங்கள் தனியாக பிரித்தெடுக்க முடியும். பிரித்தெடுத்த தானியங்கள் தூசி செத்தைகள் மற்றும் உமிக்களுடன் காணப்படும். 

அதை நீக்க முறம் எடத்து நன்றாக விசிறி விடுவார்கள். அப்பொழுது காற்றில் அந்த தூசுக்கள் பறந்து போகும். தானியங்கள் தனியே இருக்கும். ஏனென்றால் தூசிக்கு எடை கிடையாது. ஆனால் தானியங்கள் குறைந்த அளவு எடை கொண்டிருப்பதால் அவை பறந்து போகாது. இந்த முறைக்கு தூற்றுதல் என்று பெயர்.

0 Comments