மாட்டை வைத்து நடக்கும் அரசியல் | பருவதமலை விவசாயி

பண்டைய காலத்தில் இருந்த விவசாய முறைக்கும் தற்போது இருக்கும் விவசாய முறைக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளது. 

காரணம் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நவீன விவசாயம் முறைக்கு விவசாயிகள் மாறி உள்ளார்கள். 

ஆதி காலத்தில் ஏர் கலப்பை பூட்டி உழவு செய்த விவசாயிகள் தற்போது அதற்கு சோம்பேறித்தனப்பட்டு டிராக்டர் மூலம் நிலத்தை உழுது வருகிறார்கள். ஏனென்றால் முன்பு ஒரு ஏக்கர் நிலத்தை முழுவதற்கு நான்கு நாட்கள் தேவைப்பட்டது ஆனால் டிராக்டர் வந்த பிறகு ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு மணி நேரத்தில் உழுது விடுகிறது.. இதை வைத்து உழவர்களிடம் ஆசையை தூண்டி மாட்டை விவசாயத்திலிருந்து வெளியேற்று டிராக்டர்களையும் உழவு இயந்திரங்களையும்  பரபரப்பாக சந்தைப்படுத்தியது.

இதனால் மக்கள் பேராசை கொண்டு போட்டி போட்டு டிராக்டர் இயந்திரங்கள் வாங்கி நிலத்தை விட ஆரம்பித்தார்கள்.. இதில் தான் ஆபத்துகள் வளர ஆரம்பித்தது.. ஏனென்றால் ஒரு நிலத்தில் தொடர்ந்து ஒரு வார காலம் நடந்து சென்ற அந்த இடத்தில் முளைத்து இருந்த பொருட்கள் இறந்து போய் அங்கு ஒரு புதிய பாதை உருவாகி இருக்கும்.. 60 கிலோ எடை கொண்ட மனித நடக்கும்போது நிலத்தில் இவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டால் ஆறு டன் எடை கொண்ட டிராக்டர் நிலத்தில் இறங்கி உழும்போது அங்கே எப்படி பயிர் வளரும்.. புற்கள் தானே முளைக்கும் தவிர அங்கே பயிர் வளராது. பயிர் வளர்வதற்கான ஆற்றல் அங்கு இருக்காது.

ஏனென்றால் டிராக்டர் இயந்திரங்கள் மண்ணை உழு.. சும்மா மண்ணை கிளறி விட்ட பிறகு மீண்டும் அதுவே நன்றாக அழுத்தி மண்ணை கெட்டிப்பட வைத்து விடுகிறது..

உழவுக்கு பயன்பட்ட மாடு டிராக்டர் வந்த பிறகு மெல்ல மெல்ல விவசாயத்திலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டது.. டிராக்டர் விற்பனைக்காக அரசியல் பக்கத்தில் அநியாயமாக மாடுகள் கொல்லப்படும் அழிக்கப்பட்டும் வருகிறது.

அதனால் காளை மாடுகள் வளர்ப்பு குறைந்து கறிக்கடைக்கு அனுப்பி வருகிறார்கள்.. இதனால் நமது நாட்டு காளை மாடுகள் அழிந்து விட்டன.. ஒன்று இரண்டு காளை மாடுகள் தான் ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு போட்டிகளுக்காக பயன்படுத்தப்பட்டு இன்றும் வளர்க்கப்பட்டு வருகிறது.

பசு மாடுகளை மட்டுமே பால்களுக்காக விவசாயிகள் வளர்க்கிறார்கள். அதிலும் நாட்டு பசுக்கள் கிடையாது ஹைபிரேட் முறையில் உருவாக்கப்பட்ட கலப்பு மாடு இனங்களான ஜெர்சி, சீமை மாடுகள் அதிகமாக பரவிவிட்டது. 

இந்த ஜெர்சி சீமை மாடுகளின் பால் குடித்தால் எந்த சத்தும் கிடைப்பதில்லை. இந்தப் பால் குடிப்பதனால் புற்றுநோயும் மேலும் பிற நோய்களும் வருவதற்கான ஆபத்துகள் இருக்கிறது.

காரணம் வீரியமிக்க நாட்டு மாடுகள் உருவாக்க அதற்கான விந்தணுக்கள் விவசாயிகளிடம் இல்லை. தனியார் நிறுவனம் சினை ஊசி மூலம் செலுத்தும் விந்தணுக்கள் மூலம் தற்போது மாடுகளுக்கு கருத்தரிப்பு உருவாக்கப்படுகிறது. 

இதை தடுக்க வேண்டும் என்றால் ஆதிகால விவசாய முறையை மக்கள் கையாள வேண்டும். மீண்டும் மாடுகளை உழவுக்கு பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் மாடுகள் கறிக்கடைக்கு போகாது. 

ஒரு கூட்டம் மாட்டு கறி சாப்பிட்டால் அவர்கள் இந்துக்களை கிடையாது என்ற கண்ணோட்டத்தில் இந்து மதத்தை வளர்ப்பதற்காக பசுவை புனிதமாகி தெய்வமாக்கி இருக்கிறார்கள்.. இது ஒரு சில அரசியல் கட்சிகள் அரசியல் செய்வதற்காக மாடுகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார்கள்.. 

இந்த அயோக்கிய அரசியல்வாதிகளிடமிருந்து மக்கள் தெளிவு பெற வேண்டும். மாடும் ஒரு உயிர் தான்; ஆடு,கோழி போல. ஆனால் இதை உணராது ஆடு கோழிகளை ருசித்து சாப்பிடுவார்கள் ஆனால் மாட்டை மட்டும் சாப்பிட மாட்டேன் என்று கூறுகிறார்கள் ஆனால் அவர்கள் கடவுள் என்று வழிபடும் மாட்டையை அற்ப காசுக்கு விற்கிறார்கள்.

இதில் மாட்டை தெய்வமாக பார்ப்பவனுக்கும் மாட்டு கறியை உண்பவனுக்கும் ஒரே வித்தியாசம் தான்.. நீ காசு வாங்கிக்கொண்டு மாட்டை விற்கிறாய்.. நான் காசு கொடுத்து அந்த மாட்டுக் கறியை வாங்குகிறேன்.. இது உணர்ந்தால் அறிவு பெறலாம்.

ஆதலால் ஒன்று மாட்டை சாப்பிட மாட்டேன் என்றால் வேறு எந்த அசைவ உணவுகளையும் வேறு எந்த உயிரினங்களையும் அடித்து சாப்பிடக்கூடாது.. பெரிய அயோக்கியர்கள் மாதிரி பேசுவார்கள்; ஆனால் அவர்கள் முட்டாள் தனமான செயல்களை செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது..

0 Comments