கொய்யாப்பழம் தமிழகம் முழுக்க பல இடங்களில் பயிரிடப்படும் ஒரு பழவகை ஆகும். கொய்யா பழத்தில் நிறைய சத்து வகைகளை உள்ளது. இந்த பதிவில் கொய்யா பழத்தின் பயிரிடும் முறையையும் அதன் பயன்களையும் பற்றி பார்ப்போம்.
கொய்யாப் பழத்தின் அறிவியல் பெயர் : சைடியம் குஜாவா
அடங்கியிருக்கும் சத்து : வைட்டமின்-சி
கொய்யாப்பழம் நார்ச்சத்து அதிகம் நிறைந்தது. எனவே குடல் செரிமானத்திற்கு பெரிதளவு பங்கு வகிக்கிறது. கொய்யாப்பழம் வயிற்றுப்புண் மற்றும் குடல்புண் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
கொய்யா பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து சாப்பிடும் அற்புதமான பழமாகும். இதிலே நாட்டு கொய்யா மரபணு மாற்றிய கொய்யா என இரண்டு வகைகள் உள்ளது.
இதில் மரபணு மாற்றிய கொய்யாக்களே தற்போது அதிகமாக நடைமுறையில் இருக்கிறது. அந்த கொய்யா மரக்கன்றுகளை தான் நிறைய பேர் விற்பனை செய்து வருகிறார்கள் மக்களும் அதை வாங்கி நட்டு கொண்டு இருக்கிறார்கள்.
உண்மையில் மரபணு மாற்றப்பட்ட கொய்யாக்களின் பழங்கள் உடனடியாக வைத்தாலும் அதில் நிறைய ஆபத்துகள் இருக்கிறது.
ஆதலால் நாட்டு மர கொய்யாக்கள் தான் மக்கள் சாப்பிட வேண்டும். நாட்டு மர கொய்யா மரபணு மாற்றிய கொய்யா மரங்களை எப்படி கண்டுபிடிப்பது? என்று மக்கள் கேட்கலாம்.
அது மிக எளிது கொய்யா மரக்கன்று மிகச் சிறியதாக இருக்கும் போது பழங்கள் வைக்க ஆரம்பித்து விட்டால் அது மரபணு மாற்றிய கொய்யா மரம். ஆனால் கொய்யா மரம் உயரமாக வளர்ந்து ஒன்று இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மரத்தில் கொய்யா பழங்கள் காய்க்க ஆரம்பித்தால் அது நாட்டு கொய்யா மரம் என்று கண்டுபிடித்து விடலாம்.
"பொறுமையே பெருமை" "பொறுத்தார் பூமி ஆள்வார்" போன்ற பழமொழிக்கேற்ப பொறுமையாக காய்க்கும் பழங்களுக்கு தான் சுவையும் மகத்துவமும் அதிகம். ஆதலால் மக்கள் மரபணு மாற்றிய கொய்யாக்களை சாப்பிடாமல் நாட்டு கொய்யா பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.
கொய்யா பழத்தில் வைட்டமின்-சி( Vitamin-C ) சத்து அதிகம் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் சி உடலில் இயற்கையான பாதுகாப்புகளை அதிகரிக்க உதவும் ஒரு ஊட்டச்சத்து. எனவே இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களிடமிருந்து பாதுகாக்க பயன்படுகிறது.
இந்த கொய்யாப் பழத்தின் விதை, தோல் உள்பட பழம் முழுவதையும் சாப்பிடலாம். மேலும் கொய்யா பழத்தின் இலைகளை பயன்படுத்தி தேநீர் தயாரித்து கூட சாப்பிடலாம்.
இந்த கொய்யாப் பழத்தின் சதை அதாவது பழத்தின் உட்பகுதி சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு நிறங்களில் காணப்படுகிறது.
தற்போது கொய்யாப்பழத்தில் நிறைய ஹைபிரேட் வகைகள் வந்துவிட்டது இந்த ஹைபிரேட் கொய்யாக்கள் மிகப்பெரியதாக இருக்கும் ஆனால் சுவை அவ்வளவாக இருக்காது இதெல்லாம் வியாபாரம் செய்யும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டவை.ஆனால் நாட்டு கொய்யாவின் சுவைக்கு ஹைபிரேடு கொய்யா ஈடாகாது.
ஹைபிரேட் கொய்யா மரத்தை எளிதாக அடையாளம் கண்டு விடலாம் ஏனென்றால் இது அளவில் சிறியதாக தான் இருக்கும் ஆனால் உடனே காய் வைத்து விடும். எப்படி ஹைபிரேட் ஒட்டு மாம்பழ மரங்கள் காய்கிறதோ அதேபோலத்தான் ஹைபிரேட் கொய்யாவும் குட்டியாக இருக்கும் போது கொலை கொலையாக கொய்யா பழங்கள் வைத்து விடும். அதேப்போல நாட்டு கொய்யா மரத்தை எளிதாக அடையாளம் கண்டு விடலாம். ஏனென்றால் இந்த நாட்டு கொய்யா மரங்கள் குட்டியாக இருக்கும் போதே காய் வைக்காது; அடர்ந்து நீளமாக உயரமாக வளர்ந்த பிறகு தான் காய்க்கும். நாட்டு கொய்யா மரங்கள் வளருவதற்கு இரண்டு வருடங்கள் ஆகிவிடலாம். அதற்குப் பின்பு பருவ காலங்களில் கொய்யா பழங்கள் காய்த்து தொங்கும்.
நாட்டு கொய்யா மரங்களின் பழங்கள் அளவில் சிறியதாக தன் இருக்கும்; ஆனால் சுவை அற்புதமாக இருக்கும். உங்கள் ஊரில் நாட்டு கொய்யா மரம் இருந்தால் கொய்யா மரத்தின் பழங்களை சாப்பிட்டு பார்த்து அதன் சுவையை நமது கருத்துப் பக்கத்தில் தெரிவிக்கவும்.
கொய்யா மரம் வளர்க்கும் முறை :
கொய்யா மரம் எளிதாக யார் வேண்டுமானாலும் வளர்க்கலாம். அதற்கு விதைகள் இருந்தால் போதும். கொய்யா பழத்தில் இருக்கும் விதைகளை எடுத்து நட முடியாது. அப்படி நட்டாலும் முளைக்காமல் போவதற்கு நிறைய வாய்ப்புகள் கண்டிப்பாக முளைக்காது என்று கூட சொல்லலாம். ஏனென்றால் விதைகள் மிகச் சிறியதாக இருக்கும் விதைகளை தனியாக பிரித்தெடுக்க வேண்டும் என்றால் பழத்தில் கையை விட்டு பொறுக்கி எடுக்க வேண்டும். அதற்குள் பழம் வழுவழுப்பான சதை பகுதியுடன் இருப்பதால் கண்டிப்பாக வழுக்கும்..
ஆதலால் கொய்யா மரம் நடுவதற்கு அழகிய கொய்யா பழங்களை தேர்ந்தெடுத்து மண்ணில் ஒரு குழி தோண்டி அந்த பழத்தை முழுதாக போட்டு விட வேண்டும். ஒரு பழத்தில் எப்படியும் 20 30 விதைகள் இருக்கும். அந்த விதைகளில் ஏதாவது ஒன்றாவது முளைக்காமல் போகாது கண்டிப்பாக முளைக்கும்.
முளைத்த கொய்யா மரக்கன்றை நன்றாக தண்ணீர் விட்டு இயற்கை உரங்களான ஆடு மற்றும் மாடுகளின் காய்ந்த சாணங்களை செடிகளுக்கு இட்டு நன்கு வளர்க்க வேண்டும்.



0 Comments